தன்னை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்

தன்னை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்

வயதில் குறைவான ஆண்களை திருமணம்(married) செய்வது என்பது முன்பெல்லாம் தவறான செயலாக கருதப்பட்டு வந்தது. தற்போது மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இதுவும் சகஜமாகி வந்துக்கொண்டிருக்கின்றது. அதை விட தற்போது பெண்கள் தன்னை விட 10 வயது மற்றும் 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது பேஷனாகி மாறிவிட்டது. முன்பெல்லாம் நமது தாத்தா பாட்டி வயது வித்தியாசத்தை கேட்டால் ஆச்சரியப்படுவோம். எப்படி இத்தனை வயதானவரை திருமணம்(married)செய்து கொண்டீர்கள் என ஆச்சரியப்படுவோம். ஆனால் தற்போது காலம் அப்படியே மாறிவிட்டது. வயதான தனது உடன் பணி செய்யும் ஆண்கள் அல்லது நண்பர்களை திருமணம்(married) செய்வது பேஷனாக மாறிவிட்டது என்றே சொல்லாம்.


சரி விசயத்திற்கு வருவோம், தன்னை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகளை தான் தற்போது பார்க்கப்போகிறோம்.


ஐஸ்வரியா தனுஷ்
தன்னை விட இரண்டு வயது குறைவான பையனாக தனுஷை தான் ஐஸ்வரியா திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணம்(married) என்று ஒரு பக்கம் சொன்னாலும் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் என அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகின்றன. சூப்பர் ஸ்டார் மகள் என்பதால் ரகசியம் கட்டாயம் காக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.


பிரசன்னா சினேகா
இவர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். பிரசன்னாவில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்திற்கு சினேகாவின் பங்கு கட்டாயம் உள்ளது. இவர்கள் காதல் திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களை பற்றி கிசு கிசுக்கள் பல வந்ந போதும் இருவரும் மறுக்கவில்லை. அப்படியே திருமணம்(married) செய்துக்கொண்டனர். ஆனால் பிரசன்னாவை விட சினேகா 1 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சாயா சிங்
திருடா திருடி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாடலில் இவர் ஆடிய குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் பயங்கர பேமஸ் என்றே சொல்லலாம். இளைஞர்கள் மனதை ஒரே பாட்டின் மூலம் கொள்ளை கொண்ட இவர் சிறிது காலம் திரை துறை பக்கம் காணாமல் இருந்தார். அதன் பிறகு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கும் இவரது கணவருக்கும் 2 வயது வித்தியாசம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐஸ்வரியா அபிஷேக்
உலக அழகியான ஐஸ்வரியா தன்னை விட 2 வயது குறைந்த அபிஷேக்கை திருமணம்(married) செய்துக்கொண்டார். பல்வேறு தரப்பிலிருந்து கிண்டல் வந்த போதிலும் தனது காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.


சச்சின் அஞ்சலி
சச்சின் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை திருமணம்(married) செய்துக் கொண்டார். இந்த திருமணத்திற்கு முக்கிய காரணம் சச்சின் தான் என பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சச்சின் பிரபலமாவதற்கு முன்பாகவே அஞ்சலியை காதலித்துள்ளார். பிறகு பிடிவாதமாக இருந்து தனது காதலை நிறைவேற்றியும் உள்ளார். 


வயது அதிகமோ குறைவோ அது பிரச்சனை இல்லை. 10 பொருத்தம் பார்த்து பந்தகால் நட்டு கெட்டி மேலம் முழங்க நடைபெற்ற திருமணங்கள்(married) எத்தனையோ ஒன்றும் இ்ல்லாமல் பிரிந்து சென்றுள்ளதை நாம் பார்த்திருக்கின்றோம். எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே போதும் வாழ்க்கை சிறப்பாக அமையும். வயதோ அழகோ பெரிய தடைக்கல் இல்லை. வாழ்க்கையில் புரிதலும் நிம்மதியும் தான் முக்கியம். வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்னங்க நாங்க சொல்றது சரிதானே. இன்பமாக வாழுங்கள் அன்பாக இருங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo