தமிழ் சினிமாவில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமாகி பல லட்சம் ரசிகர்கள் சேர்த்தவர் தான் நடிகை இலியானா. மேலும் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்து இவருக்கு என்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தமிழகத்தில் பிரபலமானார்.
குறிப்பாக இவரது மெல்லிடையால் இளைஞர்கர்களின் மனதை கொள்ளையடித்தவர். தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பாலிவுட்டிற்கு சென்றார். பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இதனிடையே ஆஸ்திரேலிய போட்டோகிராபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் ஒரு சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் சோகத்தின் பிடியில் இருந்தவர், தனது காதலனை மறக்க மனநல சிகிச்சை பெற்றார். சில நாட்கள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார் நடிகை இலியானா.
தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நடிகை இலியானா நடிப்பு மற்றும் ஹாட்டான போட்டோஷூட்டில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலியானா, தான் அணிந்த மேல் ஆடையில் பட்டன் எதுவும் போடாமல் மிக மோசமான வகையில் கவர்ச்சியாக வந்திருந்தார்.
மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் முதன் முறையாக தனது பிரேக் அப் குறித்து முன்னணி பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் தேவை இல்லை என முடிவான அதுகுறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. எனது காதல் தோல்வி எனக்கு ஒரு நல்ல அனுபவம் என கூறியுள்ளார். மேலும் காதல் தோல்வி ஏற்பட்ட போது உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், ஒரு நாளுக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஓய்வு அவசியம் என தோன்றியதால் தான் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தியிருந்தேன். வீட்டிலேயே இருந்ததால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். உடல் எடையை குறைக்க ஜிம் செல்ல வேண்டும் என நினைத்தேன், ஆனால் ஜிம்மில் இருந்து வெளியில் வரும் போது புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து விடுவார்கள்.
அதனாலேயே ஜிம் செல்வதை பலமுறை தவிர்த்தேன். இதனால் என்னை நானே தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார். எனது நிலையை பார்த்தவர்கள் என்னை மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். உன் மீது மற்றவர்கள் கூறும் புகார்கள் உண்மையென்றால் ஏற்றுக்கொள், அப்போதுதான் பிரச்னையிலிருந்து நீ வெளியில் வந்து உன்னை நீயே அறிய முடியும் என மருத்துவர் அறிவுறுத்தினார்.
அவர் சொன்னது உண்மை. என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொண்ட பிறகு எனக்குள் இருந்து என்னையே நான் கண்டுபிடித்தேன். ஒரு காதலன் இருப்பது அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், அதைவிட நமது மனநிலை மிக முக்கியம் என கூறிய இலியானா, காதல் தோல்வி குறித்து நான் வருத்தப்படவில்லை என கூறினார்.
இது போன்ற சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும்போது தான், உங்கள் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் மதிப்பை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுதான் எனக்கும் நடந்தது. எனக்கு எனது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் ஆதரவு அளித்தனர்.
எனது தனிப்பட்ட வாழ்க்கையை புனிதமானதாக கருதுவதால், “வதந்திகளின் தட்டில் உணவாக” ஒருபோதும் தான் விரும்பவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நான் மீண்டும் காதலுக்கு தயாரில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!