மீராவை இழுத்து அருகே அமர்த்திய சரவணன்.. கொதிக்கும் சேரன்.. இன்றைய Bigg Boss !

மீராவை இழுத்து அருகே அமர்த்திய சரவணன்.. கொதிக்கும் சேரன்..  இன்றைய Bigg Boss !

பிக் பாஸ் (bigg boss) வீடு கடந்த வார காதல் சோகம் மற்றும் அழுகை காட்சிகளால் கொஞ்சம் கலகலத்துத்தான் போயிருந்தது. இதனை சரி செய்ய நினைத்த பிக் பாஸ் இன்று வேறு விதமான டாஸ்க் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

சரவணன் தலைமையில் ஒரு குழு ஏற்கனவே வீட்டில் இருக்கிறது. அதில் மிக அதிகமாக சரவணனால் கேலி கிண்டல் செய்யப்படுபவர் சேரன். இது பற்றி ஏதும் அறியாத சேரன் தான் பாட்டுக்கு தனது விஷயங்களை செய்தபடி இருக்கிறார்.

அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

Youtube

ஏற்கனவே பிரிந்த வீட்டில் மேலும் சண்டை மூட்டி பார்க்க ஆசைப்பட்டுள்ள பிக் பாஸ் இப்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறார். டாஸ்கின் படி வீடு இரண்டாகப் பிரிய வேண்டும். கீரிப்பட்டி மற்றும் பாம்புப்பட்டி என்கிற பெயரில் பிரியும் குழுவினரின் ஈகோவுடன் விளையாடுவதுதான் டாஸ்க் போல.

ஒரு குழுவை சேர்ந்தவர்கள் சொல்லும் வேலைகளை செய்தால்தான் இன்னொரு குழுவிற்கு சாப்பாடு கிடைக்குமாம். ஆகவே இஷ்டத்துக்கு பழி வாங்கிக்கொள்ள இதுவே நேரம் என்பது போலவே குழுவினர் நடந்து கொள்கிறார்கள்.

இந்த டாஸ்கில் உற்சாகமான சரவணன் மீராவை இழுத்து தனது மடியில் அமர்த்துகிறார். ஞாயிற்றுக்கிழமை சரவணன் காப்பாற்றப் பட்ட சமயம் மீரா கட்டி அணைத்து தனது சந்தோஷத்தைப் பகிர முயல சரவணன் கண்களாலேயே முறைத்துப் பார்த்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.                              

நிஜத்திலும் நடிக்கும் பிரியங்கா சோப்ரா ? வைரலாகும் 'புகை' படம் !

சேரனுக்கும் மீராவுக்குமான சண்டையை இரண்டாவது ப்ரோமோவில் காட்டியிருக்கிறார்கள். பஞ்சாயத்து நாட்டாமை ஸீன் என்பதால் அதற்கான கதைக்களத்திற்கு ஏற்ப சேரன் பேச அதனை பர்சனலாக எடுத்துக் கொள்ளும் மீரா வெறுப்புக்கொடியை உயர்த்துகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழக்கும் சேரன் மீராவோடு இனிமேல் பேச்சு வார்த்தையே வேண்டாம் என்கிறார். உச்சகட்ட ரத்த அழுத்தத்தில் சேரன் இருப்பது ஸ்பஷ்டமாகவே தெரிகிறது. தூண்டி விட்ட மீரா சாதித்து விட்ட நிம்மதியில் சாதுவாகவே காட்சி அளிக்கிறார்.                        

மொத்தத்தில் பிக் பாஸ் வீடே கிராமத்து வீடாக மாறியதால் பார்வையாளர்கள் ஆவலாக இன்றைய நாளை எதிர்பார்க்கின்றனர்.    

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                       

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.