தொலைந்து போன ஸ்மார்ட்போன்களைக் கண்டுபிடிக்க புதிய வழி.. அரசு திட்டம் அறிமுகம்!

தொலைந்து போன ஸ்மார்ட்போன்களைக் கண்டுபிடிக்க புதிய வழி..  அரசு திட்டம் அறிமுகம்!

உங்களுடைய செல்போன் தொலைந்துவிட்டால் அதை பிளாக் செய்யும் வசதியை மத்திய தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

வருடா வரும் அறிமுகம் ஆகும் ஸ்மார்ட் போன்களை வாங்கி பயன்படுத்துவது பலருக்கும் ஃபேஷனாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதனை திருடுவதும் அதிகரித்துவிட்டது. 

இந்த ஸ்மார்ட் போன் திருட்டு பற்றி போலீசில் புகார் கொடுத்தால் கண்டுபிடித்துக் கொடுப்பது என்பது அரிதான விஷயமாக உள்ளது. ஸ்மார்ட்  போன் தொலைந்துவிட்டால் புகார் கொடுத்ததோடு போனை மறந்துவிட வேண்டும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.

twitter

இந்நிலையில் திருடுபோன ஸ்மார்ட் போன்களை கண்டறியும் டிராக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.ஒருவரின் செல்போன் தொலைந்துவிட்டால் முதலில் அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பிறகு https://ceir.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று எஃப்ஐஆர் தகவல்களையும், தனிநபர் தகவல்களையும், தொலைந்து போன செல்போனின் IMEI நம்பரையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த பின்னர் உங்களுக்கான பிரத்யேக எண் உங்களுக்கு வழங்கப்படும்.

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

அந்த எண்ணை கொண்டு உங்களுடைய செல்போன் எங்கு இருக்கிறது என்று நீங்கள் டிராக் செய்ய முடியும். இந்த வசதி முதல் கட்டமாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது டெல்லியில் உள்ள மக்கள் அரசின் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தித் திருடப்பட்ட ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை அறிந்துகொள்ளலாம். 

காவல்நிலைய படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டையைச் சேர்த்து பதிவேற்றம் செய்து தொலைந்த ஸ்மார்ட்போனை (mobile phones) நீங்களே எந்த இடத்தில் உள்ளது என்று கண்டறிய முடியும்.

twitter

மேலும் மொபைல் போனை யாரும் பயன்படுத்த முடியாதபடி அதை பிளாக் செய்யவும், மொபைல் (mobile phones) கிடைத்த பிறகு அன்பிளாக் செய்யவும் முடியும். இதனால்  திருடியவர் உங்கள் மொபைல் போனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. 

விரைவில் இந்தியா முழுக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது. 

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

இந்தியத் தொலைத் தொடர்பு அமைச்சகம் முதல் முறையாக இந்த புதிய முயற்சியுடன் முன் வந்துள்ளது. தொலைந்த அல்லது திருடு போன ஸ்மார்ட்போன்களை அரசின் வலைத்தளம் மூலம் ட்ராக் செய்துகொள்ளலாம் என முன்பே அறிவித்திருந்தது.

ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்தாமல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் அமைதி காத்து வந்தது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'இந்த தொழில்நுட்பம் குற்றவாளிகள் திருட்டு செல்போன்களை பயன்படுத்தி குற்றம் செய்வதை தடுக்கவும், மொபைல் போன்களின் பாதுகாப்புக்காகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

twitter

உங்கள் செல்போன் தொலைந்துபோன பிறகு இந்த தொழில்நுட்பம் மூலம் பிளாக் செய்துவிட்டால், உங்கள் போனை (mobile phones) வேறு யாராலும் பயன்படுத்த முடியாது. பின்னர் உங்கள் போன் டிராக் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்' என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை திருடியவர் எந்த வகையிலும் உங்கள் தகவல்களை திருடாமல், உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும் உங்கள் தொலைந்த ஸ்மார்ட்போனின் லைவ் லொகேஷன் எங்குள்ளது என்றும் உங்களால் ட்ராக் செய்யவும் முடியும். இதனால் இனி ஸ்மார்ட்போன்களின் திருட்டுகள் கட்டுக்குள் வைக்கப்படும்.  

சேலையில் க்யூட் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பேபி அனிகா... கடும் வியப்பில் ரசிகர்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!