எல்லாத்தையும் இங்கயே தூக்கிப் போட்டுட்டு வா.. 10 வருட பாசத்தை ஒத்தி வைத்த லாஸ்லியா அப்பா!

எல்லாத்தையும் இங்கயே தூக்கிப் போட்டுட்டு வா.. 10 வருட பாசத்தை ஒத்தி வைத்த லாஸ்லியா அப்பா!

ஏற்கனவே சொன்னபடி எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த பிக் பாஸ் (biggboss) ஃபிரீஸ் டாஸ்க் இந்த வாரம் வந்தே விட்டது. இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களும் கொண்டாட்டத்துடன் இருந்தனர்.

முதலிலேயே முகேனின் அம்மா மற்றும் தங்கை வந்து விட முகேன் அம்மா தங்கையை தூக்கி சுமந்து தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கேற்றாற்போல ஆராரிராரோ பாடலை பிக் பாஸ் சிச்சுவேஷன் சாங்காக போட மகனைக் கட்டிப் பிடித்து அழுத்த அம்மாவைப் பார்த்து சேரன், சாண்டி ஆகியோரும் கண்கலங்கினர்.

அடுத்ததாக ஃபிரீஸ் சொல்லப்பட.. விக்ரம் வேதாவின் பாடல் ஒலிக்க சேரன் கம்பீரமாக உள்ளே வந்தார். இதனை எதிர்பார்க்காத ஒரே நபர் கவின். ஆனாலும் சேரன் எல்லோரையும் ஒரே நேரத்தில் சமாளித்து தான் விளையாட்டுக்கு கேட்டதாக அந்த சூழ்நிலையை சமன் செய்தார்.

 

Hotstar

சேரன் வந்து பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே ஃபிரீஸ் சொல்லப்பட யாரும் எதிர்பார்க்காத வகையில் லாஸ்லியாவின் அம்மா தங்கைகள் உள்ளே வந்தனர்.லாஸ்லியா அம்மா எதுவும் பேசாமல் மகளை பார்த்துக் கண்கலங்கி கொண்டே இருந்தார்.

என்னம்மா ஏன்மா அழறீங்க என்று லாஸ்லியா கேட்கும்போதும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் தங்கைகளில் மூத்தவர் சேரன் அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதார். இதையும் யாருமே எதிர்பார்க்கவில்லை.

வனிதாவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். ஷெரின் வழக்கம் போல பேபி என்று சொல்லி விட்டு கட்டிக் கொண்டு சூழ்நிலையை சமன் செய்தார். அதே நேரம் லாஸ்லியா அம்மா தனியாக லாஸ்லியாவிடம் உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த கவினுக்கு எல்லாமே அவர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ஆஃப் ஆனது.

 

Hotstar

தங்கைகளில் மூத்தவர் லாஸ்லியாவிற்கு சில அறிவுரைகள் தந்தார். விட்டு கொடுக்கிறதா சொல்லிகிட்டே கேம்ல உன்னை விட முன்னாடி போறாங்க. பார்த்து இரு என்றதும் லாஸ்லியா குழப்பம் ஆனார். ஆனால் அந்த தான் செய்வதே சரி என்கிற ஆட்டிட்யூட்டை அவர் விடவில்லை. அதே சமயம் யார் என்ன சொன்னால் என்ன நீ என்னை நம்பறேல்லமா என்று கேட்டபடி அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டார்.

அவருடைய அம்மா வெளியில் லாஸ்லியா பற்றி அவர்களிடம் மற்ற நபர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதைக் கவலையோடு சொன்னார். நீ நீயா இரும்மா எண்ட மகள் இப்படி இருக்க மாட்டாளே னு எங்களுக்கு கவலையா இருக்கு என்றார்.ஆரம்பத்துல எல்லாம் நம்ம மக்கள் எங்கட தமிழ் பொண்ணு என்று பேசினார்கள் ஆனால் போகப்போக என்று நிறுத்தி விட்டு கதறினார்.

அப்போது மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்கிற இயக்குனர் ராமின் குரல் ஒலிக்க தொடங்குகிறது. லாஸ்லியா தன்னுடைய அப்பாவை தேடினார். அப்பா வந்திருக்கிறார் என்பது மட்டுமே புரிந்த லாஸ்லியாவிற்கு அப்பா எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் அவரது விழிகள் அலைபாய்ந்த விதம் அவர் தவித்த தவிப்பு 10 வருட பிரிவின் முடிவை அவர் எதிர்கொண்ட விதம் நிச்சயம் ஆயிரம் சதவிகிதம் உண்மையான மகளின் ஏக்கங்கள்தான்.

Hotstar

இந்த உணர்வுகளை கேமரா படம் பிடித்தபடியே இருக்க ஆனந்த யாழை பாடல் ஒலிக்க தொடங்கியது. நீண்ட அலைபாய்தலுக்கு பின்னர் கதவு திறக்கப்பட 10 வருடம் கழித்து மகளை பார்க்க வந்த அப்பாவைப் பார்த்து தயங்கி கண்ணீரில் ததும்பி கதறிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. அது எந்த திரைப்படத்திலும் காட்டப்படாத ஒரு பாசம்.

10 வருடம் கழித்து பெற்ற மகளை பார்க்க வந்த லாஸ்லியா அப்பா மரியநேசனின் முகமோ இறுகிப்போய் இருந்தது.அப்பாவின் கால்களை பிடித்த லாஸ்லியாவின் கைகளை மெல்ல தூக்கி விட்டு மார்பில் அணைத்து ஆசுவாசப்படுத்தினார். தன்னுடைய கோபத்தையும் கட்டுப்படுத்தினார்.

தன்னுடைய சொந்த உணர்வுகளை மறைத்துக் கொண்டு மற்ற போட்டியாளர்களை பார்த்து கைகுலுக்கினார். உண்மையாகவே வாயடைத்து போயிருந்த கவினுக்கும் கை கொடுத்தார். ஒவ்வொருவரிடமும் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழையும் முன்னர் லாஸ்லியாவிடம் பல கேள்விகள் கேட்டு தன்னுடைய வலிகளை வெளிப்படுத்தினார்.

"நான் உன்னை இப்படித்தான் வளர்த்தினேனா ? கதைக்கக்கூடாது எண்டு பார்க்கிறேன்" என்று அவர் திரும்பவும் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தியபடியே சேரனிடம் வந்தார். சேரன் அதெல்லாம் ஒண்ணுமில்ல என்ற உடன் அவரைத் தழுவிக் கொண்டார்.

"என்ன சொல்லி நீ இங்கே வந்தாய் மற்றவர் எங்களை காறித்துப்புகிற மாதிரி நீ நடந்து கொண்டிருக்கிறாய். என்ன சொல்லி உன்னை அனுப்பினேன். எல்லாத்தையும் இங்கயே தூக்கி எறிஞ்சுட்டு உள்ள வா" என்று கோபமாக சொன்னபடியே உள்ளே செல்ல எத்தனித்தார்.

நிலைமையின் போக்கை உணர்ந்த கவினுக்கு லாஸ்லியா அப்பாவின் கோபம் கண்டதும் கைகால்கள் உதற தொடங்கியது. சேரன் அப்பாவிடம் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை உன் அப்பாவிடம் நான் பேசி சம்மதம் வாங்குகிறேன் என்று நேற்று வரை பேசிய கவின் இன்று லாஸ்லியா ஒரிஜினல் அப்பாவின் கோபத்தை பார்த்து உடைந்து அழ ஆரம்பித்தார்.

கவினைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.

the emotional fight
Hotstar

அப்பாவின் வரவுக்காக 10 வருடம் ஆசையாகக் காத்திருந்த மகள் லாஸ்லியா . ஆனாலும் அத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் போது பாசத்தை கொட்டாமல் அதனைக் கொஞ்சம் ஒத்தி வைத்து கண்டிப்பைக் காட்டினார் அவரது அப்பா மரியநேசன்.

அப்பாவின் பாசத்தை எதிர்பார்த்த லாஸ்லியாவுக்கு அப்பாவிடம் இருந்து வந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. அதற்கு பதிலாக அவர் அப்பா அப்பா என்று அரற்ற .. அதன் பின்னர் மனம் உடைந்து மகளுடன் தழுதழுக்கிறார் லாஸ்லியா அப்பா மரியநேசன்.

அதன்பின்னர் வனிதா மற்றும் சேரன் இருவரும் லாஸ்லியா பெற்றோரிடம் இங்கே தவறாக எதுவும் நடக்கவில்லை என்று கூற உள்ளே சென்றனர் லாஸ்லியா குடும்பத்தினர். தன்னுடைய நடவடிக்கைகளால் அப்பா அம்மா வரமாட்டார்களோ என்கிற சந்தேகத்தில் தான் இருந்ததாக லாஸ்லியா அவரது அம்மாவிடம் சொல்லி அழுதார்.

கவின் ஓரமாக ஒதுங்கி நிற்க லாஸ்லியா அப்பா கவினின் பெயர் சொல்லாமல் தர்ஷன், ஆம்பளை அப்படி கெத்தா இருக்க வேணாமா இது கேம் ஷோ தானே நண்பர்களாத்தானே உள்ள வந்திங்க நண்பர்களாகவே வெளியே வாங்க என்று லாஸ்லியா கவின் காதலுக்கு தன்னுடைய முடிவை தெரிவித்தார்.

அதன்பின் கவினை அருகில் அழைத்து வெளியே உள்ளவர்கள் மற்றவர்கள் நண்பர்கள் கூட லாஸ்லியா குடும்பத்தினரை எப்படி பேசினார்கள் என்பதை சொல்லும்போது பாவம் மனிதர் உடைந்து போனார். ஒரு தகப்பனாக இந்த வேதனைகளை ஏற்கனவே அனுபவித்திருந்த சேரன் இதனை வேதனையோடு வேடிக்கை பார்த்தார்.

 

Hotstar

சாண்டி முகேன் தர்ஷன் யார் முகத்திலும் ஈயாடவில்லை. தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதாக சொன்னபோது நண்பர்கள் கூட என்ன உன் மகள் கல்யாணத்துக்கு போறயா என்று கேட்டு கிண்டல் அடித்ததாக அவர் வேதனைப்பட்டு சொன்னபோது ஒரு தகப்பனின் வலி என்ன என்பது நம் அறிவுக்கு புரிந்தது.

"காசுக்காக பெண்ணை அனுப்பினேன் என்று என்னை எல்லோரும் பேசறாங்க.. நாங்க அதுக்காகவா உன்னை அனுப்பினோம். அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் என்று உனக்கே தெரியும். நாம பார்க்காத கஷ்டமே இல்ல" என்று கண்ணீரோடு கூறுகிறார் மரியநேசன் அப்பா. கேட்கும் நம் நெஞ்சு ஒரு தந்தையின் தவிப்பைக் கண்டு பதறித்தான் போகிறது.

இதனைக் கேட்ட உடன் லாஸ்லியா முகம் மாறியது. அதனை கவனித்த அவர் அம்மா உடனே என் பொண்ணு பத்தி எங்களுக்கு தெரியும் என்று பேச்சை மாற்ற அதனைப் புரிந்து கொண்ட லாஸ்லியாவின் அப்பாவும் எனக்கு உன்னைப் பற்றித்தெரியும் லாஸ்லியா ஆனாலும் இந்த வார்த்தைகள் என்னை எவ்வளவு வேதனைப்படுத்தும் என்பதை யோசித்துப் பார் என்றார்.

சேரன் ஒரு தகப்பனுக்கு ஆதரவு தரும் இன்னொரு தகப்பனாக லாஸ்லியா அப்பாவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவ்வப்போது முதுகை தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். ஒரு நல்ல அப்பா ஒரு நல்ல அம்மா நேர்மையான தங்கைகள் என லாஸ்லியாவிற்கு மிக அழகான குடும்பம் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்ந்தது.

லாஸ்லியா பக்குவமற்ற வயதை பயன்படுத்திக் கொண்ட கவின் இந்த நேரத்தில் கதறிக் கொண்டிருந்தார். என்னாலதான் இதெல்லாம் நான் போய் சாரி கேட்கறேன் என்ற போது சேரன் தடுத்து விட்டார். தர்ஷனும் அதனைத் தடுக்க கவின் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

 

Hotstar

சரி செய்த தவறுகளை நினைத்துதான் கவின் கலங்குகிறார் என்று நாம் நினைத்தால் அதன் பின்னர் ஷெரினிடம் கூறுகிறார் எனக்கு ஐடியாவே இல்ல மச்சான்.. இவங்கப்பா இதை இப்படி டீல் பண்ணுவார்னு அவ முன்னாடியே சொல்லிருந்தா நான் பீலிங்ஸ் சே வச்சுருக்க மாட்டேன்ல என்று அப்போதும் தன்னை நினைத்துதான் அழுதிருக்கிறார் கவின்.லாஸ்லியாவை இழப்பது பற்றிய வருத்தமில்லை

பல வருடம் கழித்து பார்த்த தந்தையோடு மகளை விட்டு விட்டு சேரன் அப்பா விலகி செல்கிறார். லாஸ்லியா அப்பா மீண்டும் மகளுக்கு "விளையாட்டை கெத்தாக விளையாடி விட்டு கெத்தாக வா" என்று வலியுறுத்துகிறார். லாஸ்லியா அம்மா "நீ நீயாக இரும்மா உன்ன நாங்க இப்படி பார்த்ததே இல்லையே" என்று மீண்டும் மீண்டும் அழுதபடி கூறுகிறார்.

தன்னுடைய தவறுகளை உணர்ந்து தன்னால் அப்பா அம்மாவிற்கு நேர்ந்த வலிக்காக கண்ணீருடன் மன்னிப்பு கேட்கிறார் லாஸ்லியா. பேச்சை மாற்ற லாஸ்லியா அம்மா வீட்டைப் பற்றிக் கேட்கிறார் . இதுதான் ஹால் இங்குதான் கமல் சாரோடு கதைப்போம் என்று லாஸ்லியா கூற உடனே "கமல் சார் முன்னுக்கு கால்மேல கால் போட்டு உக்கார்ந்து கதைக்காத" என்று மரியநேசன் அப்பா கூற லாஸ்லியா முகம் மாறுகிறது.

 

Hotstar

"அப்பா மரியாதையை மனசுல வச்சிருந்தா போதும் நான் இங்க வந்த முதல் நாளில் இருந்து அப்படிதான் இருக்கேன்" என்கிறார் லாஸ்லியா. "இருந்தாலும் அப்பா என் முன் கால் மேல் கால் போட நீ யோசிப்பாய் அல்லவா.. அப்பா பேச்சைக் கேளு" என்கிறார். அதன் பின்னர் அப்பா அம்மா இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு கைகளைக் கோர்த்தபடி பேச அப்பா லாஸ்லியா கைகளை பார்த்து வேர்க்கிறதா என்று கேட்கிறார்.

10 வருடங்களுக்கு பின்னர் சந்திக்கும் மகளின் கைகளைத் தன் கைகளோடு பொருத்திக் கொண்டு உன் கைகள் குட்டிக் கைகள் என்று கூறுகிறார் தந்தை. லாஸ்லியா அதற்கு சிரித்தபடியே இருவர் கையும் ஒரே அளவு என வைத்துக் காட்டுகிறார். 10 வருடத்தில் வளர்ந்த மகளைக் கண்டு பூரிக்கிறார் தந்தை.

பின்னர் குட்டித் தங்கையை லாஸ்லியா அழைத்து மடியில் அமர்த்திக் கொள்கிறார். மற்ற ஹவுஸ்மேட்கள் சுற்றி ரவுண்டு கட்டி அமர கவினும் சாண்டியும் சற்று தாமதமாக அமர்கின்றனர். சாண்டி தன்னுடைய துக்கத்தை மறைத்துக் கொண்டு (அடுத்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்) லாஸ்லியா குடும்பத்தாருடன் சிரித்துப் பேசுகிறார்.

 

Hotstar

அத்தோடு எபிசோட் முடிகிறது. லாஸ்லியா எபிசோட் மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டின் மையப்புள்ளியாக இருந்த ஒரு போட்டியாளரின் பெற்றோர் குடும்பம் வந்திருப்பதால் பிக் பாஸ் வீடே பாசத்தில் நனைந்து கிடக்கிறது. லாஸ்லியா அப்பா தன்னுடைய 10 வருட பாசத்தையும் ஒத்தி வைத்து விட்டு லாஸ்லியாவுக்கு புத்தி சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாகவே சொல்லி இருக்கிறார்.

சேரன், தர்ஷன் போன்றோருடன் பேசு எல்லோருடனும் பேசு என்பதை சொல்லி இருப்பதன் மூலம் கவினிடம் இருந்து விலகி இரு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் லாஸ்லியா அப்பா. நம்முடைய எழுத்துக்கள் சமயங்களில் பலரை சரியான முடிவெடுக்க வைக்கலாம். ஒருவேளை கவினின் லீலைகள் எழுதப்படாமல் போயிருப்பேன் லாஸ்லியா தந்தை வேறொரு முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது.

ஊடகங்கள் முழுக்க பேசு பொருளானதால் இன்று லாஸ்லியா கவினிடம் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதனை லாஸ்லியா எப்படி கையாள போகிறார் என்பதை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.