மூன்று பேர் மூன்று காதல்.. சாக்ஷி.. லாஸ்லியா.. அபிராமி.. பிக் பாஸ் தருகின்ற காதல் பாடம் என

மூன்று பேர் மூன்று காதல்.. சாக்ஷி.. லாஸ்லியா.. அபிராமி.. பிக் பாஸ் தருகின்ற காதல் பாடம் என

இந்த பிக் பாஸ் சீசன் அனைவருக்கும் பிடித்த சீசனாகவே மாறி இருக்கிறது. பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியை "ஸ்க்ரிப்டட்" என்று சொல்லி வந்த பலரும் இந்த முறை நிகழ்ச்சியை கவனிக்கிறார்கள். சேரன் போன்றோர் உள்ளிருப்பதால் பல திரை நட்சத்திரங்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் கூட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாகவே கவனித்து வருகின்றனர்.

எந்த மாதிரியான போட்டியாளர்களை உள்ளே கொண்டுவந்தாலும் அதனைப் பார்த்து தொலைப்பது மக்களின் தலையெழுத்து என்கிற அலட்சிய எண்ணத்தை விட்டு விட்டு பிக் பாஸ் குழு (bigg boss team) நிதானமாக அலசி ஆராய்ந்து தேடித் தேடித் தேர்ந்தெடுத்த போட்டியாளர்களால் தான் இந்த சீசன் வெற்றியடைய மிக முக்கியமான காரணம்.

இத்தனை பொருள் செலவில் தயாரிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூட்ட கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பது பிக் பாஸின் விதிமுறையாக இருப்பதால் ஆளுக்கு ஒரு வியூகத்தை வகுத்துக் கொண்டு அதில் பங்கு பெறவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அல்லது அடுத்தவர்களின் வியூகத்தை உடைத்தெறிந்து அவர்கள் வழியே முன்னேறி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதில் கவின் எடுத்த கன்டென்ட் ஆயுதம் காதல். நான்கு பேரை காதலிப்பதால் அது சீரியஸாகத் தெரியாது என்கிற கண்ணோட்டத்தில் அவர் விளையாட ஆரம்பித்தாலும் இரண்டு பேர் நான் இந்த ஆட்டத்தில் இல்லை என்று கூறிவிட்டனர்,. மிஞ்சியது லாஸ்லியாவும் சாக்ஷியும் மட்டுமே. இதற்கு நடுவிலேயே சாக்ஷி மீது கவினுக்கு பொசசிவ்னெஸ் வந்தது. முகேன் வேண்டுமென்றே சாக்ஷிக்கு பொட்டு வைக்க அதைப் பார்த்து பொஸசிவ் ஆனார் கவின்.

Youtube

பெண்களின் உணர்வுகளோடு விளையாடுவதை தனது வழக்கமாக வைத்திருக்கும் கவின் பற்றி எதுவும் தெரியாத சாக்ஷிக்கு 10 நாள்களில் கவின் மீது ஃபீலிங்ஸ் உருவானது. இதற்கு காரணம் கவினின் பேச்சு சாமர்த்தியம்தான். இதனை சேரன் ஒரு எபிசோடில் தர்ஷனிடம் கூறி இருப்பார். வெறும் பேச்சை உண்மையென நம்பிய சாக்ஷிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது நீயா நானா டாஸ்கின் போதுதான். கவின் சாக்ஷி இருவருக்கும் இடையிலான உரையாடல்களில் கவின் தந்த நம்பிக்கை வார்த்தைகளை மற்ற சில ரகசிய செயல்களை உண்மையென நம்பிய சாக்ஷிக்கு தான் பேசிய எல்லாமே கன்டென்ட்க்காக மட்டுமே என்கிற கவினின் உண்மை முகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்றில் இருந்தே உடைந்து போனார்.

இவர்களின் காதல் பஞ்சாயத்தை கமல்ஹாசன் தனக்கே உரிய ஹாஸ்யத்தோடு முடித்து வைத்தார். ஆனாலும் அடுத்த வாரமும் அது தொடர கவின் லாஸ்லியா இடையிலான நெருக்கம் காரணமாக இருந்தது. அதுவரைக்கும் சாக்ஷியோடு கைப்பிடித்து பேசிக் கொண்டிருந்த கவின் கமல் தீர்ப்பு கூறிய அடுத்த நொடியே லாஸ்லியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். இது சாக்ஷியை மனரீதியாக மேலும் உடைய செய்தது.

எந்தப் பெண்ணாக இருந்தாலும் தனக்கு நம்பிக்கை கொடுத்த ஆண் அந்த வாக்கை காப்பாற்றாமல் போகும்போது தாங்கிக் கொள்ள முடியாது. பெண்களின் காதல் செவி வழி என்பது உளவியல் உண்மை. அவர்கள் ஒரு ஆண் பேசுவதை செவிமடுப்பதில்தான் காதலை தொடங்குகின்றனர். ஆண்களைப் போல விழிவழிக் காதல்கள் அவர்களது இயல்பிலேயே இல்லை. ஒரு ஆண் பழகும்போது தன்னிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் தன் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணின் கரங்களைப் பற்றியபடி நடை பயில்வதை எந்தப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியும்? சாக்ஷி இன்னமும் அந்த அதிர்ச்சியில் தனது உணர்வுகளை நோகடித்த கவினின் செய்கைகளில் இருந்து வெளியே வரவில்லை.

அதே சமயத்தில் கவினின் காதல் சாம்ராஜ்யம் லாஸ்லியாவை நோக்கி நீள்கிறது. இந்தப் பெண் போனால் இன்னொரு பெண் என்கிற கவினின் அலட்சிய மனோபாவம் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் சரவணன் மீனாட்சி தொடரின் ரசிகையான லாஸ்லியாவிற்கு இவ்வளவு நாள் இல்லாமல் கவின் தன்னோடு நெருக்கமாகப் பழகுவது பெருமையாக இருந்திருக்கிறது. அவரும் அனுமதித்தார்.

Youtube

ஆனால் நடுவில் சாக்ஷி ஜெயிலில் இருந்தபோது உண்மைகளைத் தெரிந்து கொண்ட லாஸ்லியா கவின் மீது கோபப்படுகிறார். கன்டென்ட்க்காக பெண்ணின் உணர்வுகளோடு விளையாடுவதா என்று கவினிடம் சீறுகிறார். நீ இப்போது பேசுவது கூட நடிப்பாக இருக்கலாம் என்று வெறுக்கிறார். கவினை வார்த்தைகளால் அவமதித்து விட்டு அங்கிருந்து நடந்து போகிறார். இதனைப் பார்க்கும்போது வாவ் லாஸ்லியா என்று சொல்லாமல் இருக்கவே முடியவில்லை.

கவினின் உலகின் பெரிய அழகி நீதான் நீ சிறு வயது பெண் போன்ற வார்த்தை ஜாலங்கள் லாஸ்லியாவின் மனதை அசைக்கின்றன. கோபத்தைக் குளிர வைத்து லாஸ்லியா உடன் மீண்டும் இணைகிறார் கவின். அதற்காக சாக்ஷி பற்றிய சில விஷயங்களை மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். அதே கண்ணோட்டத்தில் சாக்ஷியைப் பார்த்த லாஸ்லியாவிற்கு சாக்ஷி மீது வெறுப்பு வந்திருக்கிறது.

அதே சமயம் மொத்த வீட்டு மனிதர்களும் சாக்ஷிக்கு ஆறுதல் சொல்வதால் குற்ற உணர்வோடும் இருந்த லாஸ்லியா பின்னர் உணர்ச்சி வேகத்தில் குடும்பத்தினரை கவினுக்காக அவமதிக்கிறார். இது எல்லாம் தெரிந்த கவின் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கிறார். தனது கன்டென்ட் காதலால் நடந்த எதிர்வினைகளை கவின் எதிர்கொண்ட விதம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அருவெறுப்பு உணர்வைத் தான் தந்தது. அப்போதும் கவின் சாக்ஷியை சாடுகிறார். பழி சொல்கிறார். உன்னால்தான் லாஸ்லியாவிற்கு கெட்ட பெயர் என்கிறார். சாக்ஷி தனக்கு கவின் இன்னொரு வாய்ப்பு தருவான் என்ற நம்பிக்கையில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறார்.

கவினுக்கு வெளியில் காதலி இருக்கட்டும்.அந்தக் காதலியும் கண்டென்ட்டுக்காக கவின் காதலிப்பதையும் கடன் அடைப்பதற்காக வீட்டில் தனது இருப்பை நீட்டித்துக் கொள்வதற்காகவே அதை செய்வதாகவே நம்பிக்கொள்ளட்டும். அது நமது பிரச்னை இல்லை. சாக்ஷி பக்க உண்மைகளை அறிந்த பின்னர் லாஸ்லியா ஏன் கவினுடன் கதைக்க வேண்டும். உன்னுடன் கதைக்காமல் இருக்க முடியலை என்று வருந்த வேண்டும். ஒருபெண்ணின் மனதில் நுழைந்து அவள் மனதில் காதல் விதைத்து பின்னர் கண்டென்ட்டுக்காக என்று நகர்ந்த கவின் தன்னை என்ன செய்வான் என்பது ஒரு செய்தி தொகுப்பாளரான லாஸ்லியாவிற்கு ஏன் இப்போது வரை புரியவில்லை? அடுத்தவரின் காதலை அபகரிக்க நினைப்பது தான் நவீன காதலின் வளர்ச்சியா?

Youtube

அடுத்து அபிராமி முகேன் காதலை எடுத்துக் கொண்டோம் என்றால் அபிராமிக்கு வந்த முதல் நாளே கவின் மீது ஃபீலிங்ஸ் ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் வரும் முன்பு முகநூலில் இன்பாக்சில் காட்டிய கவினின் வார்த்தை ஜாலமாகக் கூட இருக்கலாம். ஒரே வாரத்தில் கவினின் செய்கைகள் கவின் தனது உணர்வுகளை மதிக்காமை ஆகிய காரணங்களுக்காக விலகிய அபி உடனடி cope up mechanism ஆக முகேனைத் தேர்ந்தெடுக்கிறார்.

முகேனுடன் பாட்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார். இதன் பின்னணிக் காரணத்தை நன்கு உணர்ந்த மதுமிதா முகேனை எச்சரிக்கிறார். அது இப்போதுவரை அபிராமிக்கு மதுமிதா மீதான வளர்ப்பை அதிகரித்தபடி செல்கிறது. அப்படியே முகேனுடன் நட்பான அபிராமி தனது காதலை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். சபையிலும் அதனை பதிய வைக்கிறார். இது முகேனுக்கு pressure தருகிறது. தனக்கு ஒரு காதலி வெளியே இருக்கிறார் என்பதை அபிக்கு சொல்கிறார். அபிராமியோ பரவாயில்லை உனது காதலி உனக்கு இல்லாமல் போனால் உனக்காக நான் இருக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

அன்பிற்காக ஏங்கிய முகேனுக்கு அன்பை மதிக்க வேண்டும் என்கிற குணம் இருக்கிறது. ஆகவே அபிராமியின் அன்பை மதித்து நட்பாக ஏற்றுக் கொள்கிறார். அதனை அடிக்கடி அபிராமியிடம் உணர்த்துகிறார். ஆனாலும் அபிராமி பிடிவாதமாக ஒருதலை ராகம் பாடுகிறார். தன்னைப் பற்றி அபிராமி கூறும்போது ரிலேஷன்ஷிப்பிற்காக அவ்வளவு நாள் வளர்த்த அம்மாவை 4 மாதங்கள் பிரிந்ததாகக் கூறுகிறார். இதில் இருந்து அபிராமிக்கு ரிலேஷன்ஷிப் லவ் என்பது அடிக்கடி வந்து போகும் செயல் என நன்கு புரிகிறது.

பிக் பாஸ் வீட்டில் சீரியஸாக நடந்த நடந்து கொண்டிருக்கிற இந்த மூன்று பேர் மூன்று காதல் விஷயங்கள் நமக்கு ஒன்றைப் புரிய வைக்கின்றன. காதல் என்பதன் ஆழத்தை இவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான். இப்படித் தங்கள் காதலைப் பலருடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் பெருந்தன்மைவாதிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.