வாவ்! இதுதான் பிக் பாஸ் சீசன் 3 வீடு.. புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது!

வாவ்! இதுதான் பிக் பாஸ் சீசன் 3 வீடு.. புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது!

பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி எந்த தகவலும் உறுதியாக வெளிவராமல் படு கவனமாக பார்த்து வருகிறது விஜய் டிவி. இவரா அவரா என பல்வேறு பெயர்கள் ஊடகங்களில் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன.

பார்வையாளர்களின் ஆச்சர்யத்தை கவர்ந்த முதல் வித்தியாச நிகழ்ச்சியான பிக் பாஸ் (biggboss) அதன் மூன்றாவது சீசனை இன்னும் ஐந்து நாட்களில் தொடங்க இருக்கிறது.

சாந்தினி, மதுமிதா, லைலா, மயூரி சுதா சந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறி வந்தனர். அதில் ஒரு சிலர் மறுப்பு தெரிவித்து இதனை வதந்தி என்று கூறினர்.

அதில் கடைசியாக மோகன் வைத்யா மற்றும் மதுமிதா இருவரும் வர இருக்கிறார்கள் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த தகவலாகவே கூறி இருக்கின்றனர். இருப்பினும் 23ம் தேதி அன்று தான் இதன் உண்மைத்தன்மை நமக்கு தெரிய வரும்.

இந்நிலையில் பிக் பாஸ் வீடு தற்போது என்ன மாற்றங்களுடன் தயார் ஆகி இருக்கின்றன என்பதற்கான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய மாற்றங்களுடன் பிக் பாஸ் வீடு மிகவும் அழகாகவே மாறி இருக்கிறது.

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

Youtube

அறைகள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும் அதன் உள் அலங்காரங்கள் மாறி இருக்கின்றன. அதுதான் வீட்டை இன்னும் ஆடம்பரமாக காட்டுகிறது.

சமையல் அறையில் இருந்து கார்டனை பார்க்கும்படியாக கோணத்தில் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அது வீட்டின் விஸ்தீரத்தை நமக்கு பறைசாற்றுகிறது. இந்த முறை சமையல் அறை ஒரு மொபைல் கிட்சன் வடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் அதனை பயன்படுத்தும் போது வாகனத்தின் முகப்பு விளக்குகளும் எரிகிறது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

நீச்சல் குளம்.. முத்தமிடும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் ..

Youtube

படுக்கை அறை இந்த முறை மஞ்சள் நிறத்திற்கு மாறி இருக்கிறது. பின்னால் இருக்கும் பிங்க் நிற சுவர்கள் அனேகமாக இது பெண்கள் படுக்கை அறையாக இருக்கலாம் என்பதை நமக்கு சொல்கிறது. ஆண்களுக்கு நீல நிறம்தான். ஆனால் இம்முறை இரண்டு படுக்கை அறைகளுக்குமான இடைவெளிகள் குறைந்திருக்கின்றன. இரண்டு படுக்கை அறைகளுக்கும் நடுவே ஒரு பொது வழியும் அமைந்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்ல விசேஷங்க !

Instagram

கார்டன் ஏரியா வழக்கமான சிறையோடு அதே போலவே காட்சியளிக்கிறது. அங்கே போடப்பட்டிருக்கும் சோபாக்கள் மாறி இருக்கின்றனர். ஆனால் இம்முறை சிறையில் பாத்ரூம் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவாம்.

Youtube

ஹால் இந்த இடம்தான் மிக பெரிய அளவில் மாற்றம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது. சீலிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார். முன்பை விட பெரியதாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் இடம் மாறி இருக்கிறது. எல்லா நேரமும் பகல் பொழுது போல இருப்பது போல இருக்கிறதாம்.

Instagram

ஸ்விம்மிங் ஏரியா இந்த இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. உடல் பயிற்சி கருவிகள் குளியல் அறைக்கான பாதை என இந்த இடம் அப்படியே இருக்கிறது. ஆனால் இம்முறை ஸ்மோக்கிங் ரூமை வித்யாசமான முறையில் மாற்றி இருக்கிறார்கள். இரண்டு பேர் மட்டுமே நிற்கும் அளவிற்கான ரூம் எனவும் அதற்குள் செல்ல பழைய கால ஓவென் டிசைனில் இருப்பதால் குனிந்து உள்ளே செல்ல வேண்டும். அதில் ஸ்மோக்கி செய்தால் புகை அந்த சிறு இடத்திற்குள் சுற்றி கொண்டிருக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள். அனேகமாக புகைப்பழக்கத்தை நிறுத்த இந்த முயற்சி உதவலாம். இது நிச்சயம் நல்ல முயற்சிதான்.

Youtube

குளியறையின் உள் அலங்காரங்கள் மாறி இருக்கின்றன. வாஸ் பேசின்கள் தண்ணீர் லாரி வடிவமைப்பில் நிறுவப்பட்டிருக்கின்றன. இரண்டு பாத் ரூம் மற்றும் இரண்டு டாய்லெட்கள் உள்ளன. அங்கே வழக்கமாக உட்கார்ந்து பேசும் பெஞ்ச் இருக்கிறது.

Youtube

மற்ற மாற்றங்களை விடவும் முக்கியமான மாற்றம் என்ன என்றால் தொழில்நுட்பத்தில் அட்வான்ஸ்ட் முறையில் கேமராக்கள் மாறியிருக்கின்றன. நைட் விஷன் இன்னும் தெளிவாக தெரியும் வகையில் மாறி இருக்கிறது. அனேகமாக இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கடந்த சீசன் போட்டியாளர்களின் அத்து மீறல்கள் தான் என்று புரிகிறது.

 

 

Youtube

பிக் பாஸ் சீசன் 3 தொடங்க இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் வெளியான இந்த புகைப்படங்கள் பிக் பாஸ் சீசன் பற்றிய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருக்கிறது. போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இனி ஒவ்வொன்றாக வெளியாகலாம். எப்படியோ இன்னும் 90 நாட்களுக்கு தமிழகத்தில் பிக் பாஸ் பேசு பொருளாக இருப்பார் என தெரிய வருகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.