2019ல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்.. ஒரு முழு பார்வை!

2019ல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்.. ஒரு முழு பார்வை!

காலம் காலமாக சினிமாவில் காதல் திருமணம் நடந்து வருகிறது. அதோடு திருமணத்திற்குப் பிறகு விவாகரத்தும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த 2019ம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள், நடிகர்களின் மகள்கள் மகன்கள், நடிகைகளின் மகள்கள், மகன்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காண்போம்.

நடிகர் ஆர்யா - சாயிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சாயிஷா தமிழில் வன மகன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

twitter

செளந்தர்யா ரஜினி - விசாகன்

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் (married) செய்துகொண்டார்.

மேலும் படிக்க - அழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்!

twitter

வைஷ்ணவி - அஞ்சான்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் வைஷ்ணவி பிரசாத். எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர், ஆர்ஜேவாக பணி புரிந்து வந்தார். கடந்த 3 வருடங்களாக அஞ்சான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வைஷ்ணவி மற்றும் அஞ்சான் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வைஷ்ணவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர்களது திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

twitter

ஆல்யா மானசா – சஞ்சீவ்

தனியார் டிவியில் புகழ்பெற்ற ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும், செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானச, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள். இது தொடர்பாக சஞ்சீவ் அவரது ட்விட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். 

மேலும் படிக்க - சீரகத்தை கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

twitter

இயக்குநர் ஏ.எல்.விஜய் - ஐஸ்வர்யா

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்பதித்தார் ஏ.எல்.விஜய். இவருக்கும் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இது இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அமலாபாலுடன் முதல் திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் (married) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

twitter

குறளரசன் - நபீலா அஹமத்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரும் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனை தொடர்ந்து குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர்.பின்னர் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

மேலும் படிக்க - சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை!

twitter

அபிநயா - நரேஷ் கார்த்தி

பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. தொழிலதிபர் நரேஷ் கார்த்திக்குடன் விமர்சையாக திருமண நிகழ்ச்சிகள் நடந்தது. நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் ஆவார். எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் இரு வீட்டு குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

twitter

மதுமிதா – மோசஸ் ஜோயல்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் மதுமிதா. தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் அவரின் உறவினரான மோசஸ் ஜோயலுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜேபி ஹோட்டலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மதுமிதாவை திருமணம் (married) செய்துள்ள மோசஸ் கோலிவுட்டில் உதவி இயக்குனராக உள்ளார். 

twitter

நடிகர் சதீஷ் - சிந்து

மெரினா படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷின் திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சிக்சர் பட இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.

twitter

மைனா நந்தினி - யோகேஷ்வரன்

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இந்நிலையில் சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்னதாக கார்த்திகேயன் என்பவருடன் திருமணமான நிலையில் சில பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.  

twitter

அர்ஷிதா ஷெட்டி - மணிஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவை சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்கின்றனர். நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter

அனிதா சம்பத் - பிரபாகரன்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பல இளம் ரசிகர்களை கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் இவருக்கென ஆர்மிகள் உள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . பின்னர் சூர்யா நடிப்பில்  காப்பான் படத்தில் நடித்தார். இந்நிலையில் திடீரென தனது காதலரான பிரபாகரன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தனது அனிதா சம்பத் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

twitter

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!