தங்களை இயக்கிய இயக்குநர்களையே காதலித்து மணந்த நடிகைகள்

தங்களை இயக்கிய இயக்குநர்களையே காதலித்து மணந்த நடிகைகள்

சினிமாவில் காதல் திருமணங்கள் நடைபெறுவது எப்போதும் சுவாரசியமானது. அந்த நேரத்தில் ஹாட் டாபிக் அந்த திருமணமாகத்தான் இருக்கும். அன்றைய பத்திரிகைகளின் பக்கங்களை ஆக்கிரமிப்பதும் சினிமாக்காரர்களின் திருமணம் தான். அரசியல்வாதிகளுக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இருக்காது.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தங்களுடைய துறை சார்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்ளும்போது அதன் புரிதல்கள் மாறுபடுகிறது. பாதுகாப்பான உறவாகவே அது மாறி விடுகிறது. நிலையான உறவாகவும் நிலைத்து நிற்கிறது. நடிகர்களை மணந்தவர்களை விடவும் இயக்குனர்களை மணந்த நடிகைகள் பல தசாப்தங்களை கடந்தும் தங்களுடைய திருமண உறவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு பின்னர் தங்களை இயக்கிய இயக்குநர்களையே (directors) திருமணம் செய்த நடிகைகள் பற்றிய ஒரு பார்வை உங்களுக்காக.

இயக்குனர் மணிரத்னம் - சுஹாசினி

இந்த இருவருமே தமிழ்திரையுலகை இன்றும் ஆளும் ஆளுமைகளில் முக்கியமானவர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு நடிகையாக பல்வேறு வேடங்களில் பரிணமித்தவர் நடிகை சுஹாசினி. இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் இன்னொரு பரிமாணமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் மௌனராகம். அந்தப் படத்தை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் (manirathnam). நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் குழப்பங்களுடன் போராடும் நாயகியாக வருபவர் நடிகை சுஹாசினி (suhaasini) . பின்னாளில் இவர்கள் இருவரும் பெரியவர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். அதன்பின்னர் சுஹாசினி இயக்குனர் மணிரத்னத்தின் மேற்பார்வையில் சில திரைப்படங்களையும் இயக்கினார். இன்றுவரை இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படங்களில் ஏதாவது ஒரு அங்கமாக நடிகை சுஹாசினி இருந்து வருகிறார். மாதொரு பாகன் என்கிற பெயர் நிச்சயம் இந்த தம்பதிகளுக்கு மட்டுமே பொருந்த கூடியது.

Youtube

அட்லீ - பிரியா

அட்லீ இப்போது ஒரு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே திரைக்கதை அமைப்பின் மூலம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்தவர் அட்லீ (atlee). இவர் தன்னுடைய ஆரம்ப காலங்களில் குறும்படங்களை இயக்கி வந்தவர். அந்த சமயங்களில் தன்னுடைய குறும்படத்தில் நாயகியாக நடித்த ப்ரியா (priya) மீது காதல் கொண்டார். சிறு வயது முதலே குடும்ப நண்பர்கள் என்பதால் ப்ரியாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த போது தன்னுடைய புகைப்படத்தை கொடுக்குமாறு அட்லீ ப்ரியாவிடம் கூறி இருக்கிறார். இப்படி வித்யாசமான முறையில் காதலை சொன்ன அட்லீ ப்ரியாவை இருவீட்டாரின் சம்மதத்துடன் மணந்து கொண்டார்.

Youtube

ஏ எல் விஜய் - அமலா பால்

மென்மையான கதைகள் மூலம் சினிமா உலகத்தில் இடம் பிடித்தவர் ஏ எல் விஜய். இவர் சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க முயற்சித்து தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். தன்னுடைய தெய்வ திருமகள் திரைப்படம் மூலம் நடித்த நடிகை அமலா பால் மீது காதல் கொண்டார் ஏ எல் விஜய் (AL vijay) . பின்னர் தலைவா திரைப்படத்தின் போது அதனை வளர்த்திக் கொண்ட ஜோடி தங்கள் காதலை திருமணத்தில் முடித்து. ஆனாலும் சில வருடங்களில் மனக்கசப்பு காரணமாக இந்த தம்பதி பிரிந்து விட்டனர். இப்போது ஏ எல் விஜய் இரண்டாவதாக மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்திருக்கிறார். அமலா பால் (amala paul) வேறொருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.

Youtube

தேவயானி - ராஜகுமாரன்

சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் தேவயானி ராஜகுமாரன் (devayani rajakumaran) திருமணம்தான். ஏனென்றால் நடிகை தேவயானி மேலிருந்த தன்னுடைய காதலை காட்டுவதற்காக ஒரு திரைப்படத்தையே எடுத்து அதில் தேவயாணியையே கதாநாயகியாக்கி தன்னுடைய காதலை பிரம்மாண்ட முறையில் வெளிப்படுத்தியவர் இயக்குனர் ராஜகுமாரன். நீ வருவாய் என திரைப்படம் மூலம் இயக்குனர் ஆனவர் ராஜகுமாரன். அவரது அந்த திரைப்படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார்.

அப்போதில் இருந்து காதல் கொண்ட ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படக் காட்சிகள் மூலம் தன்னுடைய காதலை தேவயானிக்கு புரிய வைக்க அசந்து போன தேவயானி அழகு ஒரு பொருட்டல்ல குணமே முக்கியம் என ராஜகுமாரனின் காதலை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் சில படங்கள் மட்டுமே இயக்கிய ராஜகுமாரன் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இயக்கிய ஐந்து திரைப்படங்களிலும் தேவயானிதான் நாயகி. இந்த ஜோடி இன்றுவரை தங்களுடைய வெற்றிகரமான திருமண வாழ்வை தொடர்கின்றனர்.

Youtube

சரண்யா - பொன்வண்ணன்

நடிகை சரண்யா என்றால் விருப்பமில்லாத மனிதர்களே இல்லை என்பது போல எல்லாருடைய அன்பையும் வயது வித்தியாசமின்றி பெற்றவர் சரண்யா. நாயகன் திரைப்படத்தில் கமலஹாசனுடன் ஜோடியாக அறிமுகம் ஆனவர் சரண்யா. அதன்பின்னர் மனசுக்குள் மத்தாப்பு திரைப்படத்தில் நடித்தவர் அந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து அவரை மணந்தார். பின்னர் மனக்கசப்பால் பிரிந்தனர். அதன் பின்னர் துணை இயக்குனராக இருந்த பொன்வண்ணன் (ponvannan) நடிகை சரண்யாவை (saranya) ஒருதலையாக காதலித்து வந்தார். பசும்பொன் திரைப்படத்தின் மூலம் பொன்வண்ணனிடம் பழகிய சரண்யா இவரது காதலின் உறுதி கண்டு இவரையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது பதின்ம வயதில் பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

Youtube

சுந்தர் சி குஷ்பூ

இயக்குனர் சுந்தர் சி (sundar c) என்றாலே கமர்சியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவரது திரைப்படங்களுக்கு வந்தால் 100% காமெடி நிச்சயம் மனக்கவலையை மறந்து போகலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. இதே பார்முலாவை தொடரும் சுந்தர் சி அப்போது உச்சத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை குஷ்பூவை (kushboo) காதலித்து திருமணம் செய்தவர். முன்பிருந்தே நடிகை ககுஷ்பூ மீது க்ரஷ் வைத்திருந்தவர் இயக்குனர் சுந்தர் சி. அப்போது நடிகர் பிரபுவும் குஷ்பூவும் பல திரைப்படங்களில் ஜோடியாகவே நடித்தனர். அதனால் அவர்கள் காதலிப்பதாகவும் பேச்சு இருந்தது. ஆனாலும் சிவாஜி கணேசன் இதற்கு தீவிர எதிர்ப்பாளர் ஆக இருக்கவே அது பிரேக்கப் ஆனது. அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த குஷ்பூ முறை மாமன் படத்தில் இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் நடித்தார். அப்போது காதலை சொன்ன சுந்தர் சி யை நேசித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இரண்டு தசாப்தங்களை தொடப் போகும் இவர்களின் மணவாழ்க்கைக்கு ஆதாரமாக அவந்திகா அனந்திதா என்கிற இரு மகள்கள் இருக்கிறார்கள்.

Youtube

ரோஜா - செல்வமணி

குஷ்பூ பிரபலமாக இருந்த அதே காலத்தில் பிரபலமாக இருந்தவர்தான் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தை இயக்கியவர் ஆர் கே செல்வமணி (RK selvamani) . அந்த சமயங்களில் உச்ச இயக்குனராக கருதப்பட்டவர்களில் முக்கியமானவர் இவர். இவர்கள் இருவருக்கும் முதல் படத்தில் இருந்தே காதல் இருந்தது. ஆனாலும் நடிகை ரோஜா (roja) தன்னுடைய நடிப்பு வாழ்க்கைக்கு பங்கம் வராமல் பல திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு காதலித்த ஆர் கே செல்வமணியையே திருமணம் செய்து கொண்டார். அக்கட தேசத்து எம்பி ஆகவும் ஆகி இருக்கிறார் நடிகை ரோஜா.

 

Youtube

இயக்குனர் ஹரி - ப்ரீத்தா

அதிரடி திரைப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஹரி. இவரது திரைப்படங்களில் நடிகர் விஜயகுமார் மகளான ப்ரீத்தா (preetha)  நடித்ததில்லை என்றாலும் ப்ரீத்தா நடித்த திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஹரி(hari) . அப்போதில் இருந்து காதல் வயப்பட்ட இந்த ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!