1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரபலமானவர் த்ரிஷா. இதனை தொடர்ந்து பிரசாந் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் சினிமா சினிமா வாழ்க்கை, வெற்றிப் பாதையாக மாறியது. 2000 முதல் 2010 வரை அசைக்க முடியாத நடிகையாக இருந்தார்.
அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போதும் பிஸி ஹீரோயினாக த்ரிஷா வலம் வருகிறார். குறிப்பாக 96 படத்தின் ஜானு கதாப்பாத்திரம் த்ரிஷாவிற்கு சிறந்த கம் பேக் ஆக அமைந்தது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. பள்ளிப் பருவத்தில் பிரிந்த காதல் ஜோடியான விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் (trisha) பல வருடங்களுக்கு பின்னர் சந்திக்கின்றனர்.
மேலும் படிக்க – வாழ்க்கையில் எது நடந்தாலும் கேரக்டரை குறை சொல்வார்கள்.. திருமண முறிவு பற்றி மனம் திறந்த DD
தங்களது காதலையும், நினைவுகளையும் ஒரு இரவில் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகளே படத்தின் கதை. மிகவுல் நேர்த்தியாக படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கையாண்டிருப்பார் இயக்குனர் பிரேம் குமார்.
மேலும் இப்படத்தில் வலுசேர்க்கும் விதமாக அமைந்திருந்தது நடிகர்களும், இசையும். விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷான் உள்ளிட்ட அனைவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இப்படத்திற்காக ஃபிலிம் பேர், ஐஃபா என 11 விருதுகளை சிறந்த நடிகைக்காக அள்ளியுள்ளார் த்ரிஷா. மேலும் மலையாளத்தில் நிவின் பாலுடன் நடித்த ‘ஹே ஜூட்’ படத்திற்கு 3 விருதுகளை பெற்றுள்ளார்.
Counting my blessings🥰😇
11 for #96
3 for #HeyJude
Thank you all for the love❤️🙏🏻 pic.twitter.com/h8gidPoD1M— Trish (@trishtrashers) December 23, 2019
இந்த செய்தியை விருதுகளுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதனிடையே மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.
மேலும் படிக்க – இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகை ரிச்சாவின் திருமணம்… ரசிகர்கள் வாழ்த்து!
கடந்த ஆண்டு மலையாளத்தில் முதல்முறையாக ஹே ஜூட் என்ற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா (trisha) நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ராம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தொடக்க விழா பூஜையில் கலந்து கொண்டு பேசிய த்ரிஷா, ‘நான் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது அங்கே மோகன்லாலை பார்க்கும் போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என கேட்டுக் கொண்டே இருப்பேன். இன்று என்னுடைய கனவு நனவாகி விட்டது.
Caption this 😉 pic.twitter.com/8ZlDxgH9Od
— Trish (@trishtrashers) December 17, 2019
மோகன்லால், ஜீத்து ஜோசப் என்ற அருமையான கூட்டணியில் நான் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷாவின் க்யூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
36 வயதாகும் த்ரிஷா அந்த அடையாளம் சிறிது கூட தெரியாத படி 17 வருடங்களுக்கு முன்பு எப்படி சினிமாவில் அறிமுகமானாரோ அப்படியே இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் சொன்னது ஏஞ்சல் சொர்க்கத்துல இருக்கும்னு, இங்க பாருங்க என கமெண்ட் செய்திருந்தனர். த்ரிஷாவின் (trisha) கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு ! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!