நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார் ! பிக் பாஸ் பிரபலத்தின் அதிர்ச்சி அறிக்கை !

நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார் ! பிக் பாஸ் பிரபலத்தின் அதிர்ச்சி அறிக்கை !

ஆடை படத்தில் அமலா பால் நடித்த பின்னர் அவரது க்ராஃப் வேறு உயரத்திற்கு சென்று விட்டது. துணிந்து தன்னை நிர்வாணமாக காட்ட அமலா பால் முடிவெடுத்த பின்னர் அந்த படத்திற்காக அவர் மனரீதியாக பல உளைச்சல்களைத் தாண்டித்தான் அந்த வேடத்தில் நடிக்க முயற்சித்திருப்பார்.

இதனைப் பற்றி அந்தப் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் கூறுகையில் நிர்வாண காட்சிகளில் நடிக்கும்போது அமலா பாலைப் பார்க்கையில் பாவமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையான பிந்து மாதவி கூறுகையில் கதைக்கு தேவைப்படும் என்றால் அமலா பால் போலத் தானும் நிர்வாணமாக (nude) நடிக்கத் தயார் எனக் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

 

Youtube

நடிகை பிந்து மாதவி தேசிங்கு ராஜா , கழுகு போன்ற பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான புகழ் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் அறிமுகமான பிந்து மாதவி நிகழ்வின் இறுதி வரை போட்டியாளராகவே இருந்தார்.

பிக் பாஸ் மூலம் புகழடைந்த பிந்து மாதவி தற்போது கழுகு படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ப்ரோமோவில் கலந்து கொண்டார். இந்தப் படத்தின் ப்ரோமாவிற்காக டிவி பேட்டிகள் பல கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில்தான் தானும் அமலா பால் போல் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று கூறி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஆடை படத்தில் அமலாபாலின் கதாபாத்திரத்தை புகழ்ந்தும் பேசி இருக்கிறார். ஒரு வெகுளி பெண் வில்லன்களிடம் சிக்கு அதன் மூலம் நிர்வாணமாகி அதன் பின்னர் தைரியம் வந்து சூழலை எதிர்க்கும் பெண்ணாக அமலா பாலை காட்டாமல் ஆரம்பம் முதலே அவர் தைரியமான பெண்ணாக காட்டியிருப்பது நல்ல முயற்சி என்று கூறி இருக்கிறார் பிந்து மாதவி.

Youtube

அமலா பால் பிரச்னையில் மாட்டிக் கொள்வதும் அதனை அவர் தைரியமாக எதிர்கொள்வதும் அழகாக துளி விரசம் இல்லாமல் காட்டப்பட்டிருக்கிறது. இதற்காக துணிந்து நடித்த அமலாபாலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.                                       

இதைப் போல எனக்கும் நிர்வாணக் கதாபாத்திரம் கிடைத்தால் நானும் நடிக்கத் தயார். ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்காக நான் எந்த எல்லை வரைக்கும் வேண்டுமானாலும் சென்று உழைக்கத் தயாராக இருக்கிறேன். அதற்கு ஏற்றாற்போல நல்ல கதை அமைய வேண்டியது முக்கியம் என்று கூறி இருக்கிறார் பிக் பாஸ் பிந்து மாதவி.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                        

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.