பட வாய்ப்புகள் குறைந்ததால் உடல் எடையை குறைத்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை ஹன்சிகா!

பட வாய்ப்புகள் குறைந்ததால் உடல் எடையை குறைத்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை ஹன்சிகா!

கொழுக் மொழுக் என்று கோலிவுட்டில் அறிமுகமான ஹன்சிகாவை ரசிகர்கள் பலருக்கும் பிடித்துவிட்டது. எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் இவரை ரசிகர்களின் கனவு கன்னி ஆக்கியது. வெள்ளை நிறமும், நடிகை குஷ்பூ போன்ற உடலமைப்பும் இவரது பெரிய பிளஸ். 

இதனால் இவர் ரசிகர்களால் செல்லமாக சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்டார். தற்போது தமிழில் மகா, பார்ட்னர் மற்றும் தெலுங்கு உள்பட சுமார் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். எனினும் கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளிவந்த சில படங்கள் தோல்வியை தழுவியது. 

இதனால் தனது உடல் தோற்றத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி ஃபோட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதளங்களில் ஷேர்  செய்தும் வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். 

twitter

காரணம் முன்பு கொழு கொழுவென இருந்த ஹன்சிகா தற்போது மிகவும் மெலிந்து போயுள்ளார். எடையை குறைத்தால் பட வாய்ப்புகள் அதிகாரிக்கும் என நினைத்த ஹன்சிகா தனது எடையை வெகுவாக குறித்துள்ளார். ஆனால் அவர் என்று தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக  ஆனாரோ அன்றே அவரது மார்க்கெட் மேலும் குறைந்துவிட்டது. 

இவரது புகைப்படத்தின் கீழ் ஹன்சிகா என்றால் குண்டாக இருந்தால் தான் அழகு, எங்களுக்கு பழைய ஹன்சிகா தான் வேண்டும் என்பது போன்ற கமண்ட்டுகளையும்  என சில ரசிகர்கள் ஏக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே படப்பிடிப்பு இடைவெளிவிட்டு நடிப்பதால் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால்,  வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. அனுஷ்கா நடித்த பாக்மதி படத்தை இயக்கிய ஜி.அசோக் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். 

twitter

வெப் சீரிஸ் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகா ஆப்தே, சுனைனா, நித்யாமேனன் உள்ளிட்ட பிரபல நடிகைகள் சமீபகாலமாக வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார். இது குறித்து  நடிகை ஹன்சிகா, வெப் சீரிஸில் முதன்முறையாக நடிப்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஹன்சிகா தெலுங்கில் நடித்துள்ள தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

 

twitter

இப்படம் தனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. பட வெற்றிக்காக புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.  முன்னதாக பல ஆண்டுகளுக்கு முன்பு விழா மேடையில் விஜய் தனக்கு பிடித்த நடிகை ஹன்சிகா என்று கூறிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  

ஹன்சிகா சந்தோஷமாக வெளியிட்ட வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் தயவு செய்து பழையபடி கும்மென்று ஆகிவிடுங்கள். அது தான் உங்களுக்கு அழகு. ஒல்லியாக இருந்தால் அது ஹன்சிகாவே இல்லை என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!