வெளியானது பிக்பாஸ் ப்ரமோ.. கணித்தவை நடந்தது !

வெளியானது பிக்பாஸ் ப்ரமோ.. கணித்தவை நடந்தது !

தொலைக்காட்சி வரலாற்றில் சுவாரஸ்யமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 பற்றி நாம் அப்போதே கணித்தது இப்போது நடந்திருக்கிறது.


கேமராக்கள் சூழ ஒருவரின் வாழ்க்கை நடந்தால் அது எப்படி இருக்கும் என்பதுதான் பிக்பாஸ் (Bigg boss). மற்றவர்கள் வீட்டை எட்டி பார்ப்பது போல இருந்தாலும் அவர்கள் அனுமதியுடன் பார்க்கிறோம் என்பது ஒரு ஆறுதல் தரும் உண்மை.


சினிமாவில் நாம் நல்லவர்களாக நினைத்தவர்கள் சில சமயம் எதிர்பார்க்காத குணங்களோடு இருப்பதும் இவரா இப்படித்தானே என்று நாம் நினைத்தவர் எல்லாம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதும் இந்த நிகழ்ச்சியில் சாதாரணமாக காண முடியும்.இந்த வீட்டில் 100 நாட்கள் தானே என்று எளிதாக நினைக்க முடியாது. டாஸ்க் என்கிற பெயரில் சமயங்களில் நமக்கு சாப்பாடு கூட கிடைக்காது. ஆனாலும் அதுவரை ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தவர்கள் எல்லாம் டாஸ்க்கின் போது அடித்து கொள்வதும் பின்னர் மன்னிப்பு கேட்பதும் வேடிக்கை பார்க்கவும் நமக்கு சுவாரஸ்யமானது.


கடந்த சீசன் இரண்டில் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தாவின் வேறொரு முகத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருந்தனர் ரசிகர்களை. பாலாஜி இத்தனை நல்லவரா என்று ஆச்சர்யப்பட்டு முடிக்கும் முன்னரே அவர் மீண்டும் பழைய பார்முக்கு போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகையே அல்லாத நித்யா உள்பட நிறைய பேருக்கு பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. நிறைய பேரின் வாழ்க்கை மாறி இருக்கிறது. முதல் சீசனில் வென்ற ஆரவ் அப்போது மாடலிங் செய்து கொண்டிருந்தார் இப்போதோ சினிமாவில் நாயகனாகி இருக்கிறார். ஓவியா பற்றி பேச அவசியமில்லை. காயத்ரி மற்றும் ஜூலிகள் இன்னமும் அன்றைக்கு விதைத்ததற்கு அறுவடை செய்த வண்ணம் இருக்கின்றனர்.


இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன் 3 கான ப்ரமோவை வெளியிட்டிருக்கிறது. எதிர்பார்த்தபடியே அது கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட இருக்கிறது என்பது இப்போது உறுதியாகி இருக்கிறது.மற்ற போட்டியாளர் விபரங்கள் விரைவில் வெளியாகலாம்.இதனை ஒரு இணையவாசி பங்கமாக கிண்டல் செய்திருக்கிறார். சமீபத்தில் கமல் பேசிய அரசியல் பேச்சில் இந்து தீவிரவாதம் குறித்த அவரது கருத்து அரசியல் உலகை மிகவும் சூடாக்கி இருக்கிறது. பதிலுக்கு நான் நாக்கை அறுக்க வேண்டும் வேண்டும் எதிரணி அரசியல்வாதி பேச்சும் பரபரப்பாகி இருக்கிறது.


கமல்ஹாசன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பிரச்சாரங்கள் ரத்து என பலவகை விஷயங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கையில் விஜய் டெலிவிஷன் மிக கூலாக இந்த ப்ரமோவை வெளியிட்டிருக்கிறது.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் and twitter           


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.