கவின் - லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..

கவின் - லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..

இந்த சீசன் 3 பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் ஓடிய திரைப்படம் போல வெற்றிகரமானது. அதற்கு காரணம் அந்தக் குழு சலித்தெடுத்து உள்ளே போட்ட போட்டியாளர்கள்தான் என்பதை சலிக்காமல் கூறிக் கொண்டே இருக்கிறேன்.

அதில் எல்லோருடைய ப்ரியத்தையும் ஒரு சேர பெற்றவர் இயக்குனர் சேரன் (cheran) . எல்லோருக்கும் சண்டைக்காரியாக இருந்த வனிதா கூட சேரன் மீது பாசம் வைக்கும் அளவிற்கு நேர்மையாகவும் நடுநிலைத்தன்மையோடும் நடந்து கொண்டவர் சேரன்.

சிறு வயதுக்காரர்களால் திரும்ப திரும்ப ஒதுக்கப்பட்டுள்ள அவமானப்படுத்தப்பட்டும் வந்த சேரன் நமக்கெல்லாம் அவமானங்களை எப்படி பொறுமையாக கையாளலாம் என்பதை சொல்லி கொடுத்தார்.

Hotstar

10 வருடங்களாக தகப்பனை பார்க்காமலே வளர்ந்த மகளாக லாஸ்லியா இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர் தன்னிடம் இருந்த தந்தை பாசத்தை லாஸ்லியா உடன் பகிர்ந்து கொள்ள நினைத்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தன்னை மட்டுமே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் கவினுக்கு சேரன் உடன் லாஸ்லியா உறவுமுறைக்குள் நுழைவது பிடிக்கவில்லை.

இதனை நேரடியாக லாஸ்லியாவிடம் கூறினால் தன்னுடைய உண்மை குணம் வெளிப்பட்டு விடும் என்பதற்காக ஜாடையாகவே பல விஷயங்களை சொல்லி லாஸ்லியா மனதில் சேரன் மீதான அன்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போக செய்தார்.

முன்பே ஒருவருடன் 3 வருட உறவில் இருந்தது உள்பட பிக் பாஸ் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் என வரிசையில் நான்காவது நபராக கவினால் காதலிக்கப்பட்ட நபர்தான் லாஸ்லியா. இதனை அனுபவஸ்தர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் 24 வயதான லாஸ்லியாவிற்கு இது புரிய சில வருடங்களாகும்.

Hotstar

இந்தக் காதலை திடீரென கவின் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். வளர்த்தனர். இதனால் TRB ரேட்டிங் அதிகமாகவே சேனலும் அதனை மேலும் ஊட்டி வளர்த்தது. ட்விட்டரை ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு கவின் ரசிகர்கள் அல்லது கவின் ஓட்டு போட பணம் தந்த கார்ப்பரேட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததால்.. இப்போது வரை அந்த காதல் காவியக்காதலாகவே பார்க்கப்படுகிறது.

லாஸ்லியாவிடம் ஒரு நியாயம் எப்போதும் தென்படுகிறது. கவின் தன்னோடு நெருங்கி பழக தன்னுடைய செயல்களும் காரணம் என்பதை அவர் ஒரு கட்டத்தில் வீட்டில் ஷெரினிடம் ஒப்பு கொண்டார். என்னோட பேச பேச அவன் மாறறான்னா அது ஏதோ ஒரு விஷயம் நான் பேசறது அவனை மாத்துது அப்படின்னுதானே அர்த்தம் என்று லாஸ்லியா ஷெரினிடம் பேசியிருந்தார்.

இந்த வயதில் இத்தனை நியாயமாக யோசிக்கும் லாஸ்லியாவிற்கு 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் வந்து பார்த்த பிறகு இன்னும் கூட அதிகமாக உண்மைத்தன்மைகள் புரிந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த நிலையில் தான் சேரன் தற்போது இணையதள ஊடகம் ஒன்றிடம் பேட்டி அளித்திருக்கிறார்.

Hotstar

கவின் மற்றும் லாஸ்லியா விடம் தான் பயந்தது இதுதான் என்று சேரன் வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே கவின் மற்றும் லாஸ்லியா இருவரிடமும் தனித்தனியாக பேசி இப்போது எதையும் முடிவெடுக்க வேண்டாம். வெளியில் சென்று யோசித்து முடிவெடுங்கள் என்று கூறியிருந்தார். அதனால் கவின் ரசிகர்கள் மேலும் கோபமடைந்தனர். சேரனை வெளியேற்றவும் செய்தனர்.

அது தவிர வெளியே வந்த சேரனை மேலும் மேலும் வருத்தமடைய செய்யும் அளவிற்கு கமெண்ட் செய்யவே சேரன் இனி என் வாயால் கவின் லாஸ்லியா பற்றி பேச போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதனையும் தாண்டி இப்போது பேட்டி ஒன்றில் அவர்கள் இருவர் பற்றியும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் நான் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தேன். கவினிடமும் அப்படியேதான் இருந்தேன். ஒவ்வொருவருடைய புரிதல்கள் மாறுபடும். ஆகவே நான் என்ன செய்தாலும் கேம்காக செய்வதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டனர். காலம் இதனை அவர்களுக்கு புரிய வைக்கும்.

 

Hotstar

லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்கு வந்து பாதி நாட்கள் கடந்த பிறகு கவின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் எதிர்காலம் பற்றி பேசுகிறார்கள். இது வயதின் வெளிப்பாடு. அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பால் நான் பயந்த விஷயம் அது அவர்களின் பெற்றோர்களை எப்படி பாதிக்கும் என்பது தான். நானும் ஒரு பெற்றோராக இருப்பவன் என்கிற முறையில் அதனை உணர்கிறேன். கவினுடைய பெற்றோர் நினைத்தும் நான் வருத்தப்பட்டேன்.

வெளியில் இருக்கும் பெற்றோர்கள் என்ன சங்கடங்களை சந்திப்பார்கள் என்பதை யோசித்துதான் கவினுக்கும் லாஸ்லியாவிற்கும் அதிகமாக பேசிக் கொள்ள வேண்டாம். குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். கவின் இதனை தவறாக புரிந்து கொண்டார். நான் டிராமா செய்வதாக நினைத்தார்.

அவர்கள் காதலை வைத்து நான் பெயரெடுத்துக் கொள்வதாக நினைத்தார். அதுதான் எனக்கு வருத்தம். நான் பல படங்களை இயக்கி பெயர் வாங்கியவன். இப்படி செய்துதான் பெயர் வாங்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. உண்மையில் எனக்கு அவர்கள் மீதான அக்கறையை விட அவர்கள் பெற்றோர் மீதான அக்கறைதான் அதிகமாக இருந்தது என்று விரிவாக அந்த பேட்டியில் தன்னுடைய நிலைப்பாடு குறித்து வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன்.

 

Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!