தான் சொல்வதே (கத்துவதே) நியாயம்.. தன்னிடம் கத்தினால் கோபம்.. வெளியேறினார் வில்லங்க வனிதா

தான் சொல்வதே (கத்துவதே) நியாயம்.. தன்னிடம் கத்தினால் கோபம்.. வெளியேறினார் வில்லங்க வனிதா

பிக் பாஸ் நிகழ்வு ஆரம்பித்ததில் இருந்தே பேசுபொருளாக இருந்தவர் வனிதா. இவரா? இவர் நிச்சயம் வீட்டில் பிரச்னையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனை நன்கு அறிந்த பிக் பாஸ் (bigg boss) குழுவும் தெரிந்தேதான் அவரை வீட்டிற்குள் அனுமதித்தது. இவரால் TRB அதிகரிக்கலாம் வீட்டின் சுவாரஸ்யங்கள் கூடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வந்த ஒரே வாரத்தில் வீட்டின் நிம்மதி கேள்விக்குறியானது. எல்லோரோடும் அதிகார பேச்சு கொடிகட்டி பறந்தது. யாரையும் பேச விடாமல் வனிதா மட்டுமே பேசி (கத்தி) கொண்டிருந்தது பார்வையாளருக்கு அதிக கோபத்தை உண்டு பண்ணியது.

இளம்பெண்கள் குழுவில் தானாகவே இவர் சென்று சேர்ந்து கொண்டு அவர்களுக்குள் பிளவை மூட்டியபடி இருந்தார். இதில் வனிதாவுக்கு தான் தான் சினிமாத்துறையின் காட் ஃபாதர் என்கிற நினைப்பு வேறு. எதற்கெடுத்தாலும் நான் பார்க்காத சினிமாவா நான் பார்க்காத மனிதர்களா என்கிற தொனியிலேயே பேசி மற்றவர் வாயை அடைத்துக் கொண்டிருந்தார்.

முக்கியமாக மதுமிதா மற்றும் லாஸ்லியா இருவரையும் சாப்பிடுவதற்காக கூட வாயைத் திறக்க விடவில்லை வனிதா. வீட்டின் நிலமை படு மோசமாகிக்கொண்டே போனது. ஆண்கள் அனைவரும் அந்த சத்தம் தாளாமல் மன உளைச்சல்களுக்கு ஆளானதும் நடந்தது.

இதற்கிடையில்தான் கடந்த வாரம் நடந்த போட்டி ஒன்றில் வனிதாவின் அடுத்த சுயரூபமும் வெளிப்பட்டது. (எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டிருக்கும் வனிதா மூன்று குழந்தைகளுக்கு அம்மா என்கிற நிலையில் அவர் மீது சூழல் காரணமாக அவர் இப்படி ஆகியிருக்கலாம் என்று பரிதாபங்களும் தோன்றத்தான் செய்தது).

Youtube

ஆனால் கடந்த வாரப் போட்டியின் போது வனிதா செய்த நியாயமற்ற தன்மையை தர்ஷன் எடுத்துக் கூறினார். அதனையும் வனிதாவின் ஸ்டைலான கத்தி பேசுவதன் மூலமே அவருக்கு கூற வேண்டியதாக இருந்தது. இதனால் தனது ஈகோவில் அடி வாங்கிய வனிதா.. நான் இனி பிக் பாஸ் விளையாட்டை விளையாடுவதில்லை என்று சபதம் செய்து மைக்கைத் துறந்தார். தர்ஷனை அநாகரிகமாக பேசினார்.

இவர் கத்தினால் அது நியாயம் என்றும் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட தர்ஷனை " பொம்பளைகிட்ட கோபப்படுற? " என்று பிரச்னையின் திசையை திருப்பி விட்டு சேரனையே மனம்மாற வைத்து தர்ஷனை தன்னிடம் மன்னிப்பு கேட்கும் மனோநிலைக்குத் தள்ளியவர் வனிதா.

இதெல்லாம் பார்த்த பிக் பாஸ் மற்றும் ரசிகர்கள் வனிதாவை வெளியேற்ற முடிவு செய்தனர். ஒரு வீட்டில் ஒரு நபரின் குணப்பண்புகளால் மற்றவர்களும் அவரைப் போலவே மாறித்தான் பேச வேண்டியதாக இருந்தது. அவர்களது குணங்களும் மாறி போயின. வனிதாவுடன் நெருக்கமாக இருந்த ஷெரின் மற்றும் ரேஷ்மா கூட இதனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். அந்தளவிற்கு அவர் தன்னிலை மறந்து பங்காற்றிக் கொண்டிருந்தார்.

Youtube

உளவியல் ரீதியாக வனிதாவுக்கு பல சிக்கல்கள் இருப்பதாகவே அவரது நடவடிக்கை மூலம் தெரிய வருகிறது. ஆனாலும் எதையும் உள்வாங்கி கொள்ளக் கூடிய மனநிலை அவருக்கு இல்லாததாலேயே தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை இரண்டிலுமே அவர் இப்படி எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறாரோ என்று பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.

கிளம்பும் வரையிலும் தெனாவெட்டாகவே இருந்தார் வனிதா. கூப்பிடுங்க சார் நான் வரேன் என்று கமல்ஹாசனிடம் கூற கொஞ்சமும் யோசிக்காமல் கமல்ஹாசன் கூப்பிட்டு விட உடனே தடுமாறிய வனிதா நான் நல்லாதானே விளையாடினேன் என்று புலம்பியபடியே சென்றார்.

பாதிக்கப்பட்ட வீட்டு உறுப்பினர்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். ஒரு பெண், ஒரு தாய் என்பவர் எப்படிப்பட்ட பக்குவமுடன் இருக்க வேண்டும் என்பதை வனிதா அறிந்து கொள்வது அவருக்கான கடமை. அவ்வளவே. அவருக்குப்பின்னான தலைமுறைகள் இதனால் ஆரோக்கியமாகும்.

ஒவ்வொரு தனி மனிதனும் அவனுக்கான சுய பரிசோதனைகளை (self realisation) செய்ய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை வனிதாவின் குணநலம் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.