எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்!

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்!

சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது.


அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை வரையறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


இதையடுத்து வேறு ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் 8 பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரித்தனர்.


தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கியம் மற்றும் நன்மைகள்!


கடந்த வெள்ளிக்கிழமை அந்த அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. உடனடியாக அந்த அறிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. 484 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


அதில் குறிப்பாக வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 8-ம் வகுப்பு வரை தாய் மொழி(Language) வழிகல்வியை கட்டாயம் பயில வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் மற்றும் தொக்கு !


மேலும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை(Language) தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில்(Language) ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி அல்லாத மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 3-வது மொழியாக(Language) இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


6-ம் வகுப்பு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக(Language) இந்தி கற்றுத்தரப்பட வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு செல்வதற்கு முன்பு ஒவ்வொரு மாணவனும் தலா 3 மொழிகளில்(Language) நன்றாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை கஸ்தூரிரங்கன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆனால் இந்த பரிந்துரைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.


தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்! மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்!


இதனைத் தொடர்நது எந்த மொழியையும்(Language) யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரையில். மும்மொழிக்(Language) கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி(Language) மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியையும் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இருமொழி(Language) கொள்ளை தான் இருக்கும் என்றும் மும்மொழிக்(Language) கொள்கையை எந்த காலத்திலும் தமிழகம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.
இதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும்(Language) வளர்க்க விரும்பியே "ஒரே பாரதம் உன்னத பாரதம்" முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்" என கூறியுள்ளார்.பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo