சென்னை மெரினா கடலில் நச்சுக்கழிவு நுரையுடன் எழுந்த கடல் அலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை மெரினா கடலில் நச்சுக்கழிவு நுரையுடன் எழுந்த கடல் அலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளுடன் நுரை உருவாகி ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் இருந்து திருவான்மியூர் வரை கடற்கரை முழுதும் வெள்ளை நுரைப்படலம் படர்ந்துள்ள காட்சிகளைத் தான் பலரும் நேரில் சென்று பார்த்து விட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 

இந்த நுரை வழக்கத்துக்கு மாறானது என்றும், இதில் ஏதோ சுகாதாரக் கேடு உள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் வெளிநாடுகளில் வசந்த காலங்களில் படியும் பனிப்பொழிவு போல் நினைத்து மக்களும் குழந்தைகளும் மெரினாவை சூழ்ந்து செல்ஃபி எடுத்தும், விளையாடியும் வருகின்றனர். 

சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ரசாயன கலவைகளுடன் கூடிய கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேமித்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக பொதுவெளிகளில் வெளியேற்றி வருகின்றன. 

twitter

இப்படி வெளியேற்றப்படும் நீர் மழை வேளைகளில் மெல்ல  கடலில் சென்று சேர்ந்து விடுகிறது. உதாரணத்திற்கு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றின் தாங்கும் அளவு 100 லிட்டர் என வைத்துக்கொள்வோம். மழைக்காலத்தில் மழை நீருடன் சேர்ந்து 150-200 லிட்டருக்கு கழிவு நீர் அந்த ஆலைக்குச் செல்லும். 

மேலும் படிக்க - உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்... தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

அதனால் அந்த ஆலையால் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் அளவு குறைந்துவிடும். அதனால் போதுமான அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீரும், சென்னையில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயில் சேரும் கழிவு நீரும் கடலில் கலக்கும்போது கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அதனால்தான் இந்த நுரை உருவாகிறது.

இயற்கையாகவே நன்னீர் கடல், உப்புநீருடன் கலக்கும் போது இப்படியான நுரை உருவாகும். ஆனால் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக் கூடிய இந்த அடர்த்தியான நுரை உருவாவதற்கான காரணம் வேதிமக்கழிவுகள். 

பெங்களூரில் இருக்கும் பெல்லந்தூர் ஏரியிலும் அடிக்கடி இதுபோன்று நுரை ஏற்படும். பெல்லந்தூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் அங்கும் இதுபோன்று நுரை ஏற்பட்டு சாலைகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

twitter

அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது  முழங்கால் உயரம் வரை இருக்கும் இந்த வெள்ளை நுரைப்படலத்தின் அடர்த்தியும், அளவும் அதிகமாக இருப்பதால் மீன்களின் பெருக்கம் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்படுகின்றனர். மேலும் இந்த நுரை அசாதாரணமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க - உங்கள் ராசிக்கேற்ற மொபைல் கேஸ் கவர்கள் என்னென்ன என்று தெரியுமா!

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி, மழை குறைந்ததும் கடற்கரையில் ஏற்பட்டிருக்கும் நுரைப்படலமும் குறைந்துவிடும் என கூறியுள்ளார். கடல் நீரில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நுரை ஏற்பட்டு இருக்கலாம்.

twitter

நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில்  பாஸ்பேட், நைட்ரேட் ஆகியவற்றின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது. வீடு, தொழிற்சாலை கழிவுகள் கலக்கும்போது கொந்தளிப்பு காரணமாக நுரை ஏற்படுகிறது.  

சென்னையில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அதிகரிக்க வேண்டும்.  கழிவு நீர் சுத்திகரிப்பைக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.  

கடந்த 2018ம் ஆண்டிலும் இதேபோன்று கடல் அலைகள் நுரையுடன் எழுந்தன. கடந்தாண்டு இதுபோன்று எழுந்தபோது மாசுக்களால் பருவ மழைக்கு முன்பு இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!