அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் - விமர்சனம்

அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் - விமர்சனம்

டிக்கெட்டுகள் எல்லாம் முன்பே புக்கிங் தீர்ந்து போன நிலையில் ரேஷன் கடை போல நீண்ட க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருக்கிறது அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்.(Avengers the endgame)


இதற்கு முன் வந்த அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக வருவதால் இந்த படம் உலகின் எல்லா மூலைகளிலும் நிறைய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. தமிழ் நாடும் இதற்கு தப்பவில்லை.


கேப்டன் மார்வெல் - திரைப்பார்வை2018ல் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் தானோஸ் பிரபஞ்சத்தில் உள்ள பாதி மக்களை கொன்று விடுவான். அதே நேரம் சூப்பர் ஹீரோக்களில் சிலர் காணாமல் போய் விடுவார்கள். மிஞ்சியது அயர்ன்மேன் மற்றும் நேபியூலா தான். இவர்களை கேப்டன் மார்வெல் பூமிக்கு கொண்டு வருகிறார். தி எண்ட் கேம் திரைப்படம் இதிலிருந்து ஆரம்பிக்கிறது.


தானோசின் மகள் நேபியூலா மூலம் தானோசை அழிக்க முடிவெடுக்கும் அவெஞ்சர்ஸ் தானோஸ் கைப்பற்றிய கற்களை தாங்களும் கைப்பற்றினால்தான் சமமாக முடியும் என்று நினைக்கிறார்கள். இதற்காக டைம் மெஷின் மூலம் அவெஞ்சர்ஸ் மூன்று குழுக்களாக பிரிகின்றனர். 2012,2014,1970 என மூன்று காலங்களுக்கு அவர்கள் மெஷின் உதவி மூலம் செல்கின்றனர்.


"ரஜினியின் படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்" - ஹாலிவுட் டைரக்டர் ஜோ ரஸ்ஸோ - அவெஞ்சர்ஸ்2014ம் ஆண்டு தானோஸிடம் இருந்து கற்களை கைப்பற்றும் சமயம் தானோஸுக்கும் டைம் மெஷின் ரகசியம் தெரிகிறது. அதன் மூலமாகவே வந்து அவெஞ்சர்ஸ்சை தாக்குகின்ற சமயம் மறைந்து போன சூப்பர் ஹீரோக்கள் உதவிக்கு வருகிறார்கள். இதில் யார் வென்றது என்பது க்ளைமாக்ஸ்.


டைம் மெஷின் ஆராய்ச்சியில் மாட்டி கொண்ட ஹேண்ட் மேன் அவெஞ்சர்ஸ் ஹீரோக்களை ஒன்றிணைத்து டைம் மெஷின் பற்றி விவரித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்து விடுகிறது. சாகச காட்சிகள் எல்லாம் இடைவேளைக்கு பின்னர் வருகிறபடி வைத்திருப்பதால் முதல் பாதி சுவாரசியம் குறைகிறது.


இடைவேளைக்கு பின்னர் டைம் மெஷின் சுவாரஸ்யங்கள் ஆரம்பிக்கின்றன. குறிப்பாக 70களில் அயர்ன் மேன் அவரது தந்தையை சந்திப்பது அழகு.


பாகுபலி பாகம் மூன்றில் அவெஞ்சர்ஸ் ஸ்டார் இணைகிறாரா!கேப்டன் அமெரிக்கா அன்றும் இன்றும் ஆகிய இருவரும் 2012ல் ஒருவரை எதிர்ப்பது சுவையாக இருக்கும். ஹல்க் பெண் துறவி மூலம் ஒரு கல்லை வாங்கி வருகிறார்.


2014ம் வருடம் மொராக் கிரகத்திற்கு செல்லும் ப்ளாக் விடோ, ஹாக் மற்றும் வார்மிர் அங்கிருக்கும் கல்லை எடுக்கமுயல்கையில் அசம்பாவிதமாக இவர்களில் ஒருவர் இறந்து போகிறார்.


அவெஞ்சர்ஸ் தனது கற்களை எடுக்க திட்டமிடுவதை உணர்ந்த தானோஸ் 2014 இருந்து 2019ற்கு வந்து அவர்களுடன் சண்டை இடுகிறான். இதுதான் எண்ட் கேம்.


சூப்பர் டீலக்ஸ் - பெண்கள் மீதான பார்வையை அகலமாக்குகிறதுஇதில் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்க அயர்மென் பேசும்போதெல்லாம் ரசிகர்கள் அலறுகிறார்கள். அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதி குரல் பொருந்தவில்லை என்று காட்டமாக விமர்சிக்கின்றனர் ரசிகர்கள். ப்ளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருக்கிறார்.


இனி மீண்டும் அவெஞ்சர்ஸ் வருமா எனும் ஏக்கத்தில் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அந்த ஏக்கம் நம்மையும் தொற்றி கொள்கிறது.


வார இறுதிக்கு ஏற்ற பொழுதுபோக்கு திரைப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்


வாழ்தலிற்கான ரகசிய வரைபடம் - சூப்பர் டீலக்ஸ்!படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.