நடிகர் தனுஷுக்கு ஜோடியாக “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ஷெரின் . கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 18 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். அப்போது உடல் எடை வெகுவாக அதிகரித்து காணப்பட்டார். எனினும் அவரது வெகுளியான குணத்தால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
கடந்த இரண்டு சீசன்னை விட இந்த சீசன் சற்று சுவாரசியமாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா காதலுக்கு பிறகு அதிகமாக பேசப்பட்டது ஷெரின் – தர்ஷன் காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த தர்ஷன் மீது ஷெரினுக்கு க்ரஸ் இருந்தது.
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
ஆனால் தர்ஷனுக்கு வெளியில் காதலி இருந்ததால் அவர் ஷெரினின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஒன்றாக இருந்த ஷெரின்- தர்ஷன் இடையே சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் சற்று விலகி இருந்தனர்.
ஆனால் மீண்டும் நிகழ்ச்சி முடிவுயடைவதற்குள் ஒன்றாக சேர்ந்து நல்ல நண்பர்களாக இருவரும் இருந்தனர். ஒரு கட்டத்தில் தர்ஷன் வெளியேற நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற ஷெரின் நான்காம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் மற்றும் ஷெரின் சந்தித்தனர்.
How is it !!! from @dhanushkraja Sir Asuran 🤩 pic.twitter.com/JVTuAulNgz
— Sherin Shringar (@SherinShringar_) October 19, 2019
பிக் பாஸ் கொண்டாட்டத்தில் இருவரும் இணைந்து நடனமாடினர். அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஷெரின் எப்போது புதிய திரைப்படத்தில் நடிப்பார், அவரை திரையில் பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஷெரின், தான் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என அதிர்ச்சி தகவலை கூறினார். மேலும் தர்ஷன் வெளியேறியபோது தான் குற்ற உணர்ச்சியில் தவித்ததாகவும், எனது கிரியேட்டிவிட்டியை மதிக்கும் நபர்களுடன் வேலை செய்யவே விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
ட்விட்டரை விட்டு அதிரடியாக வெளியேறிய குஷ்பு : குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விருப்பம்!
சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிய நிலையிலும், அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லிம் ஆகிவிட்டார். தற்போது சாரியில் அழகாக விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இது நம்ப ஷெரினா என்று வாயடைத்து போயுள்ளனர். மேலும் ஷெரின் மீண்டும் ஹீரோயின் ஆயிடுவார்போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆல்யா வீட்ல விசேஷங்க! சந்தோஷத்தில் சஞ்சீவ் ! வைரலான இன்ஸ்ட்டா பதிவு !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!