தனது ஸ்வீட் ஹார்ட் ஹீரோவுடன் 'ரொமாண்டிக்கில்' DD !

தனது ஸ்வீட் ஹார்ட் ஹீரோவுடன் 'ரொமாண்டிக்கில்' DD !

கோலிவுட்டின் பிரபல மற்றும் சிறந்த தொகுப்பாளினி யார் என்று கேட்டால் அனைவரும் கை காட்டுவது நம் DD என்கிற திவ்யதர்ஷினியைத் தான்.


சின்னத்திரையில் மட்டும் அல்லாமல் பெரிய திரையிலும் பெரும்பாலோர் இவரின் ரசிகர்கள். தனது நேர்த்தியான மற்றும் படபடப்பான பேச்சால் அனைவரையும் கவர்பவர் DD.


தன்னை பற்றி பல்வேறு சர்ச்சைகள் விமர்சனங்கள் தொடர்ந்து பேசப்பட்டாலும் அதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தனது வேலையில் கவனம் செலுத்துபவர் DD.இவரது காஃபீ வித் DD யும் சரி அன்புடன் DD யும் சரி இவரது தனிப்பட்ட திறமைகளை தனித்துவத்தை வெளிக் கொணர்ந்தவை. சமீபத்தில்தான் இவர் விஜய் டெலிவிஷன் உடனான 20 வருட பந்தத்தை கொண்டாடினார்.


எப்போதும் இளமையாகவே காணப்படும் DD சமீபத்தில் நடித்த சர்வம் தாள மயம் படத்தில் தனி கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தெலுங்கின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இயக்குனர் மகன் ஆகாஷ் பூரி இதில் ஹீரோவாக நடிக்கிறார். ரொமான்டிக் என்ற இந்த படத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்திற்கு தயாரிப்பும் பூரி ஜெகன்நாத் டாக்கீஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் என்று தயாரிப்பும் இவரேதான்.


இந்தப் படத்தை  இயக்குபவர் அனில் பாதுரி. இதில் DD முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அவரின் ட்வீட் மூலம் தெரிய வருகிறது. 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.