logo
ADVERTISEMENT
home / Celebrity Life
2019ம் ஆண்டு இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள்.. ஃபோர்ப்ஸ் இதழினின் பட்டியல் வெளியீடு!

2019ம் ஆண்டு இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள்.. ஃபோர்ப்ஸ் இதழினின் பட்டியல் வெளியீடு!

ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஃபோர்ப்ஸ் இதழின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

பிரபலங்களின் ஆண்டு வருமானம், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து இந்த பட்டியல் (forbes) கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான டாப் 100 பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்தாண்டுக்கான பட்டியலில்  ரூ.252.72 கோடி வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2ம் இடமும்,  கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த சல்மான் கான் தற்போது 3ம் இடமும் பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT

twitter

நடிகர் அமித்தாப் பச்சன், கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக்கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சல்மான் இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார். பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் பத்து இடங்களில் வந்துள்ளனர்.

இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழக திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

மேலும் படிக்க – தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு ! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !

ADVERTISEMENT

கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு 13வது இடத்தை பிடித்துள்ளார். அவரின் வருமானம் ரூ. 100 கோடி ஆகும். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 16வது இடத்தில் உள்ளார். இயக்குநர் ஷங்கர் 55வது இடத்திலும், கமல் ஹாஸன் 56வது இடத்திலும், தனுஷ் 64வது இடத்திலும், இயக்குநர்கள் சிவா 80வது இடத்திலும், கார்த்திக் சுப்புராஜ் 84வது இடத்திலும் (forbes) உள்ளனர்.

twitter

மலையாள நடிகர் மோகன்லால் ரூ. 64.5 கோடி வருமானத்துடன் 27வது இடத்திலும், ரூ. 35 கோடியுடன் பிரபாஸ் 44வது இடத்திலும், ரூ. 30 கோடியுடன் விஜய் 47வது இடத்திலும் உள்ளனர். 

ADVERTISEMENT

ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த ஆண்டு 26வது இடத்தில் இருந்த விஜய் இந்த ஆண்டு 21 இடங்கள் பின் தங்கியுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலிலேயே இல்லாத அஜித் இந்த ஆண்டு 52வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க – சரவணபவன் அண்ணாச்சியை எதிர்த்து நீதி கேட்ட ஜீவஜோதி – இனி தீவிர அரசியல்வாதியும் கூட !

கேரள திரைப்படத்துறைய சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில், நடிகர் மோகன்லால் 27வது இடத்தையும், நடிகர் மம்மூட்டி 62வது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகர் பிரபாஸ் 44வது இடத்தையும், நடிகர் மகேஷ் பாபு 54வது இடத்தையும் (forbes) பிடித்துள்ளனர்.

 

ADVERTISEMENT

டாப் 100 பட்டியலில் தமிழக பிரபலங்கள்: 

நடிகர் ரஜினிகாந்த் – 13 வது இடம் (ரூ.100 கோடி ஆண்டு வருமானம்)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் – 16 வது இடம் (ரூ.94.8 கோடி ஆண்டு வருமானம்)
நடிகர் விஜய் – 47வது இடம் (ரூ.30 கோடி ஆண்டு வருமானம்)
நடிகர் அஜித்குமார் – 52வதுஇடம் (ரூ.40.5 கோடி ஆண்டு வருமானம்)
நடிகர் இயக்குநர் சங்கர் – 55வது இடம் (ரூ.31.5 கோடி ஆண்டு வருமானம்)
நடிகர் கமல்ஹாசன் – 56வது இடம் (ரூ.34 கோடி ஆண்டு வருமானம்)
நடிகர் தனுஷ் – 64வது இடம் (ரூ.31.75 கோடி ஆண்டு வருமானம்)
இயக்குநர் சிறுத்தை சிவா – 80வது இடம் (ரூ.12.17 கோடி ஆண்டு வருமானம்)
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் – 84வது இடம் (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்).

மேலும் படிக்க – மாலத்தீவு நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
23 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT