அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Contact care@popxo.com for assistance.
உங்கள் விபரம்
popxo வில் நான் எழுதுகின்ற விஷயங்களை யார் பார்க்க முடியும்?
பதிவு செய்த பயனர்கள் மட்டுமே உங்கள் போஸ்ட்டுகளை காண முடியும்.
பிற பயனர்கள் நான் எழுதுவதை காண முடியுமா?
பொதுவான பதிவுகளை அனைத்து பயனர்களும் பார்க்க முடியும், இருப்பினும், யார் அவற்றை போஸ்ட் செய்தது (இடுகையிட்டது) என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த இடுகைகளுக்கு அருகில் உங்கள் பெயர் ஒருபோதும் தெரியாது, மேலும் உங்கள் பொது சுயவிவரத்திலிருந்து அவை விலக்கப்படும்.
என் புக்மார்க்கு / சேமிக்கப்பட்ட விஷயங்களை நான் எங்கே பார்க்கலாம்?
உங்கள் புக்மார்க்கு கீழ், உங்கள் சுயவிவரப் பக்கத்தில் உங்கள் சேமிக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காண்பீர்கள்.
எனது பயனர்பெயரை மாற்றலாமா?
பேஸ்புக் அல்லது கூகிள் ஐடிகளைப் பயன்படுத்தி உள்நுழைவதால், கணினி உங்களுக்காக பயனர்பெயரை உருவாக்குகிறது.
எனது சுயவிவர படத்தை மாற்றலாமா?
ஆம், நீங்கள் மாற்றலாம். உங்கள் சுயவிவர பக்கத்திற்கு சென்று, அமைப்புகள் ஐகானைக் கிளிக் செய்து, சுயவிவர படத்தில் உள்ள திருத்து பொத்தானைக் கிளிக் செய்து, அங்கு இருந்து மாற்றலாம்.
எனது பிறந்த தேதியை எப்படி மாற்றுவது?
உங்கள் சுயவிவர பக்கத்தில் அமைப்புகள் ஐகானுக்கு சென்று, பிறந்த தேதியில் கிளிக் செய்து சரியான பிறந்த தேதி தேர்வு செய்து மாற்றலாம்..
நான் மற்றொரு பயனரை எப்படிப் பின்தொடறுவது
மற்றொரு பயனரைப் பின்தொடர்வதற்காக, அந்த பயனரின் சுயவிவரத்தில் கிளிக் செய்து, வலது புறத்தில் கொடுக்கப்பட்ட பின்தொடர் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
மற்றொரு பயனருடன் நான் எப்படி சாட் செய்வது?
மற்றொரு பயனருடன் சாட் செய்ய, அந்த பயனரின் சுயவிவரத்தில் கிளிக் செய்து, வலது புறத்தில் கொடுக்கப்பட்ட அரட்டை ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
பயன்பாட்டில் போஸ்ட் செய்யும் கேள்விகளையோ அல்லது வாக்கெடுப்புகளையோ நான் எவ்வாறு பார்ப்பது?
பயன்பாட்டில் நீங்கள் போஸ்ட் செய்யும் கேள்விகளையும் வாக்குப் பதிவையும் பார்க்க, உங்கள் சுயவிவரத்தில் கிளிக் செய்து, 'உங்கள் போஸ்ட்டுகள்' என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு பயனர் அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்கிறது?
popxo உலகம் எங்கள் பயனர்களுக்கான ஒரு தனியார் சமூகமாக செயல்படுகிறது, மேலும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, உதவியாகவும் இருக்க உதவுகின்றது. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்கின்றோம், மேலும் எங்கள் பயன்பாட்டில் ட்ரோலிங் அல்லது ஸ்பேமிங்கை போன்றவற்றை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். பயனர் பலமுறை புகாரளிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து அறிக்கை சுயவிவரங்களும் கண்டிப்பாக எங்கள் குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட சுயவிவரம் நேரடியாக எங்கள் குழுவினரால் சரிபார்க்கப்பட்ட பின் மட்டுமே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி!
என் பேட்ஜ்கள் மற்றும் ஸ்கோர்களுக்கு என்ன நடந்தது?
நாங்கள் உங்களுக்கு சிறந்ததை தர வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். காத்திருங்கள்!
போப்க்ஸ்சோ சமூக வழிகாட்டுதல்கள்
யார் போப்க்ஸ்சோக்குள் பதிவு செய்து உள்ளே செல்ல முடியும்?
போப்க்ஸ்சோ பெண்கலுக்காக, பெண்களால் தொடங்கப்பட்டது! இந்தியாவில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகவும் வசதியாகவும் பேசக்கூடிய ஒரு சமூகமாக இது இருக்கின்றது. இந்த காரணத்திற்காக, ஹேக்ஸ் ஹேக்கிங் பிரிவில் யாராலும் அணுக முடியாது. எனினும், வலைத்தளத்தை உலாவ, கட்டுரைகளைப் படிக்கவும், எங்கள் வீடியோவைப் பார்க்கவும் மற்றும் போப்க்ஸ்சோ கடைகளுக்கான சமீபத்திய வசதியை அணுகவும் அனுமதிக்கப்படுவார்கள். அதனால் நீங்கள் அச்சம் இல்லாமல் எதையும் கேட்கலாம்.
popxo வில் நான் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக் கூடாது?
செய்ய வேண்டியவை:
 • - போப்க்ஸ்சோ சமூகம் பெண்கள் சுதந்திரமாக எதை பற்றியும் கவலைப் படாமல் பேச ஒரு நல்ல தளமாக இருக்கின்றது!
 • - நேர்மறையாகவும், உதவும் குணங்களோடும் இருங்கள். போப்க்ஸ்சோ சமூகம் பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளும் வகையிலும், வெளிப்படையாக பேசிக் கொள்ளும் விதத்திலும் அமைந்துள்ளது.
 • - உதவும் குணங்களோடு இருங்கள். உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒருவர் கேட்கும் கேள்விக்கு ஏற்றவாறு தர வேண்டும்.
 • - எளிமையாக எழுதி, பிறர் எளிதாக படிக்கும் வகையில் உங்கள் கருத்துக்களை வெளி கொன்று வர வேண்டும்.
 • - இந்த சமூகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுங்கள். விதிகளை மீறுபவர்களை குறிப்பிடுங்கள்.
செய்யக் கூடாதவை:
 • - யாரை பற்றியும் புகார் கூறுவது, கிண்டல் செய்வது அல்லது வெறுக்கும் வகையில் பதிவுகளை போடுவது கூடாது
 • - பாலுணர்வை தூண்டும் வகையிலான படங்கள் மற்றும் கேள்விகளை பயனர்களிடம் பகிரவோ அல்லது கேட்கவோக் கூடாது
 • - உங்கள் யு ட்யுப் மற்றும் இன்ஸ்டாகிரம் பதிவுகளை இங்கே விளம்பரப் படுத்தக் கூடாது. மேலும் இதில் மதம் சார்ந்த அல்லது அரசியல் அல்லது உங்கள் தொழில் சார்ந்த பதிவுகளையும் போடக்கூடாது
 • - உங்கள் தொழில் மற்றும் வாட்ஸ் அப் குழு பதிவுகளை இங்கே போடக் கூடாது
 • - ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கக் கூடாது
 • - உங்கள் சொந்த பிரச்சனைகளை வெளிகாட்டும் வகையில் பிற பயனரை பற்றி புகார் கூறக் கூடாது
 • - சட்ட விரோதமான விடயங்களை விளம்பரப் படுத்தக் கூடாது (ஆபாசம், போதைப் பொருட்கள் போன்றவை)
 • - உங்கள் சொந்த விவரங்கள், அதாவது அலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, சமூக வலை தள அடையாளம் போன்றவற்றை பகிரக் கூடாது
போப்க்ஸ்சோ போஸ்டுகள் நடுநிலையானதா?
நடுநிலையாளர் பதிவுகள் போப்க்ஸ்சோ விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்று பார்ப்பார். அப்படி விதிமுறைகளை அது பின்பற்றவில்லை என்றால், அத்தகைய பதிவுகள் நிராகரிக்கப் படும்.
ஏன் படத் கருத்துக் கணிப்பு அல்லது கேள்விகளை பார்க்க முடியவில்லை?
அனைத்து படங்களும் நடுநிளையாலரால் முதலில் பார்க்கப் படும். அவை விதிமுறைகளை உள்ளடங்கி இருந்தால் பயனர் பார்வைக்குப் போடப் படும். இதற்க்கு 6 முதல் 8 மணி நேரம் தேவைப் படலாம்.
நான் கேள்விகளுக்கு பதிலளித்தேன் ஆனால் அவை யாவும் பயன்பாட்டில் எந்த இடத்திலும் பிரதிபலிக்கவில்லை, ஏன்?
எங்கள் பயன்பாட்டு அமைப்பில் சில தவறான வார்த்தைகள் பதிவில் இருந்தால் அதனை அது நிராகரித்து விடும். எனவே ஒரு பதிவில் தவறான வார்த்தைகள் இருந்தால் ​​கணினி அவற்றை நேரடியாக கண்காணித்து இழுத்து விடுகின்றது. எனவே அவற்றை போஸ்ட் செய்தாலும் பார்க்க முடியாமல் போகின்றது. உங்கள் பதிவுகளை சமர்பித்தப் பின் உங்கள் போஸ்ட்டுகள் காட்டப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்தால், சமர்ப்பித்தப் பின் பொறுமையாக இருங்கள், எங்கள் மதிப்பீட்டாளர்கள் அந்த போஸ்ட்டை சமூக விதி முறைகளுக்குள் அடங்கி உள்ளதா என்று பார்த்து அதை பதிவிடுவார்கள்.
நான் ஒரு போஸ்ட்டை புகார் கூறலாமா?
எந்தவொரு பயனரும் எந்தவொரு போஸ்ட்டையும் பொருத்தமற்ற அல்லது ஸ்பேம் / மோசடி என்று புகாரளிக்கலாம். அதன் பின் அது மதிப்பீட்டாளறால் மதிப்பாய்வு செய்யப்படும்.
நான் பிற பயனர் மீது புகார் கூறலாமா?
நீங்கள் யாராவது பயனர் போப்க்ஸ்சோவை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் மீது புகார் கூற எண்ணினார், ‘ரிபோர்ட் யூசர்’ரை கிளிக் செய்யுங்கள். எங்கள் மதிப்பீட்டாளர் அதனை பார்த்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பார்.
நான் மோசமான நேரத்தை சந்திக்கின்றேன். போப்க்ஸ்சோ எனக்கு உதவி செய்யுமா?
ஆமாம் கண்டிப்பாக! போப்க்ஸ்சோ சமூகம் நீங்கள் ஒரு கடினமான நேரத்தை கடந்து செல்ல நேர்ந்தால் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது தொழில்முறை உதவி தேவைப்பட்டால் உங்களுக்கு உதவி செய்யும் வகையில் உங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் அறிமுகப் படுத்துவோம்.
எனக்கு பிடிக்காத ஒரு போஸ்ட்இருந்தால், அதனை நீங்கள் அகற்றி விடுவீர்களா?
நாங்கள் நியாமான கருத்துக்களை வரவேற்போம். நல்லது, கெட்டது. இது சமூகத்தின் உறுப்பினரால் அனுப்பப்பட்ட ஒரு கேள்வி, பதில் அல்லது கருத்து என்றால், உள்ளடக்கம் பொருத்தமற்றது என்று வெறுமனே அறிக்கை செய்யுங்கள். ஒரு கட்டுரையோ அல்லது கதையையோ நீங்கள் தெரிவிக்க விரும்பினால், community@popxo.com இல் எழுதவும், கட்டுரைக்கு ஒரு இணைப்பைச் சேர்க்கவும். நாங்கள் அதை மதிப்பாய்வு செய்வோம், மேலும் உங்கள் கருத்து சரியானது என்று நாங்கள் கருதினால் அதைத் திருத்த அல்லது அகற்றுவோ செய்வோம்..
தொடர்ந்து popxo வில் இருந்து எனக்கு எப்படி தகவல்கள் வரும்?
உங்கள் அலைபேசியில் popxo வில் இருந்து உங்களுக்கு தகவல் வர நீங்கள் அனுமதித்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் எங்களை முக நூலில் பின் தொடரலாம். [ http://www.facebook.com/popxodaily , ],எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் [ http://www.instagram.com/popxodaily , ] மற்றும் எங்கள் யு ட்யுப் சன்னல் [ http://www.youtube.com/popxotv , ] இவற்றை புதிய பதிவுகளுக்குத் தொடர்ந்து பாருங்கள்
டிஎம் இல் இருந்து ஒருவரை நான் எப்படி அறிக்கை செய்வது?
டிஎம்லிருந்து யாரையாவது புகார் அளிக்க விரும்பினால் தகுந்த புகைப்பட அதாரத்துடன் குறித்த நபர் தொடர்பான தகவல்களை community@popxo.com என்கிற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.
போப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்
போபாக்ஸ்சோ என்றால் என்ன?
போப்க்ஸ்சோ பெண்களுக்காக உருவாக்கப் பட்ட ஒரு சமூகம். இதில் பெண்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை பகிரலாம். மேலும் இங்கே பல கதைகள், படங்கள் பார்ப்பதோடு, சில தலைப்புகளை பற்றி விவாதிக்கவோ அல்லது தங்களது கருத்துக்களை பகிரவோ செய்யலாம். அதில், பேஷன், அழகு, வேலை, உறவுகள் என்று அனைத்தும் அடங்கும்.
எப்படி போப்க்ஸ்சோ குழுவோடு இணைவது?
எங்கள் போப்க்ஸ்சோ குழுவோடு இணைய நாங்கள் எப்போது திறமையானவர்களை வரவேற்கின்றோம். எங்களிடம் தற்சமயம் இருக்கும் தேவைகளை பற்றி அதற்க்கான ஆட்களை வேலைக்கு எடுப்பதை பற்றியும் இங்கு சென்று பார்க்கலாம்- http://popxo.breezy.hr. அதில் ஒன்றும் பதிவிடவில்லை என்றால், நீங்கள் jobs@popxo.com உங்கள் சுய தகவலோடு எழுதலாம்.
நான் போப்க்ஸ்சோவிக்கு சில கதைகளை பகிரலாமா?
நிச்சயம் பகிரலாம்! உங்கள் கதைகளை community@popxo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். அதை எங்கள் ஆசிரியர் தேர்ந்தெடுத்தால் நாங்கள் அதை பதிவிடுவோம். உங்கள் கதையோடு hashtag #mystory என்பதை சேர்க்க மறந்து விடாதீர்கள்.
போப்க்ஸ்சோ பிராண்டுகளுடன் எவ்வாறு வேலை செய்கிறது?
நாங்கள் வேலை செய்யும் பிராண்ட்களுக்கு கூடுதல் சிறப்போடு புதுமைப்படுத்த விரும்புகிறோம். தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கம் உருவாக்குதல், வேடிக்கையான போட்டிகள், புரவலன் நிகழ்வுகள், சமூக ஊடக பிரச்சாரங்கள் என்று பல நிகழ்சிகளை வழங்குகின்றோம் நீங்கள் எங்களுடன் பணிபுரிவதில் ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து சஞ்சனா eipe க்கு partner@popxo.com இல் உங்கள் தேவைகளை எங்களுக்கு சொல்லவும். மற்றவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
போப்க்ஸ்சோவுடன் எப்படி செல்வாக்கு நிறைந்தவர்கள் இணைத்துக் கொள்வது?
நீங்கள் செல்வாக்கு நிறைந்தவராக இருந்தால், மேலும் போப்க்ஸ்சோவுடன் பணி செய்ய விரும்பினால், எங்களது இன்ப்ளுவென்சர் மார்க்கெட்டிங் தளத்தை - Plixxo - இல் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தவும். இதனால் பணம் செலுத்திய பதிவுகள், ஒத்துழைப்பு மற்றும் இன்னும் பல வாய்ப்புகளை இதனால் பெறுவீர்கள்!
ஆர்டர் மற்றும் எனது கணக்கு
என்னுடைய ஆர்டர் உறுதி செய்யப்பட்டதா?
உங்களுக்கு ஒரு மின் அஞ்சலும் மற்றும் குறுஞ்செய்தியும் உங்கள் ஆர்டர் உறுதி செய்தப் பின் வரும். மேலும் தகவலுக்கு care@popxo.com அணுகவும்
எந்த மாதிரியான கட்டணத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்?
விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை கட்டனத்திர்க்காக பெற்றுக் கொள்வோம்.
நான் வாடிக்கையாளர் சேவைக்கு மின் அஞ்சல் அனுப்பினேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. ஏன்?
எங்கள் வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிலளித்து விடுவோம்.
போப்க்ஸ்சோ கடையில் இருந்து பொருட்கள் வாங்க நான் தனியாக அக்கௌன்ட் / கணக்கு வைத்துக் கொள்ள வேண்டுமா.
நீங்கள் popxo வில் பொருட்கள் வாங்க தனியாக அக்கௌன்ட் வைத்துக் கொள்ள தேவை இல்லை. எனினும் நீங்கள் இலவசமாகவும் விரைவாகவும் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் அக்கௌன்ட் பதிவு செய்வதால்:
 • - ஒரு பொருளை வாங்கும் போது விரைவாக வாங்கி விடலாம்
 • - உங்களது தற்போதைய ஆர்டரின் நிலை பற்றித் தெரிந்து கொள்ளலாம்
 • - கடந்த ஆர்டர்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம்
 • - உங்கள் அக்கௌன்ட் தகவல்களில் மாற்றங்கள் செய்யலாம்
 • - பல முகவரிகளை பதிவு செய்து கொள்ளலாம்
நீங்கள் ஒரு விருந்தினராக பொருட்கள் வாங்க வந்தால், அது குறித்து உறுதி உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வரும். உங்களால் எந்த தகவல்களையும் பின் தொடர முடியாது.
உங்கள் இணைய தளம் பாதுகாப்பானதா?
இங்கும்! உங்கள் முகவரி, அலைபேசி எண் மற்றும் கிரெடிட் கார்டு தகவலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பாதுகாப்பான சாக்கெட் லேயரை (ssl) பயன்படுத்துகிறோம்.
ஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்
எப்போது என் ஆர்டரை ஷிப் செய்வீர்கள்?
நாங்கள் ஆர்டர்களை பொதுவாக இரண்டு வேலை நாட்களுக்குள் ஷிப் செய்து விடுவோம். எனினும் உங்கள் கையில் கிடைக்கும் நேரம், நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து உள்ளது.
என்னுடைய ஆர்டர் எப்போது எனக்கு கிடைக்கும்?
உங்கள் கையில் பொருட்கள் கிடைக்கும் நேரம் நீங்கள் ஆர்டர் செய்துள்ள பொருள் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உள்ளது. எனினும் இதனை நீங்கள் எங்கள் இணையதளத்தில் பின் தொடர்ந்து அதன் நிலையை கண்டறியலாம். அதற்க்கு உங்களிடம் இருக்கும் ட்ரக்கிங் ஐடியை பயன் படுத்த வேண்டும்.
மொத்த ஆர்டருக்கும் நீங்கள் டெலிவரி கட்டணம் வாங்குவீர்களா?
நாங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும் இலவசமாக டெலிவரி செய்கின்றோம். எனினும் நீங்கள் வாங்கும் பொருளின் விலை ரூபாய். 35௦க்கு கீழ் இருந்தால், ஒரு சிறு தொகையை கட்டணமாக பெறுகின்றோம்.
நான் எப்படி என்னுடைய ஆர்டரை டிராக் செய்வது?
நீங்கள் ஆர்டர் செய்த பொருள் ஷிப் செய்யப் பட்டவுடன் உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்படும். அதில் உங்கள் டிராக் எண் மற்றும் சேவை செய்பவரின் தகவல்கள் இருக்கும். அதனைக் கொண்டு நீங்கள் எளிதாக இணையதளத்திலோ அல்லது டிராக்லைட் சென்றோ உங்கள் ஐடியை போட்டு பார்க்கலாம்.
நீங்கள் மொத்த ஆர்டர் அல்லது பெரிய ஆர்டர்களுக்கு தள்ளுபடி கொடுப்பீர்களா?
ஆம். உங்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவுவோம். மொத்த ஆர்டர் செய்ய விரும்பினால் care@popxo.com தொடர்பு கொள்ளவும்.
எனக்கு சேதமடைந்த பொருள் வந்துள்ளது, நான் என்ன செய்வது?
popxo.com உங்களுக்கு அதனை மாற்றித் தரும். நீங்கள் அந்த பொருளை மாற்ற எண்ணினால் care@popxo.com மின் அஞ்சல் அனுப்புங்கள். எனினும், இதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். உங்களுக்கு வேறு பொருளோடு மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றால், உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம்.
எனது ஆர்டரை இரத்து செய்யலாமா?
நீங்கள் உங்கள் ஆர்டரை இரத்து செய்ய எண்ணினால் care@popxo.com மின் அஞ்சல் அனுப்பவும் அல்லது +91-9821519342 என்ற எண்ணுக்கு அழைத்து உங்கள் பொருள் ஷிப் செய்யப் படவில்லை என்றால் இரத்து செய்யலாம்.
உங்கள் ஷிப்பிங் பாலிசி என்ன?
popxo.com ரூபாய். 35௦க்கு மேல் விலை இருக்கும் பொருட்களுக்கு இலவசமாக ஷிப்பிங் செய்யும். வாடிக்கையாளர்கள் பொதுவாக 4 முதல் 6 வேலை நாட்களுக்குள் பொருட்களை பெற்று விடுவார்கள். மேலும் நாங்கள் 13௦௦௦ அஞ்சல் குறியீட்டு எண்களுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறோம். ஒரு வேலை உங்கள் அஞ்சல் குறயீட்டு எண் எங்கள் பட்டியலில் இல்லை என்றல், விரைவில் வருகிறோம். உங்களுக்கு விநியோகம் செய்யப் படும் நாளை பத்ரிநாத் தகவல் தேவை என்றால் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள் care@popxo.com
உங்களுடைய பொருட்களை திரும்பப் பெரும் விதி என்ன?
ஆர்டர் அதன் அசல் பொதி மற்றும் நிலையில் இருந்தால், அதைப் பெற்ற 14 நாட்களுக்குள் திரும்பக் கோரலாம்.உங்கள் ஆர்டர்ரை மாற்ற / திருப்பித் தர விரும்பினால், care@popxo.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.பெறப்பட்ட தயாரிப்பு சேதமடைந்திருந்தால் / பெறும் போது குறைபாடுள்ளதாக இருந்தால் அல்லது இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி அல்ல எனில் மட்டுமே மாற்றீடுகள் செல்லுபடியாகும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்க. தயவுசெய்து கவனிக்கவும் : அழகு சாதனங்களை திரும்பப் பெற முடியாது.
நீங்கள் பணத்தை திரும்பத் தரும் விதிமுறை என்ன?
உங்களிடம் இருந்து எங்களுக்கு பொருள் வந்தவும், அதன் தரத்தை சோதித்து பார்த்து விட்டு, உங்கள் பணத்தை திரும்பக் கொடுப்பதற்கான வேலைகளை தொடருவோம். இது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் பாங்கிங் ஆகிய வற்றிற்கு செல்லுபடியாகும். மேலும் ரூபாய். 50 ஷிப்பிங் செலவுக்கிர்காக கழிக்கப் படும். நீங்கள் பணம் கொடுத்து வாங்கி இருந்தால், உங்களால் திரும்பப் பெற முடியாது, மாறாக பொருளை மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் வெளி நாடுகளுக்கு ஷிப் செய்வீர்களா?
இல்லை. நாங்கள் இந்தியாவில் மட்டுமே தற்சமயம் செய்கின்றோம். வெளி நாடுகளுக்கு விரைவில் வருவோம்.
அழகு சாதன பொருட்களை திருப்பி அனுப்ப அல்லது ரிடன் பண்ண முடியுமா?
அழகு சாதன பொருட்களை பொருத்தவரை ரிட்டனோ அல்லது திருப்பி அனுப்பவோ முடியாது. விற்பனை இறுதியானது.
திறக்கப்பட்ட அழகு சாதனப்பொருட்களை ஏன் ரிடன் பண்ணலாமா?
வாடிக்கையாளரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். ஓபன் செய்த பொருட்களை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில்லை, ஒரு வேளை திறந்திருந்தால் திருப்பி அனுப்பலாம்.
எனது ஆர்டரை எவ்வாறு ரத்து செய்யலாம், திருத்தலாம் அல்லது சேர்க்கலாம்?
ஆர்டர்களை திருத்த எல்லா வசதிகளும் உள்ளது. ஆனால் முடிந்த வரை விரைவாக டெலிவரி செய்ய முயற்சி செய்வதால் உங்களது காலம் தாழ்த்திய மாற்றங்கள் சில நேரத்தில் நிராகரிக்கப்படலாம்.
அழகு சாதன பொருட்களை திருப்பி அனுப்ப அல்லது ரிடன் பண்ண முடியுமா?
அழகு சாதன பொருட்களை பொருத்தவரை ரிட்டனோ அல்லது திருப்பி அனுப்பவோ முடியாது. விற்பனை இறுதியானது.
திறக்கப்பட்ட அழகு சாதனப்பொருட்களை ஏன் ரிடன் பண்ணலாமா?
வாடிக்கையாளரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். ஓபன் செய்த பொருட்களை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில்லை, ஒரு வேளை திறந்திருந்தால் திருப்பி அனுப்பலாம்.
எனது ஆர்டரை எவ்வாறு ரத்து செய்யலாம், திருத்தலாம் அல்லது சேர்க்கலாம்?
ஆர்டர்களை திருத்த எல்லா வசதிகளும் உள்ளது. ஆனால் முடிந்த வரை விரைவாக டெலிவரி செய்ய முயற்சி செய்வதால் உங்களது காலம் தாழ்த்திய மாற்றங்கள் சில நேரத்தில் நிராகரிக்கப்படலாம்.