இந்தியாவின் பெருமையே வருக ! தேசத்தின் ஹீரோவைக் கொண்டாடும் பிரபலங்கள் !

இந்தியாவின் பெருமையே வருக !  தேசத்தின் ஹீரோவைக் கொண்டாடும் பிரபலங்கள் !

கடந்த இரண்டு நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்கள் அனைவருமே கடும் பதட்டத்தில் இருந்தனர். அத்து மீறி இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய எல்லையில் இருந்து விரட்டி சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் (abinandhan) பாகிஸ்தானில் எதிர்பாராமல் மாட்டிக் கொண்டார்.


இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதனை மிக் ரக விமானம் மூலம் நம் இந்திய விமானிகள் துரத்தியடித்தனர். இதில் இந்திய வீரர் அபிநந்தன் இரண்டு பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு நடுவில் மாட்டி தாக்கப்பட்ட பின்னரும் ஒரு பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டுத்தான் தரையிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விமானம் சுடப்பட்டதால் பாராசூட் மூலம் தரையிறங்கி இறங்கிய அபிநந்தன் அருகே இருந்த இளைஞர்களிடம் இது இந்தியவா பாகிஸ்தானா என்று கேட்டிருக்கிறார். வேண்டும் என்றே அவர்கள் இந்தியா என்று பதில் கூற இந்தியா வாழ்க என்று சத்தமாக கோஷமிட்டுள்ளார். இதனைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தானிய இளைஞர்கள் அபிநந்தனைக் கற்களால் தாக்கத் தொடங்கிய போதுதான் தான் பாகிஸ்தானில் இருப்பது அபிநந்தனுக்கு புரிந்தது. உடனடியாக அங்கிருந்து ஓடிஏ ஆரம்பித்தார். அந்த இளைஞர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்கியபடியே துரத்தியுள்ளனர்.


எதிரி இடத்தில் சிக்கிக் கொண்டாலும் அஞ்சாமல் அபிநந்தன் தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டபடியே அருகே இருந்த குளத்தில் குதித்திருக்கிறார். இமைக்கும் நேரத்தில் தன்னிடம் இருந்த வரைபடம் போன்ற ஆவணங்களை எடுத்து சுக்குநூறாக கிழித்துப் போட்டிருக்கிறார். சில ஆவணங்களை வாயில் போட்டு மென்று முழுங்கி இருக்கிறார்.


தனக்கு ஆபத்து என்கிற நிலையிலும் கூடத் தாய் நாட்டின் ரகசியங்கள் ஒரு போதும் எதிரி கையில் கிடைத்து விடக் கூடாது எனும் அபிநந்தனின் நாட்டுப்பற்று நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.அதன்பின் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வந்து அந்த முரட்டு இளைஞர்களிடம் இருந்து அபிநந்தனை பாதுகாப்பாக அழைத்து சென்று மருத்துவம் செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் உரையாடிய உரையாடல் வரலாற்று சிறப்பு மிக்கது. அதனை நாம் அனைவருமே பார்த்தோம்.


ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அமைதி வேண்டி அபிநந்தனை திரும்ப ஒப்படைப்பதாக உறுதி கூறினார்,


அதன்படி இன்று வாகா எல்லையில் அபிநந்தன் ஜாமர் கார்களின் பாதுகாப்போடு இந்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். 


abi


 


வெகு காலத்திற்குப் பிறகு உண்மைக்கு மிக நெருக்கத்தில் ஒரு நிஜ வீரனை கண்டடைந்த திருப்தியில் இந்தியாவே அபிநந்தனைக் கொண்டாடுகிறது.


#WelcomeHomeAbhinandan எனும் ஹாஷ் டாகுடன் உலகமே அபிநந்தனைக் கொண்டாடுகிறது.


ஒவ்வொரு இந்தியனும் உள்ளுக்குள் சந்தோஷ முழக்கமிட்டுக் கொண்டிருந்தாலும் இதனை பிரபலங்கள் கொண்டாடும் போது அதற்கான பலம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது.


அப்படி அபிநந்தனின் வருகையை அற்புதமாகக் கொண்டாடிய சில பிரபலங்களின் டிவீட்கள் இதோ.
 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.