கோபத்தை என் மீது காட்டுங்கள்.. என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்- விஜயின் பிகில் பேச்சு

கோபத்தை என் மீது காட்டுங்கள்.. என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்- விஜயின் பிகில் பேச்சு

நடிகர் விஜய் என்ற பேரைக் கேட்டாலே அஜித் வெறியர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இத்தனைக்கும் விஜய் இவர்கள் குடும்ப சொத்தை அடித்து பிடுங்கவோ இல்லை இவர்கள் உணவில் மண்ணை போடவோ இல்லை. காரண காரியம் இல்லாமல் ஒருவரை இந்த அளவிற்கு வெறுக்க வேண்டிய அவசியம் என்ன என்று பார்த்தால் விஜய் என்கிற ஒருவரை அடையாளம் இல்லாமல் காணாமல் போக வைத்து அஜித் என்பவரை மட்டுமே திரையுலகம் ரசிக்க வேண்டும் என்கிற ஒரு விதமான வெறிதான் இதற்கு காரணம்.

அதிலும் விஜய்யின் ரசிகர்கள் என்றாலே அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு எங்கிருந்தோ ஒரு ஏளனம் கிளம்புகிறது.ஒவ்வொருவர்வர் ரசனையும் வேறுபட்டது என்பதன் அடிப்படை கூட புரியாத பலர்தான் அஜித்தின் ரசிகர்களாக இருந்து அவருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள். யதார்த்தமாக யாரிடமும் நமக்கு விஜய் பிடிக்கும் என்று சொல்லி விட முடியாது. அது நண்பனோ சகபணியாளரோ முகநூல் சமூகமோ யாராக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களைக் கண்டால் உள்ளுக்குள் ஆத்திரம் பிறக்கிறது. அவ்வப்போது காழ்ப்புணர்ச்சியை எங்காவது ஓரிடத்தில் காட்டி விட்டுத்தான் நகர்கிறார்கள்.

Twitter

நடிகர் அஜித்தால் இப்படிப்பட்ட வன்முறையை சகிக்க முடியாமலே ரசிகர்மன்றத்தை கலைத்தார். ஆனாலும் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு தொடர்ந்து செய்யும் துன்பங்களை அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில்தான் விஜய்யின் அடுத்த திரைப்படமான பிகில் (bigil) ஆடியோ லான்ச் நேற்று வெளியானது. விஜய் எனும் சக மனிதனுக்கும் சமூக அக்கறைகள் இருக்கிறது என்பதை தன்னுடைய பேச்சின் மூலம் வெளிக்காட்டி இருக்கிறார் நடிகர் விஜய்.

இந்த வாழ்க்கை எனும் கால்பந்து மைதானத்தில் நம்மை முன்னே செல்ல விடாமல் தடுப்பார்கள் நம்முடன் இருந்த படியே அடுத்தவர்களுக்கு சேம் சைட் கோல் கூட போடுவார்கள் நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

Twitter

என்று தொடங்கிய அந்த பேச்சு கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் நட்பைப் பற்றிய ஒரு உதாரணம் பற்றி தெளிவாக விளக்கியது. என்னதான் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இடையே சண்டைகள் இருந்தாலும் தன்னுடன் காரில் பயணித்த ஒரு நபர் கருணாநிதி பற்றித் தவறாக பேசி விட அங்கேயே அந்த நபரை எம்ஜிஆர் இறக்கி விட்டிருக்கிறார். அவர்கள் நட்பின் ஆழம் பகைமையை விட அதிகமானது . எதிரியாகவே இருந்தாலும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

என் மீது கோபம் என்றால் என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என்னுடைய ரசிகர்களை தொந்தரவு செய்யாதீர்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள் அதைப்பற்றி நினைத்துக் கூட பார்க்காதீர்கள் என்று பிசிறு கிளப்ப பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.

Twitter

விஜயின் இந்த பேச்சு தொடர்ந்து இணையம் மற்றும் நேரில் நடக்கும் அஜித் ரசிகர் விஜய் ரசிகர் சார்பான சண்டையைத்தான் என்கின்றனர் பார்வையாளர்கள். தன்னுடைய ரசிகர்களைத் தாக்க வேண்டாம் என்பதையே அவர் கருணாநிதி எம்ஜிஆர் நட்பின் மூலம் உதாரணமாக காட்டி இருக்கிறார்.

கூடவே சுபஸ்ரீ மரணம் குறித்து பேசிய விஜய் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு லாரிக்காரர்களையும் பேனர் வைப்பவர்களையும் கைது செய்திருக்கிறார்கள். தேவையில்லாதவைகளை எல்லாம் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்யும் இணையதளவாசிகள் சுபஸ்ரீயின் இந்த மரணத்தை உலகிற்கு எடுத்து சொல்ல அந்த ஹாஷ்டேகை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

Twitter

விஜய்யின் இந்த பேச்சை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்று பாராட்டி இருக்கிறார். சமாதானமாக செல்ல விஜய் பல முறை அஜித் ரசிகர்களிடம் மௌனமாகவும் கண்ணியமாகவும் பதில் அளித்து வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய ரசிகர்களை இப்படி இனிமேல் செய்ய வேண்டாம் என்பதை அஜித் ஒருமுறை கூட சொன்னதே இல்லை. அவருடைய அந்த மௌனம் இவர்களுக்கு சம்மதமாகத்தான் இருக்கிறது.

இந்த நீண்ட கால அர்த்தமில்லாத யுத்தத்தை முடித்து வைக்கநடிகர் அஜித்தால் மட்டும்தான் முடியும். அவரும் தன்னுடைய வாய் திறந்து நடக்கும் அபத்தங்களை பற்றி ரசிகர்களுக்கு புரிய வைப்பது ஒரு தலைவனாக அஜித்தின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட.

Twitter

இல்லாவிட்டால் இப்போதும் கூட விஜய் ஆடியோ லான்ச்சை கிண்டல் செய்து "#அய்யோஅம்மாஆடியோலான்ச்" என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டரில் முதலிடத்தில் இருக்கின்றனர் அஜித்தின் அருமை ரசிகர்கள். கூடவே அஜித் எப்போதோ யாருக்கோ உதவி செய்த விடீயோக்களை திரும்ப திரும்ப போட்டு அவசியமே இல்லாமல் முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் ரசிகர்களோ விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க சுபஸ்ரீ போன்ற சமுதாய அக்கறையுள்ள பிரச்னைகளை இனி ட்ரெண்ட் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றனர். இந்த ரசிகர் வெறி இனியாவது ஒழிய வேண்டும். நாட்டில் கவனிக்க வேண்டிய செய்தாக வேண்டிய செயல்கள் பலகோடி இருக்கின்றன. இளமைக்காலத்தை அடுத்தவருக்கு பயனுள்ளதாகக் கழிக்க வேண்டுமே தவிர மற்றவரை பயன்படுத்தி கழிக்க கூடாது.

விஜய் சொன்ன சமுதாய அக்கறை சிந்தனையை பின்பற்றிய விஜய் ரசிகர்கள் ##JusticeForSubaShree என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து விட்டனர். அர்த்தமே இல்லாத காழ்ப்புணர்வோடு அஜித் ரசிகர்கள் செய்த #அய்யோஅம்மாஆடியோலான்ச் ஹேஷ்டேக்கை விடவும் இரண்டாம் இடத்தில இருக்கும் இந்த ஹேஷ்டேக் நிச்சயம் ரசிகர் வாழ்வில் பல மாற்றங்களை செய்யும் என்பதில் ஐயமில்லை.

 

Twitter
Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!