பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்... உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்... உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கிரிக்கெட் வீரரான இவர் 2009ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் (vishnu vishal) தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். 

twitter

கடந்த 2011ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 

மேலும் படிக்க - முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், குழந்தை மற்றும் மனைவி ரஜினியின் நலன் கருதியே விவாகரத்து செய்ததாக தெரிவித்தார். 

ஆனால் விஷ்ணு விஷால்  தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை எழுந்ததாக தகவல் வெளியானது. மேலும் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் (vishnu vishal)  கிசுகிசுக்கப்பட்டார். 

twitter

பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான  ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் அதுகுறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். 

மேலும் படிக்க - பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் இணைந்து புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். 

அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இருவரும் முகத்தோடு முகம் ஒட்டி வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷாலை மை பேபி என குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.  

இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவர்களின் காதலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் (vishnu vishal) பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா 2005ம் ஆண்டு சக பேட்மிண்டன் வீரரான சேதன் ஆனந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2011ம் ஆண்டு சேதன் ஆனந்தை ஜுவாலா கட்டா விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!