இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டில் பரபரப்பான முறையில் இன்று வாக்கு பதிவு நடந்து வருகிறது. ஒரு விரல் புரட்சியை தமிழகமெங்கும் தற்போது நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள் வாக்காளர்கள். (votes)
இதில் பிரபலங்களும் தங்கள் கடமையை நடத்தி முடித்து புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் பொறுப்பு குறித்து மகிழ்ந்திருக்கின்றனர்.
அரசியலில் எதிர்பார்ப்புகளை கிளப்பும் ரஜினிகாந்த் அமைதியான முறையில் அதிகம் பேசாமல் தனது வாக்கை பதிவு செய்தார்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து தனது வாக்கை பதிவு செய்தார். (அக்ஷரா எங்கே சார்!)
திருவான்மியூரில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் எப்போதும் போல எளிமையாக காலை 7 மணிக்கே வந்து ஓட்டு போட்டு சென்றிருக்கிறார்.
ஒரு விரல் புரட்சியை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜய் சாலிகிராமத்தில் சர்க்காரை நிர்ணயிக்கும் வாக்கை பதிவு செய்திருக்கிறார். தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து ஓட்டு போட்டிருக்கிறார். அதில் ஒரு பெண் குழந்தை விஜயை கண்டதும் ஓடி வந்து விட அவரை அவரது அப்பா அம்மாவிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் விஜய்.
உங்க அம்மா அப்பா எங்கம்மா ? pic.twitter.com/WGVcrzfPBg
— T V A (@tvaoffl) April 18, 2019
கோலிவுட்டின் தேவதை த்ரிஷா தனது அம்மாவுடன் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதை போலவே நடிகை ரெஜினா கசான்ட்ரா தனது வாக்கு பதிவினை செய்து முடித்தார்.
தர்பார் படப்பிடிப்பை தேர்தலுக்காக ஒரு நாள் ரத்து செய்த ஏ ஆர் முருகதாஸ் , நயன்தாரா குழுவினர் இன்று அவரவர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக வந்து ஓட்டு போட்டனர். (ஐஸ்வர்யாவை காணவில்லை)
தனுஷ் தனது எளிமையான தமிழ்நாட்டு உடையுடன் அடக்கமாக வரிசையில் நின்றபடி தனது வாக்கினை பதிவு செய்தார். (அந்த அடக்கம் அந்த பொறுமை .. அதுதான் எங்களை அப்சஸ் ஆக்குகிறது தனுஷ்!)
விஜய் சேதுபதி எப்போதும் போல யதார்த்தமாக வந்து ஓட்டு போட்டார். அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களை ஏமாற்றாமல் வெயிலை பொருட்படுத்தாமல் புகைப்படம் எடுத்து கொண்டார்.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தனர்.
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!#Elections2019 #GoVoteTN @ECISVEEP #ECISVEEP @TNelectionsCEO pic.twitter.com/AcABcHc8zi
— Suriya Sivakumar (@Suriya_offl) April 18, 2019
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் வந்து தனது வாக்குகளை பதிவு செய்தார். (உங்கள் மெலடிகளை மிஸ் செய்கிறோம் நடிகர் ஜிவிபி !)
காலையில் இருந்து ஓட்டு போட முடியாமல் திண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு ஒருவழியாக ஓட்டு போட வாய்ப்பளித்தனர். அவரும் அப்பாடா என்று விரலில் மையுடன் போஸ் கொடுத்தார்.
நுங்கம்பாக்கத்தில் எந்த வரிசையில் நிற்பது என்று அலைந்து ஒருவழியாக தனது வரிசையை கண்டுபிடித்து தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் சத்யராஜ்.
இவர்கள் தவிர நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். நடிகர் லாகவா லாரன்ஸ் தனது அம்மாவுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
விக்ரம் , நாசர், பிரகாஷ் ராஜ் போன்றவர்களும் தாங்கள் ஜனநாயக கடமை நிறைவேற்றியதை புகைப்படம் எடுத்துள்ளனர்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.