தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்த நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டுமே. கவர்ச்சி, குணச்சித்திரம், நடனம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து 80களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய ராஜ்யத்தை நிலைநாட்டியவர். இன்று வரை அவருக்கு நிகர் அவரே.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர்தான் பின்னாளில் சினிமா உலகிற்கு வந்தவுடன் சில்க் ஸ்மிதா (silk smitha) என்று அறியப்பட்டவர். கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறியப்பட்ட சில்க் ஸ்மிதா 1980ம் ஆண்டு வெளிவந்த வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் புகழ் பெற்றார்,
1980களில் சர்ச்சைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட 17 ஆண்டுகளில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என பலரும் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
மேலும் படிக்க – தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு ! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
சினிமாவை தன் வசம் வைத்திருந்த சில்க் சிமிதாவின் கால்ஷிட்டிற்காக ஒரு காலத்தில் இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு காதல் தோல்வி, குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம் என பலர் கூறினர்.
ஆனால் அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் அவருடன் பணியாற்றிய நடிகை அனுராதா தற்போது சில்க் ஸ்மிதா தற்கொலை குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்கொலை செய்து கொள்வதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அனுராதா வீட்டிற்கு சென்று அவரது குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு நேரம் செலவிட்டார். அடுத்த சில நாளில் கன்னடம் படத்தில் ஒரு பாடலுக்கு நடிப்பதற்காக செல்கிறேன் என்று கூறினார்.
மேலும் படிக்க – ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் நடிகை பிரியா பவானி ஷங்கர்… வைரல் வீடியோ!
அதன் பின்னர் இறப்பதற்கு முந்தைய நாள் எனக்கு போன் செய்து உன்னிடம் பேச வேண்டும் வர முடியுமா? என்று கேட்டார். ஆனால் என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருந்தால், நான் என் குழந்தைதளை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலையில் இருந்தேன்.
அதனால் சில்க் ஸ்மிதாவின் (silk smitha) அழைப்பை ஏற்று என்னால் அங்கு செல்ல முடியவில்லை. பின் நான் அவளிடம் மறுநாள் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அடுத்த நாள் காலையில் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் எனக்கு வந்தது.
இந்த தகவலை கேட்டதும் எனக்கு நெஞ்சை பிளக்கும் அளவிற்கு இருந்தது. அன்று ஸ்மிதாவின் அழைப்பை ஏற்று நான் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தால் சுமிதா இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று மனவேதனையுடன் அனுராதா தெரிவித்துள்ளார்.
இதேபோல் சில்க் ஸ்மிதாவின் நண்பர் திருப்பதி ராஜன் என்பவரும் சில்க் ஸ்மிதாவை (silk smitha) பலமுறை சந்திக்க சென்றதாகவும், ஆனால் அவரது வீட்டில் எப்போதுமே சில தடியன்கள் தன்னை சந்திக்கவிடாமல் தடுப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – சரவணபவன் அண்ணாச்சியை எதிர்த்து நீதி கேட்ட ஜீவஜோதி – இனி தீவிர அரசியல்வாதியும் கூட !
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!