லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

பிக் பாஸ் சீசன் 3 வியாபாரம் சூடு பிடித்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்றன. வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தது முதலே வனிதாவின் ராஜ்யம் கொடி கட்டாமலே பறந்து கொண்டிருந்தது. 


சேரன் சரவணன் தர்ஷன் உள்ளிட்ட பலர் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆனாலும் சேரன் சூழ்நிலையை அடாப்ட் செய்து கொண்டு அதற்கேற்றவாறு மாறி இருந்தார். சரவணன் வெறும் அப்சர்வர் ஆக இருந்து நடப்பதையெல்லாம் உள்வாங்கி கொண்டிருக்கிறார். எதிர்வினை ஆற்றவில்லை.


இப்படி அனைவரையும் ஒரு காட்டு காட்டிக் கொண்டிருந்த வனிதா விஜயகுமார்தான் பிக் பாஸ் (bigg boss) TRB யை ஏற்றி வருவதாக கூறப்பட்ட நிலையில் அதிரடியாக கடந்த ஞாயிறு அன்று வனிதா வெளியேற்றப்பட்டார். மோகன் வைத்யா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வனிதா வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

40 வயதான நடிகை ஸ்ருதி இன்னும் திருமணம் செய்யாதது ஏன் ? அவருக்கு இப்படி ஒரு துயரமா?

Youtube

அதன் பின்னர் கேமராவின் கண்கள் மீரா மிதுன் பக்கம் திரும்பியது. இனி நாம் பயப்பட வேண்டிய ஆள் இங்கு இல்லை என்பதால் மீரா அதிகமாக பேசி வருவது போலக் காட்டப்பட்டது. 


இப்போது அதிலும் திருப்தியடையாத பிக் பாஸ் அடுத்த அதிரடி போட்டியாளரை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெயிட்டான வனிதாவை வெளியேற்றி அதை விட வலிமையான போட்டியாளரை உள்ளே அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. 


பிக் பாஸ் முதல் நாள் விழாவிலேயே கமல்ஹாசன் இதனைப் பற்றி கோடி காட்டியிருந்தார். 15 போட்டியாளர்கள் ஏற்கனவே அறிமுகமான நிலையில் இன்னும் இரண்டு பேர் உள்ளே செல்ல இருப்பதாக அவர் கூறினார். அதில் ஒருவராக மீரா மிதுன் நுழைந்து விட்டார். அடுத்த ஆள் யார் என்பது இன்னும் வெளிவராமல் இருக்கிறது. 

நெஞ்சுக்குள் நுழைந்தாய்.. மூச்சினில் கலந்தாய்.. தமிழின் தேவதூதன் கவிஞர் நா.முத்துக்குமார்

Youtube

17வது போட்டியாளராக வருவதற்கு பார்வையாளர்கள் விருப்பமாக நடிகை சங்கீதா இருக்கிறார். அவர் வந்தால் மீரா மிதுனை ஒரு கை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 


ஆனால் கசிந்த தகவல்கள் படி உள்ளே அதிக வாக்குகளோடு முதலிடத்தில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பது எல்லோரும் அறிந்தது தான். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு போட்டியாளரை களமிறக்க பிக் பாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 


அதற்கு தகுந்த போட்டியாளர் சின்னத்திரை செம்பாவான ஆல்யா மான்ஸா தான் என்றும் லாஸ்லியாவை விடவும் அதிக ரசிகர்கள் அவருக்கு இருப்பதாகவும் அவரை விடவும் நடனம் ஆடுவதில் வல்லவர் ஆல்யா என்பதால் அவரை களமிறக்க இருப்பதாகவே கூறப்படுகிறது. 

மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

Youtube

ராஜா ராணி சீரியல் தற்போது முடிவுக்கு வந்த நிலையில் இடைப்பட்ட இடைவெளி இருப்பதால் இதில் ஆல்யா மான்ஸா செல்ல இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பிக் பாஸ் ஆரம்பிக்கும் முன்பு வெளியான பட்டியலில் ஆல்யாவின் பெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும் இன்னும் உறுதியான தகவல்கள் வராததால் இதற்காக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

தூரத்தில் நீ வந்தாலே.. என் மனசில் மழையடிக்கும்.. உங்கள் க்ரஷ்'சை ஈர்க்க சில வழிமுறைகள் !

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.