பாலிவுட்டின் தேவதை தீபிகா படுகோன் சமீபத்தில் காதலர் ரன்வீரைக் கரம் பிடித்தார். அதன் பின் மீண்டும் நடிக்கத் துவங்கிய தீபிகா தனது அடுத்த படமான Chhapaak இல் இருந்து தனது பர்ஸ்ட் லுக் கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
மற்றவர் காலணியில் தன்னைப் பொருத்தி பார்த்து அவர்கள் வாழ்வை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் பாலிவுட் முன்னோடி. அந்த முறையில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணான லக்ஷ்மி அகர்வால் எனும் பெண்ணின் கதையும் தற்போது படமாக்கப்படுகிறது.
15 வயதில் தன்னிடம் சொல்லபட்ட காதலை நிராகரித்த பாவத்திற்காக லட்சுமி அகர்வால் எனும் அந்தக் குழந்தை அமில வீச்சிற்கு ஆளான அந்த கொடுமையான உண்மைக் கதையை யாராலும் மறந்திருக்க முடியாது.
இனி வரும் யாரும் இதனை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே Chhapaak எனும் திரைப்படத்தை இயக்குகிறார் மேக்நா குல்ஸார். பாலிவுட்டில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் இந்த திரைப்படத்தில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.
இதில்தான் தனது கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் கை தீபிகா (deepika) ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதுவரை அழகு பதுமையாக பார்த்து வந்த தீபிகா படுகோனா இவர் என்று நினைக்கும் அளவிற்கு அவரது லுக் இருக்கிறது.
A character that will stay with me forever…#Malti
Shoot begins today!#Chhapaak
Releasing-10th January, 2020.@meghnagulzar @foxstarhindi @masseysahib pic.twitter.com/EdmbpjzSJo
— Deepika Padukone (@deepikapadukone) March 25, 2019
இதில் நிஜமான லக்ஷ்மி எனும் பெயரைப் பயன்படுத்தாமல் மாலதி எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். மாலதியாக மாறிய தீபிகா படுகோனின் படங்கள் நம்மை அசர வைக்கின்றன.
இந்த திரைப்படம் பற்றி இயக்குனர் மேக்நா குல்ஸார் கூறுகையில் இதுவரை பார்த்திராத தீபிகாவை நீங்கள் இந்த திரைப்படத்தில் பார்க்கலாம் என்று அழுத்தமாக கூறுகிறார்.
மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாசியும் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு தீபிகா படுகோனும் தயாரிப்பாளர் ஆக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காதலை மறுத்ததற்காக முகத்தை சிதைத்த கொடூரம் லக்ஷ்மியோடு மற்றும் நின்று விடவில்லை. எத்தனையோ ஆயிரம் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு முடங்கி இருக்கின்றனர். சர்வ சாதாரணமாக அமிலங்களை விற்கும் நிலை மாற வேண்டும் என்றும் பல்வேறு சமூக சேவையிலும் ஈடுபட்ட லக்ஷ்மி அலோக் தீக்ஷித்தை காதலித்தார். திருமணம் செய்தால் முகத்தின் அழகு பற்றி வருபவர்கள் குறை கூறலாம் என்பதால் லிவிங் டு கெதர் முறையில் இருவரும் வாழ்ந்து தற்போது ஒரு அழகிய குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் லக்ஷ்மி.
தன்னம்பிக்கை பெண்களின் முன்னுதாரணமான லக்ஷ்மியின் வாழ்க்கையைப் படமாக்குவது சமூகத்தில் அடுத்த தலைமுறைக்கு ஒரு தெளிவைத் தரும் என்பது உறுதி.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.