ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் நடிகை பிரியா பவானி சங்கர்... வைரல் வீடியோ!

ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் நடிகை பிரியா பவானி சங்கர்...  வைரல் வீடியோ!

பிரபல செய்தித்தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மட்டும் நடித்துவிட்டு, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவருக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

நடிகர் வைவ் மற்றும் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினமாவில் அறிமுகமாகிய இவர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக எஸ்.ஜே.சூர்யா -பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வெளியான 'மான்ஸ்டர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

twitter

ஜீவாவின் 'களத்தில் சந்திப்போம்', அருண் விஜய்யின் 'மாஃபியா', எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' என பல்வேறு படங்களை பிரியா பவானி சங்கர் (priya bhavani shankar) கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் படிக்க - ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியல்.. தென்னிந்திய நடிகைகளில் அனுஷ்கா தேர்வு!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துவரும் இந்தப் படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன் தாத்தாவாக 90 வயது கெட்டப்பில் கமல்ஹாசன் நடிக்கிறார். 

அவரது தோழியாக 85 வயது கேரக்டரில் காஜல் அகர்வாலும், போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். அவர்களுடன் சித்தார்த், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்  என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை 'இந்தியன்-2' படத்துக்காக இணைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

twitter

இந்தநிலையில் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்த வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் (priya bhavani shankar) நடிக்க இருக்கிறாராம். 

இதனிடையே நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் ஒரு படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பெல்லிசூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.

மேலும் படிக்க - டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் அரசு பள்ளி மாணவி நாசாவுக்கு செல்ல தேர்வு!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில்மிக பெரும் ஹிட்டான  இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் தமிழில் இயக்க உள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த புகைப்படங்களை ஹரீஷ் கல்யாண அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். 

நடிகை பிரியா பவானி சங்கரை சமூகக்கவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடருகிறார்கள். சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்வார்.

 
 
 
View this post on Instagram
 
 

@rajvel.rs ‘paravala un bike nalla dhan man iruku’ moment for you 🤗

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பைக் ஒன்றை அழகாக ஓட்டுகிறார்.

அந்த வீடியோவுக்கு டுகாட்டி ஸ்போர்ட்ஸ் வகை பைக்கை ஓட்டுவதை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். மேலும் அந்த பைக்குடன் எடுத்த புகைப்படங்களையும் (priya bhavani shankar) ஷேர் செய்துள்ளார். இதுவரை அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளது.

மேலும் படிக்க - குயின் வெப் சீரிஸ் - நாம் அறிந்த தலைவியின் அறியாத அத்தியாயங்களை புரட்டிப் பார்க்கிறது !

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!