உங்களுக்கும் வேண்டுமா என்றும் இளமை- நடிகை தமன்னாவின் அழகு ரகசியங்கள்!

உங்களுக்கும் வேண்டுமா என்றும் இளமை- நடிகை தமன்னாவின் அழகு ரகசியங்கள்!

நடிகை தமன்னா என்றதுமே துறுதுறு மற்றும் பக்குவப்பட்ட நடிப்புதான் நினைவுக்கு வரும். கூடவே நினைவுக்கு வருவது இன்று வரை அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இளமை. கல்லூரி திரைப்படத்தில் தமன்னா பாட்டியா (tamannaah bhatia) அறிமுகம் ஆகும்போதே அத்தனை அழகாக இருந்தார்.

நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் அன்று பார்த்த அதே தமன்னாவைத்தான் பார்க்க முடிகிறது. உடல் எடையில் கூட ஏற்ற இறக்கம் இல்லாமல் எப்படி அன்று பார்த்த அதே 16 வயது இளமை இன்றும் தமன்னாவுக்கு மட்டும் சாத்தியம் ஆகிறது என்கிற ஏக்கம் எல்லோருக்குள்ளும் உண்டு.

தமன்னா என்றாலே அவரது ஸ்கின்டோன் அனைவருக்கும் நினைவுக்கு வரும். சுண்டி விட்டால் சிவக்கும் பேரழகு என்பது தமன்னாவிற்கு மட்டுமே அற்புதமாக பொருந்தும். சிந்திப் பெண்ணான தமன்னா இயல்பாகவே நிறம் என்பதை தனது மரபணுக்களில் பெற்றவர்.

ஆனாலும் சினிமாவில் வைக்கப்படும் லைட்டிங் வெப்பம் நடிகைகளின் இயல்பான அழகை சில வருடங்களில் கேள்விக்குறி ஆக்கி விடும். நடிகை தமன்னா இதிலிருந்து மாறுபட்டு தன்னுடைய இயல்பான நிறத்தையும் வடிவத்தையும் இன்றுவரை இளமை மாறாமல் அப்படியே வைத்திருக்கிறார்.

இங்கே அவர் தினமும் என்ன சாப்பிடுகிறார் என்ன செய்கிறார் என்பதற்கான பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் நீங்களும் முயலுங்கள். வாழ்வில் என்றும் 16 போன்ற இளமை உங்களுக்கும் சாத்தியப்படும்.

மகள் பற்றிய கனவை கடைசி வரை சொல்லாத கல்பனா.. அம்மாவின் கனவை நனவாக்கும் மகள் ஸ்ரீமயி !

Youtube

டயட்

காலையில் எழுந்ததும் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்த பானம் மற்றும் சில பாதாம்கள் எடுத்துக் கொள்கிறார் தமன்னா.

காலை தமிழக உணவான இட்லி/தோசை உடன் சாம்பார் சட்னி அல்லது ஓட்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்கிறார் தமன்னா.

மதிய உணவாக சாதம் ஒரு கப் (பாசுமதி அரிசி) பருப்பு ஒரு கப் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்கிறார் தமன்னா.

இரவு புரதம் அதிகம் கொண்ட உணவுகளான சிக்கன்/ மீன்/ மட்டன் வகைகள் எடுத்துக் கொள்கிறார் தமன்னா.

தமன்னா இவரது டயட் லிஸ்டில் ஸ்பெஷலானது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு சாப்பிடுவது தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது. நிச்சயமாக பழச்சாறும் இளநீரும் இவரது டயட்டில் உண்டு.

இப்படியான ஒரு டயட்டை நீங்களும் கடைபிடித்து வந்தாலே ஆரோக்கியமான உடலை நீங்கள் பெற முடியும். அதன் பின்னர் உங்கள் ஸ்கின்டோன் மெருகேறுவதை நீங்களே கண்கூடாக காணமுடியும். இளநீர் உண்மையாகவே சருமத்தின் அழகை பேணிக் காக்கிறது. அதனை அடிக்கடி அருந்தி வந்தாலே போதுமானது.

Youtube

உடற்பயிற்சி

அன்றாடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஷூட்டிங் இருந்து ஜிம் போக முடியாத நாட்களில் தமன்னாவிற்கு நடைபயிற்சியாவது செய்து விட வேண்டுமாம்

தமன்னாவின் பிடித்தமான உடற்பயிற்சி ஃபங்க்ஷனல் ட்ரையினிங் என்பதாகும்.

கலோரிகள் கூடுதலான உணவு உட்கொண்ட நாட்களில் தமன்னா கார்டியோ பயிற்சிகள் கட்டாயம் செய்து விடுவாராம்.

சர்க்கரை உள்ள உணவுகளுக்கு நோ சொல்லும் நல்ல பழக்கம் தமன்னாவுக்கு இருப்பதே இளமைக்கு காரணம்.

அதைப் போலவே மன அழுத்தத்தை சரி செய்ய யோகா செய்வதும் அவரது வழக்கம். என்றாவது வருடத்தில் இரண்டு நாட்கள் டயட் விடுத்தது தாறுமாறாக சாப்பிட அவர் தேர்ந்தெடுப்பது பிஸ்தா சாக்லேட் அரிசிவகை உணவுகள் தான்.

இது தான் தமன்னாவின் டயட் மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சிகளின் அட்டவணை. இதனைப் பின்பற்றினால் நாமும் நம்மிடம் இப்போது இருக்கின்ற மிச்ச இளமையை அப்படியே பராமரிக்க முடியும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!