பிரமாண்டமாக நடைபெற்ற விஷால் நிச்சயதார்த்தம்! வரலட்சுமி வராதது ஏன்?

பிரமாண்டமாக நடைபெற்ற விஷால் நிச்சயதார்த்தம்! வரலட்சுமி வராதது ஏன்?

நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலிற்கு கடந்த சனிக்கிழமை மார்ச் மாதம் 16ம் தேதி நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் படை சூழ மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம்(engagement) நடைபெற்றது.


இரண்டு மாதத்திற்கு முன்பு தனது காதலை உறுதி செய்த விஷால் தற்போது நிச்சயதார்த்த(engagement) பந்தத்தில் இணைந்துள்ளார்.


சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிகர் விஷாலும் காதலிப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து உறுதி செய்யப்படாத தகவல்கள் கடந்த ஆண்டு முழுவதும் பரவிவந்தது.


ஆனால் இதை இருவரும் மறுக்காத பட்சத்தில் அனைவருமே நம்பத்தொடங்கினர். நாங்கள் காதலர்கள் இல்லை நண்பர்கள் தான் என்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது விஷாலின் நிச்சயதார்த்தம்(engagement) நடைபெற்றுள்ளது.


இவர்கள் பிரிவிற்கு சரத் குமாரும் ஒரு வகையான காரணமாக இருக்கக் கூடும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஷாலை சரத் குமார் குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்காது. குறிப்பாக ராதிகாவிற்கு விஷால் என்றாவே ஆகாத பட்சத்தில் எப்படி வரலட்சுமி விஷால் திருமணம் சாத்தியம் ஆகும் என தகவல் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.


விஷாலிற்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்னை காதலிக்கிறார். அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். இந்த தகவல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் விஷால் அனிஷா ரெட்டி நிச்சயதார்த்தம்(engagement) படு விமர்சியாக நடைபெற்றது.


இதில் திரைதுறையை சேர்ந்த  விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். குறிப்பாக வரலட்சுமி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிச்சயதார்த்த(engagement) விழாவில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று பங்கேற்றனர். குறிப்பாக குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி, நந்தா, ரமணா ஸ்ரீமன் மற்றும் பசுபதி உள்ளிட்டோர் இந்த நிச்சயதார்த்தம்(engagement) விழாவில் பங்கேற்றனர்.


இந்த நிச்சயதார்த்தம்(engagement) விழா முடிந்ததும் நண்பர்களுக்கு விஷால் பார்ட்டி வைத்துள்ளார். திருணம் விஷால் முன்பே கூறியது போன்று நடிகர் சங்க கட்டிடத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.


நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் விஷால் திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறுவதற்கான பணிகள் ஆயத்தமாகி வருகின்றன.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo