தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் காலமானார்

தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் காலமானார்

தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் (crazymohan) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் (crazymohan). 66 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். அடிப்படையில் பொறியாளராக திகழ்ந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார்.


கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்த படங்கள் எல்லாமே கமல் ஹாசன் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எப்போதும், நகைச்சுவையாகவே வசனம் எழுதுவது இவரது சிறப்பம்சம் (crazymohan). இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், நான் ஈ, அருணாச்சலம், தெனாலி, சதீலீலாவதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இவரது நிலமை கவலைக்கிடம் என்ற போதிலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் வரும் நிலையில், கிரேசி மோகன் (crazymohan) மறைவு கோலிவுட்டில் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ராட்சசன் பட பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் (81) காலமானார்.


எந்த வித சினிமா பின்புலமும் இன்றி தன்னுடைய எழுத்தாலும் நகைச்சுவை திறனாலும் வாழ்க்கையில் முன்னேரி சினிமாவில் சாதித்தவர். தனது முதிர் வயது காலத்திலும் அநேக சினிமா ஆர்வலர்களுக்கு தனது அனுபவ பாடத்தை பாடமாக கற்றுக் கொடுத்தவர் இன்று நம்மோடு இல்லை. மன்னுலகம் மறைந்து விண்ணுலகம் சென்றுவிட்ட கிரேசி மோகனிற்கு (crazymohan) ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கின்றது POPxo இணையதளம்.ஆண் நண்பரிடம் செக்ஸ் விருப்பத்தை வெளிபப்படுத்த உதவும் 10 அட்டகாசமான மீம்ஸ்கள்


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !


வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!


புகைப்படங்கள் ஆதாரம் டிவிட்டர்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.