ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் ஜெனிலியா (genelia). மிக குறும்பான நடிகையாக அறியப்பட்டவர் இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் ‘ஆல்-டைம் ஃபேவரைட்’ ஹீரோயின் ஆனார். ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் மிக அதிகமான குறும்புத்தனம் செய்யும் பெண்ணாக நடித்து பலரையும் கவர்ந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு ரியான், ராய்ல் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரியானின் ஐந்தாவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. தனது மகன் ரியான் பிறந்த தினத்தை கொண்டாடிய நடிகை ஜெனிலியா (genelia), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “அன்புள்ள ரியான், அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வளரக் கூடாது, இப்படியே குழந்தையாகவே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், நான் அப்படி விரும்பவில்லை. உன்னுடைய ஒவ்வோர் ஆண்டையும் ரசிக்க விரும்புகிறேன்.
நீ பறப்பதற்காக இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்குக் காற்றாக இருக்க ஆசைப்படுகிறேன். வாழ்க்கை மிகவும் கடினமானது, ஆனால், நீ திடமானவன். எது நடந்தபோதிலும், உன்னை மட்டுமே நீ நம்பு. உன் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது.
இதைத் தவிர, வேறு ஒன்றை உனக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்னவென்றால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நீ. உன் புன்னகையைவிட நான் பார்க்க எதுவும் இல்லை, உன் சிரிப்பைவிட நான் கேட்க ஒன்றுமில்லை.
என்னிடமிருக்கும் அனைத்திலும் நீயே சிறந்தவன். எனக்கு தாய் என்ற அந்தஸ்தை தந்த முதல் பிள்ளை நீதான் என் குட்டி பையனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இந்த கடிதம் வைரல் ஆகி வருகிறது. செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வந்த பிறகு கடிதம் எழுதுவது பெரும்பாலும் குறைந்துவிட்டது. தற்போது கடிதத்தை டிஜிட்டல் வடிவில் பலர் எழுத தொடங்கி உள்ளனர்.
To the boy who made me a Mom- My First Born ❤️. Happy Birthday Riaan pic.twitter.com/dsxKSYaNfW
— Genelia Deshmukh (@geneliad) November 25, 2019
இந்நிலையில் ஜெனிலியாவின் (genelia) இந்த கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெனிலியாவின் முதல் மகனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், இஷா தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!