புடவையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறல்!

புடவையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறல்!

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, பாடம் ஆகிய படங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் பிரபலமானார். 

அதைத்தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுக்க அறிமுகம் ஆனார். அதன்பிறகு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. 

ஆனால், பொிய அளவுக்கு வாய்ப்புகள் குவியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு (yashika aanand) ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை. 

twitter

ஜாம்பி படமும் சரியாக ஓடாததால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.  யாஷிகா ஆனந்த் போட்ட குத்தாட்டம் என்று நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

அதில் லேட்டஸ்டாக புத்தாண்டு தினத்தன்று பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் அரைகுறை ஆடையில் அவர் போட்ட குத்தாட்டம் வைரலானது. ரசிகர்கள் பலர் இவரை ட்ரோல் செய்தபோதிலும் கண்டுகொள்ளாத யாஷிகா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். 

மேலும் படிக்க - மதுமிதாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள் !

இந்த படங்களை ட்ரோல் செய்யும் ரசிகர்கள், இவர் ஆபாச நடிகை மியா காலிஃபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வந்தனர். தமிழ்நாட்டின் மியா காலிஃபா யாஷிகா தான் என்று காமென்ட் செய்தும் வந்தனர். 

இதனால் யாஷிகா சற்று மன வருத்தத்தில் இருந்தார். இது குறித்து ஒரு பேட்டியில் கூட யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசினார். அப்போது என்னை மியா காலிஃபா என்று விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். 

twitter

என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும். 

மேலும் படிக்க - ரியால்ட்டி ஷோவில் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை கஜோல்.. வைரலாகும் வீடியோ!

நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவதாகவும், இதுபோன்ற விஷயங்கள் என்னுடைய தன்னம்பிக்கையை இழக்க செய்வதாக உள்ளதாகவும் கூறி யாஷிகா  (yashika aanand)  வருத்தப்பட்டார்.   

பெரும்பாலும், நடிகைகள் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது புடவை கட்டி தேவதை போல் இருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் கூட இப்போ செம்ம வைரலாக போகிறது. இந்நிலையில் கவர்ச்சி புயலாக இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் அண்மையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விருது விழாவுக்கு அழகாக புடவை அணிந்து சென்றுள்ளார். 

கறுப்பு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றிருந்தார். கறுப்பு நிற பட்டுப்புடவைக்கு பார்டர் நிற ஜாக்கெட்டில் செம கலக்கலாக கலந்து கொண்டார். காதில் ஜிமிக்கி, கைநிறைய வளையல், தலையில் பூ, அளவான மேக்கப் அழகான சிரிப்பு என அசத்தலாக பங்கேற்றார் யாஷிகா. 

தற்போது இந்த புகைப்படங்களை யாஷிகா (yashika aanand) தனது  வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் யாஷிகா இவ்வளவு அழகாக என வென திணறி வருகின்றனர். 

சூப்பரா இருக்கு, நீங்க சேலையிலதான் அசத்தலா இருக்கீங்க என்றும், மாடர்ன் டிரெஸ்ல பார்த்தா கும்முன்னு இருக்குற.. ட்ரெடிஷ்னல் டிரெஸ்ல பார்த்தா நச்சுன்னு இருக்கீயேடா யாஷ் பேபி.. என ரசிகர்கள் யாஷிகாவை வர்ணித்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு யாஷிகாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க - ஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!