காமெடி நடிகர் சதிஷ் ‘தமிழ்ப் படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மதரசாப்பட்டினம், எதிர் நீச்சல், மெரினா போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் விஜய்யின் ‘பைரவா’ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகரானார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது.
இதனிடையே பைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை கீர்த்தி சுரேஷிற்கும், சதீஷிற்கும் (actor sathish) காதல் ஏற்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அந்த தகவலை இருவருமே மறுத்துவிட்டனர். இப்படி திருமண விஷயங்களில் சர்ச்சையில் சிக்கினாலும், தனது திருமணம் குறித்து எந்தவித தகவலும் வெளியாடமல் இருந்த சதீஷுக்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
மேலும் படிக்க – சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த காதல் கதை-தேசங்களைத் தாண்டிய காதல்
இறுதியில் ‘சிக்சர்’ பட இயக்குநரின் தங்கை சிந்துவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ‘சிக்சர்’ படத்தில் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இந்த திருமணம் காதல் திருமணம் என்று பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தனர்.
It’s a pure arrange marriage 😍😍😍😍 pic.twitter.com/hjEfNjA46K
— Chachi (@chachi_dir) November 23, 2019
இந்த நிலையில், ‘சிக்சர்’ இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு “இது உண்மையான நிச்சயக்கப்பட்ட திருமணம்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவால் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது உறுதியான நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் திருமண அழைப்பிதழை கொடுத்தார் சதீஷ். மேலும் தனது திரையுலக நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
மேலும் படிக்க – அமெரிக்காவில் வளைகாப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் நடிகை.. !
இந்நிலையில் நடிகர் சதீஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சதீஷின் நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Celebrities @ #SathishWedsSindhu Wedding Reception@actorsathish @teamaimpr pic.twitter.com/8qFnnuDYi2
— Team Aim (@teamaimpr) December 11, 2019
சிவகார்த்திகேயனின் அறிமுக படமான மெரினா படத்தில் இருந்தே அவருடன் சதீஷ் (actor sathish) நடித்து வருகிறார். தன்னுடைய நெருங்கிய நண்பரான சதீஷுக்கு தன்னுடைய பல படங்களில் வாய்ப்பளித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் ஜீவா, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
Happy married life the most fav comedian @actorsathish brother behalf of our loved @Gautham_Karthik Anna @GauthamFanss @gautham_fans #SathishWedsSindhu #GauthamKarthik pic.twitter.com/yeIbXwaUlD
— kumar_GK (@lovelykumar009) December 10, 2019
மேலும் பல நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் சதீஷின் (actor sathish) திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க – ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!