பிக் பாஸ் 3ல் மீண்டும் கலந்து கொள்ள போகும் ஐஸ்வர்யா தத்தா ? அய்யோ சாமி மறுபடி முதல்லருந்தா !!

பிக் பாஸ் 3ல் மீண்டும் கலந்து கொள்ள போகும் ஐஸ்வர்யா தத்தா ? அய்யோ சாமி மறுபடி முதல்லருந்தா !!

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸில் ஒட்டு மொத்த தமிழகத்திடம் இருந்தும் உலக அளவிலும் மோசமாக விமர்சிக்கப்பட்டவர் யார் என்றால் அது ஐஸ்வர்யா தத்தா தான். ( Aishwarya dutta)


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா தத்தா வந்த புதிதில் கொழுக் மொழுக் என்று பெங்காலி பெண்களின் அழகை பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தார். இண்டிபெண்டண்ட் என்றால் என்ன என்று தெரியாத ஐஸ்வர்யாவிற்கு எப்போதும் யாரையாவது சார்ந்திருக்க வேண்டி இருந்தது.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !மஹத் தோ , யாஷிகாவோ, ஷாரிக் கானோ யாரோ ஒருவருடன் அவர் சார்ந்தபடியேதான் இருந்தார். ஒருவேளை அவரது உணர்வு நிலைகளை கட்டுப்படுத்த இன்னொருவர் உதவி தேவையாக இருந்ததோ என்னவோ. ஆனால் திடீரென ஒரு டாஸ்கில் பிக் பாஸ் வீட்டின் ராணியானார் ஐஸ்வர்யா.


ஐஸ்வர்யா பற்றி எல்லாம்' தெரிந்த பிக் பாஸ் தான் இந்த பட்டத்தை கொடுத்து அழகு பார்த்தாரோ என்னவோ.. இந்த பட்டம் கிடைத்த உடனே மனதில் அவ்வளவு நாட்களாக வைத்திருந்த பழி பகைகளை இந்த பதவியின் மூலம் தீர்க்க முடிவு செய்தார். முதல் பலியே பாலாஜி ஆகி போக அத்தனை மக்களின் வெறுப்பையும் ஒரே நாளில் சம்பாதித்து கொண்டார் ஐஸ்வர்யா.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! அதன் பின்னர் விளையாட்டில் ஜெயிக்க சென்றாயனிடம் பொய் சொன்னார் ஐஸ்வர்யா. அந்த பால் வடியும் முகமா இப்படி எல்லாம் செய்கிறது என்று பார்த்து கொண்டிருந்தவர்கள் நினைத்திருப்பார்கள். இவரது ஆதிக்க நடவடிக்கைள் அதிகரிக்க உள்ளிருந்து எதிர்ப்பு வலுத்தது. நடுநிலை வாதி ஜனனி கூட கோபத்தை வெளியே காட்டினார்.


அம்மா வந்த பின்னர் தனது தவறை உணர்ந்த ஐஸ்வர்யா தத்தா மீண்டும் மற்றவர்களோடு தன்னை ஒன்றிணைத்து கொள்ள முயன்றார். மன்னிப்பு கேட்டது சென்றாயன் பற்றி கிண்டல் செய்தது என மீண்டும் மனதில் இடம் பிடிக்க நினைத்தாலும் பார்த்தவர்களுக்கு ஐயோ பாவம் என்கிற மனநிலைதான் இருந்தது.


பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் ஏதோ ஒன்றை ஒப்புக்கு கூறி ஐஸ்வர்யாவை காப்பாற்றி வந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.


நமக்கு பிடிக்காதவர்களை நம் அருகிலேயே வைத்திருக்க நாம் விரும்பாத நிலையிலும் நியாயம் வெல்லும் நீதி ஜெயிக்கும் என்றெல்லாம் நம் மனதை சமாதானப்படுத்திதான் ஒவ்வொரு நாளும் நமக்கு பிடிக்காத நபர்களையும் பிக் பாஸில்பார்த்து தொலைத்தோம். முதல் சீசனில் இருந்த உண்மைத்தன்மை இயல்பு ஆகியவை இங்கே தவறியிருந்ததுதான் இதற்கு காரணம்.


ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.. !பிக் பாஸின் பாரபட்ச நடவடிக்கைகளால் கண்டிப்பாக வின்னர் ஐஸ்வர்யாதான் என்றே கிட்டத்தட்ட முடிவாகி இருந்த நிலையில் கடைசி நிமிட மாறுதலாக ரித்விகா ஜெயித்து நம்மை ஆறுதல் அடைய செய்தார். ஆனாலும் பாரபட்ச வேலைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பிக் பாசில் ரன்னர் அப் ஆக ஐஸ்வர்யா வந்திருக்கவே முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் அவர் இறுதியில் ரன்னர் அப் ஆனார். நாமும் அப்பாடா இனி ஐஸ்வர்யாவை பார்க்க வேண்டியதில்லை என்று ரன் செய்தோம்.


ஆனால் இப்போதைய தகவலின் படி ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸின் மூன்றாவது சீசனுக்கு வர போகிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இந்த முறையும் இவர் வந்தால் ஸ்டார் விஜய் கனெக்ஷனை கட் செய்து விடலாம் என மக்கள் முடிவெடுத்த நிலையில் வேறொரு நல்ல செய்தியும் வந்திருக்கிறது.


எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !ஐஸ்வர்யாவிற்கு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பம் இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் ஒரு கெஸ்ட் ரோலில் சென்று ஒரு வாரம் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


ஒரு வாரமே என்றாலும் மீண்டும் அந்த முகத்தை பார்க்க வேண்டுமா என்று ஒரு பக்கம் மக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்,


சென்ற முறை தனது நடுநிலை தன்மையில் இருந்து சற்றே விலகி ஐஸ்வர்யாவிற்கு சலுகைளை அள்ளி தந்த பிக் பாஸ் இந்த முறையாவது நேர்மை நியாயம் போன்றவற்றை கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.