இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகை ரிச்சாவின் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகை ரிச்சாவின் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிச்சா காங்கோபாதியாய். டெல்லியைச் சேர்ந்த மாடல் அழகி ரிச்சா  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 2007ம் ஆண்டில் மிஸ் இண்டியாவின் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர்.

அதன் பின்னர் தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தமிழில் மயக்கம் என்ன , ஒஸ்தி ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மயக்கம் என்ன படம் ஹிட் ஆனாலும் ஒஸ்தி மூலமே சினிமா ரசிகர்களிடம் பிரபலம் ஆனார் ரிச்சா. 

மேலும் படிக்க - வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன்

தமிழில் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எந்த படமும் நடிக்காத ரிச்சா, தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பெங்காலியில் பிக்ரம் சிங்கா, 2013ம் ஆண்டு தெலுங்குவில் சரோசாரு, மிர்ச்சி, பாய் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். 

twitter

சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதும் மற்றும் சைமா விருது, எடிசன் விருது உட்பட பல விருதுகளை ரிச்சா வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றார். 

மேலும் படிக்க - ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் நடிகை பிரியா பவானி ஷங்கர்... வைரல் வீடியோ!

படிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். வெளிநாட்டில் பிஸினஸ் ஸ்கூலில் படித்த போது தன்னுடன் படித்து வந்த ஜோவை காதலித்த ரிச்சா, தனது காதலர் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வார். 

கடந்த ஜனவரி 15ம் தேதி தன்னுடன் பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஜோவைக் காதலித்து வருவதாகவும்,  காதல் தொடர்பாக தனது வீட்டில் தெரிவிக்க உடனடியாக நிச்சயமும் செய்யப்பட்டது தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட புகைப்படங்களை அவர் ஷேர் செய்திருந்தார்.

இதை கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ரிச்சா மற்றும் ஜோ திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ரிச்சா குடும்பத்தினர் சார்பாக இந்திய முறைப்படியும், அவரது கணவர் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்துவ முறைப்படியும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

twitter

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தான் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். 

ரிச்சாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததால் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் செட்டில் ஆக ரிச்சா முடிவெடுத்துள்ளார். சமீப காலமாகவே நடிகைகள் பலரும் வெளிநாட்டை சார்ந்த நபர்களை திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். 

சார்ந்த சோப்ரா, இலியானா, ஷ்ரேயா என்று பலரும் வெளிநாட்டை சார்ந்தவர்களை தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரிச்சாவும் வெளிநாட்டை சார்ந்தவரை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!