நடிகை ராசி கண்ணா 2013ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2014ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். இவர் நடித்த ஊஹாலு குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார். மேலும் மலையாளத் திரையிலும் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கிய, ஷைத்தான் க பச்சன் என தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க – டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 தமிழ் பதிப்பில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகினாலும் ஒரு சிலரே கவரப்பட்டு படங்களில் கமிட்டாகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ராசி கண்ணா (rashi) தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
அவ்வப்போது புடவையிலும், மாடர்ன் உடைகளிலும் போட்டோஷூட் நடத்தில் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்து கிறங்கும் இவரது ரசிகர்கள் தொடர்ந்து பல தமிழ் படங்களில் இவர் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ராசி கண்ணா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ” தெலுங்கில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’ கூட அப்படிப்பட்ட படம்தான்.
ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும், கதாபாத்திரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பேன். எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு யோசிக்க மாட்டேன். ‘சங்கத்தமிழன்’ படத்தில் கமாலினி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் படத்துல நடிக்கணும்ங்கிறது என் கனவு. கண்டிப்பா அது விரைவில் நடக்கும்னு நம்புறேன். அதுக்காக காத்துக்கிட்டிருக்கேன்” – என கூறியுள்ளார். மேலும் 16 வயதில் ஆண் நண்பர் ஒருவருடன் டேட் செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
மேலும் படிக்க – 4 வருட காதல்… திடீர் என திருமணம் செய்து கொண்ட ‘பகல் நிலவு’ அன்வர் – சமீரா ஜோடி!
அந்த ஆண் நண்பரின் வயது 16 என்று நடிகை ராசி கண்ணா கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பேசிய நேர்காணல் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். மேலும் அந்த பையன் யார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்து வருகிறது.
மேலும் படிக்க – ஹீரோயின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா : புகைப்படம் வைரல்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!