இது ரஜினியின் தர்பார்! வெளியானது பிரமாண்ட ஃபர்ஸ்ட் லுக்...

இது ரஜினியின் தர்பார்! வெளியானது பிரமாண்ட ஃபர்ஸ்ட் லுக்...

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி(rajinikanth) நடிக்கப்போகும் அடுத்தப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு(rajinikanth) ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். தர்பார் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று (ஏப்ரல் 9) காலை 8.30 மணியளவில் வெளியானது.


'பேட்ட',  'சர்கார்' படங்களுக்கு முன்பே ரஜினி(rajinikanth) - முருகதாஸ் காம்போ பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில், இருவருக்கும் சரியான கதை ஏதும் அமையவில்லை. இந்நிலையில், '2.0' எடுத்த லைகா நிறுவனம் தயாரிக்க, இருவரும் இணைய உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், '27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை நான் ஒளிப்பதிவு செய்யப்போகிறேன்' என்றதன் மூலமே படம் அதிகாரபூர்வமாக நடக்கிறது என்று உறுதியானது.


பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தர்பார் ஃபஸ்ட் லுக்கை கொண்டாடி வருகிறார்கள். போஸ்டரை பார்க்கும் போது ரஜினி(rajinikanth) போலீஸாக நடிப்பது உறுதியாகிறது. மேலும் தர்பார் ஃபஸ்ட் லுக்கில் நாம் கவனிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் உள்ளன, இதோ அந்த விவரங்கள்.


தர்பார் போஸ்டரில் ரஜினிக்கு(rajinikanth) பின் இரண்டு துப்பாக்கிகளும், ஒரு கைவிலங்கு திறந்த நிலையிலும் உள்ளது. போலீஸ் நாய், போலீஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் பேட்ஜ் இடம் பெற்றுள்ளன.


அதேபோல், பின்னணியில் ஒரு மேப்பும், கட்டிடமும் இடம் பெறுகிறது. குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப், அதோடு மும்பை என்ற வார்த்தையும் தலைகீழாக எழுதியுள்ளனர்.


நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா, நீங்களே முடிவு பண்ணுங்க என்ற பஞ்ச் வசனம் உள்ளது.


நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் ரஜினி(rajinikanth) தர்பார் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.


முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கும் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ,மும்பையில் விரைவில் தொடங்க உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா கஜினி படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க உள்ளார். 


வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், படக்குழு அதை மறுத்துள்ளனர்.  முக்கியமான கேரக்டரில் நிவேதா தாமஸை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.  தர்பார் படத்தைப் பற்றி உண்மையும் புரளியுமாக பல செய்திகள் வந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸானது.   தேர்தல் சீசன்ல, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த்(rajinikanth) ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட்டாய் அமைந்துள்ளது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!


பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான எளிய உடற்பயிற்சிகள்


அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube, Twitter


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo