விவாகரத்துக்குப் பின்பான வாழ்க்கை.. முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்த அமலா பால் !

விவாகரத்துக்குப் பின்பான வாழ்க்கை.. முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்த அமலா பால் !

அமலா பால் சர்ச்சைகளைத் தாண்டிய தேடல்கள் உள்ள ஒரு நல்ல நடிகை என்பதற்கான ஆதாரமாகவே அவரது "ஆடை" திரைப்படம் அமைந்திருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் அமலா பால் (amala paul) செய்வது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கினாலும் அது அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர்.

தெய்வத் திருமகள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஏ. எல். விஜயின் அறிமுகம் கிடைத்த அமலா பாலுக்கு வெகு விரைவிலேயே அது காதலாக மாறியது.  இரண்டு பேருக்குமே பரஸ்பரம் ஈர்ப்பு இருந்ததால் அவர்கள் காதல் திருமணம் வரை வெகு சுலபமாகவே சென்றது.

Youtube

ஆனால் நடிப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அமலா பாலுக்கு இருந்த சமயம் அவர் எதிர்பார்த்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியாமல் போகும் வண்ணம் அவரது குடும்ப வாழ்க்கை இருந்தது எனத் தெரிய வருகிறது.

ஆகவே பல சர்ச்சைகள் சண்டைகளுக்குப் பின்னர் ஏ. எல். விஜய் அமலாபால் தம்பதி மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதற்குப் பின்னணியில் சிலர் இருப்பதாகக் கூட சர்ச்சை எழுந்து அடங்கியது.

இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் இரண்டு வருடம் கழித்து இயக்குனர் ஏ. எல். விஜய், சினிமாத்துறை அல்லாத மருத்துவர் ஐஸ்வர்யாவை பெற்றோர் விருப்பப்படி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

Youtube

ஏற்கனவே 'ஆடை' திரைப்படம் மூலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பேசுபொருளாக மாறி இருக்கும் அமலா பால் இந்த திருமணம் குறித்த தனது கருத்துக்களை எங்குமே தெரிவிக்காமல் இருந்தார்.

முதல் முறையாக 'ஆடை' படத்தின் ப்ரமோஷன் விழாவில் தனது முன்னாள் கணவர் ஏ.எல். விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

"விஜய் மிகவும் சிறந்த இனிமையான மனிதர். அவரது திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள். அந்த தம்பதிகள் இணைந்து பல குழந்தைகள் பெற்று சௌக்கியமாக வாழ வேண்டும்" என மனப்பூர்வமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் அமலா பால்.

Youtube

விவாகரத்துக்குப் பின்பான தனது வாழ்க்கை பற்றி அமலா பால் மனம் திறக்கும்போது, ஆரம்பத்தில் தனக்கு அக்கா வேடம் தோழி வேடம் போன்றவைதான் கிடைக்கும் என நினைத்திருக்கிறார். வாழ்வாதாரத்திற்காக, தான் சின்னத்திரையில் நடிக்க வேண்டி வரலாம் என அமலா பால் கவலைப்பட்டிருக்கிறார்.

ஆனால் நாம் திறமைசாலியாக இருந்தால் எந்தவித வாழ்க்கை சூழ்நிலை இருந்தாலும் நமக்கான வாய்ப்புகளை எதுவும் தடுக்க முடியாது என்பதை பின்னரே அறிந்து கொண்டதாக அவர் கூறி இருக்கிறார்.

இவரது வித்தியாசமான நடிப்பில் வெளிவர இருக்கின்ற 'ஆடை' திரைப்படம் வரும் ஜுலை 19ம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                        

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.