ஆபாச வீடியோக்கள்.. பலியாகும் குழந்தைகள்.. டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் சென்னை ஹை கோர்ட் !

ஆபாச வீடியோக்கள்.. பலியாகும்  குழந்தைகள்..  டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் சென்னை ஹை கோர்ட் !

சைனாவின் ஆப் (app) ஆன டிக் டாக் (tiktok)  பற்றி கிராம சந்து பொந்துகளில் கூட தெரியாதவர்கள் இருக்க முடியாது. வயது வந்தவர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி நடித்து அதனோடு பாடல்களை அல்லது குரல்களை இணைத்து உலகில் உள்ள அனைவரும் பார்க்கும்படி வெளியிடும் வீடியோ தான் டிக் டாக்.


இதில் வயது வரம்பெல்லாம் இல்லை என்பதால் சிறு குழந்தைகள் முதல் 70வயது பெரியவர்கள் வரைக்கும் அவரவருக்கு பிடித்த சினிமா காட்சிகள் பாடல்கள் என நடித்து அதனை ஆப் மூலம் அனைவரும் காண செய்கின்றனர்.


இது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்று முன்பே ஒரு சிலரால் பேசப்பட்டது. ஆனாலும் இன்றுவரை டிக் டாக் செயலி வெற்றிகரமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது.இந்த செயலி அடுத்த தலைமுறையை நிச்சயம் பாதிக்கும் என்பதை உணர்ந்த மதுரை சீனியர் வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகரான முத்து குமார் இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி வழக்கு தொடர்ந்தார்.


அது நேற்று மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சிற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் இருவருமே இந்த டிக் டாக் செயலியின் தீமையை உணர்ந்து இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வலியுறுத்தி இருக்கிறார்கள்.


இதில் வயது வந்தவர்கள் பெண்கள் என தங்கள் திறமையை காட்டுவதாக நினைத்து தேவையற்ற மிருகங்களின் கண்களுக்கு இரையாகின்றனர். முக்கியமாக குழந்தைகள் இதன் மூலம் பெரிய பாதிப்பை அடையலாம் என கருதப்படுகிறது.


மேலும் இந்த டிக் டாக் செயலியில் பல பார்க்கவே கூசும் பாலியல் காட்சிகள், உடல் உறவு விடியோக்கள், தற்கொலை காட்சிகள், இந்த செயலியை பயன்படுத்தும் குழந்தைகளின் மனங்களை நேரடியாக பாதிப்படைய செய்கிறது என்று தனது வழக்கில் திரு முத்துக்குமார் வலியுறுத்தி இருக்கிறார்.குழந்தைகள் நேரடியாகவே பல காம மிருகங்கள் கையில் அகப்படும் வாய்ப்புகள் இந்த டிக் டாக் செயலியில் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதனை பயன்படுத்தும் குழந்தைகள் அல்லது பக்குவமற்றவர்கள் காம இரை தேடி அலையும் மனித மிருகங்களின் கையில் சிக்கி சீரழிவார்கள் என்று தனது வாதத்தை தெளிவாக கூறியிருக்கிறார் முத்துக்குமார்.


வருகின்ற ஏப்ரல் 16ம் தேதிக்குள் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்கிற வலியுறுத்தலுக்கு பதில் கூறுமாறு மத்திய அரசிடம் சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ்கள் உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் இது அபாயகரமான செயலி என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்றும் சமூகத்திற்கு தேவையில்லாத ஒரு செயலிதான் இந்த டிக் டாக் என்றும் அவர்கள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.இதுபற்றி பேசிய டிக் டாக் செயலி செய்தியாளர் நாங்கள் சரியான முறையில் இதனை வடிவமைத்து வருகிறோம். நீக்க வேண்டியவைகளை நீக்கி மேலும் பயனர்களை பயன்படுத்துமாறு இதன் வடிவத்தை மாற்றி அமைக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.


இந்த செயலி தடை குறித்த மத்திய அரசின் பதிலில் தான் எதிர்கால இந்தியாவான குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநலம் போன்றவை இருக்கிறது என்கிறார்கள் இதன் எதிர்ப்பாளர்கள்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.