நடிகர் மோகன்.. 80களில் கமல்ஹாசன் ரஜினிகாந்துக்கு (rajinikanth) சமமாக பாவிக்கப்பட்ட நாயகர்களில் இவர் முக்கியமானவர். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் திறமை மட்டுமே போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.
எந்த வித பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்த மோகன் (actor mohan) சில வருடங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும்படி செய்தது அவரது அதிர்ஷ்டம்தான். அவருடைய தெத்துப்பல் புன்னகைத்தான் அந்த அதிர்ஷ்டத்திற்கான வேராக இருக்க முடியும்.
மோகன் நடிக்க வந்த காலங்களில் பெண்களுக்கு நடிகர் கமல்ஹாசன் (kamalhaasan) மீது க்ரேஸ் இருந்தது. அதற்கப்புறம் பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்தான். நடிகர் மோகனுக்கு அதிர்ஷ்டம் என்பது அவருடைய முதல்படத்தில் இருந்தே நிழலாக பின் தொடர்ந்து வந்திருக்கிறது.
Youtube
ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திராவின் பார்வையில் பட்டு முதல்படமே அவருடைய படத்தில் நாயகனாக நடிக்கக்கூடிய பாக்கியம் நடிகர் மோகனுக்கு கிடைத்தது. கமல்ஹாசனுக்கு கூட இந்த யோகம் இல்லை. கன்னடத்தில் அவர் இயக்கிய கோகிலா திரைப்படம் 250 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. முதல் படமே 250 நாள் ஓடிய அதிர்ஷ்ட நாயகனாக மோகன் இருந்தார்.
அதற்கடுத்தபடியாக இயக்குனர் மகேந்திரன் திரைப்படமான நெஞ்சத்தைக் கிள்ளாதே மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். வித்யாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் நடிகர் மோகனைத் தேடி வந்தன என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவின் லெஜெண்ட்களான பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன் மூலம் அறிமுகம் ஆனவர் மோகன்.
அதன் பின்னர் மோகன் நடித்த திரைப்படங்கள் எல்லாம் வசூலை வாரிக் குவித்தன. பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் 300 நாட்களுக்கு மேல் ஓடியது. இப்போதுதான் வெற்றிகரமான ஐந்தாவது நாளுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அப்போது சாதாரணமாக ஒரு நல்ல திரைப்படம் 100 நாளுக்கு மேல் ஓடும். ரசிகர்கள் அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் திரும்ப திரும்ப சென்று பார்த்து அதனை வெற்றி திரைப்படமாக மாற்றுவார்கள்.
Youtube
மோகன் என்றாலே மென்மையான கதாபாத்திரம் என மக்கள் மனதில் பதிந்திருந்தது.நன்றாக பாடல்களுக்கு வாயசைத்து நடிப்பதால் பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பாடகராகவே இருந்தது. ஒரு சில திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களையும் நடித்து பெயர் பெற்றவர் மோகன். விதி மற்றும் நூறாவது நாள் திரைப்படங்கள் இதற்கு உதாரணம்.
தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையும் நடிகர் மோகன்தான். கால்ஷீட் சிக்கல்களே வராமல் தெளிவாக நடித்துக் கொடுப்பதில் வல்லவர் நடிகர் மோகன். விட்டுக்கொடுப்பதிலும் முதன்மையானவர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். மினி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் மேக்சிமம் லாபம் கிடைக்கும் திரைப்படங்களாக மோகனின் திரைப்படங்கள் இருந்தன என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
Youtube
மோகனுக்கு அமைந்த பாடல்கள் எல்லாம் வருடங்கள் பல ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்படி இருந்தன. மோகன் திரைப்படங்கள் என்றாலே இளையராஜா (ilaiyaraja) ஸ்பெஷலான ட்யூன்கள் போடுவார் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் மோகனைத் தேடி வந்த கதைகள் எல்லாம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இருந்ததுதான் இசைஞானி தன்னுடைய இசையை மெருகேற்ற காரணம் என்பதுதான் உண்மை.
இப்படி எல்லா விதத்திலும் பெயர் பெற்ற மோகன் மீது நடிகை ஒருவர் திடீரென வதந்தி ஒன்றைக் கிளப்பினார். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகர் மோகன். 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் மோகன். அதில் பெரும்பாலான திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.
Youtube
திரையுலகில் நல்ல உச்சத்தில் சென்று கொண்டிருந்த நடிகர் மோகன் மீது ஒரு நடிகை மீது காதல்வயப்பட்டார். ஆனால் அவருடைய காதலை மோகன் மறுத்து விட்டார். 90களில் மோகனுக்கு ஜோடியாக நடித்த “பூ” நடிகைதான் என்கிறார்கள். அந்த காலங்களில் எந்த தொலைத்தொடர்பும் தொழில்நுட்பங்களும் இந்த அளவிற்கு இல்லை. இன்றைக்கு ஒருவரைப் பற்றி தவறான செய்து சொன்னால் அந்த நபர் மீது அவதூறு வழக்கு கூட பதிவு செய்யலாம். ஆனால் அன்று அப்படியான ஞானம் யாரிடமும் கிடையாது.
அந்த நேரத்தில் தான் காதலை மறுத்ததால் அவமானப்பட்ட அந்த நடிகை திடீரென நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டார். அப்போது பத்திரிகைகளில் எழுதுவதுதான் சத்தியம் என்பதால் பலர் அதனை நம்பினார்கள். அப்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லாததால் நடிகர் மோகனுடன் சேர்ந்து நடிக்க நாயகிகள் முன்வரவில்லை.
இந்த வதந்தியை நம்பி மோகன் வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் கூட கதவை சாத்தி கொண்டனராம். இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற நடிகர் மோகன் வீட்டை விற்று விட்டு சென்று விட்டாராம். இந்த விஷயங்களை நடிகர் மோகனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Youtube
இப்போது 61 வயதாகும் மோகன் ஆரோக்கியமாகவே இருக்கிறார். நடுவே 2015 வெள்ளத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கியவர்களில் நடிகர் மோகனும் ஒருவர். எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னை நேசித்தவர்கள் வெறுத்தவர்கள் என யோசிக்காது அனைவருக்கும் உதவி செய்தார் மோகன்.
இப்போதும் மோகன் எனும் பெயரைக் கேட்டாலே மீண்டும் அவரைத் திரையில் பார்க்க முடியாதா என பல ரசிகர்கள் மனம் ஏங்கி கொண்டுதான் இருக்கிறது. வெகு சீக்கிரம் மோகன் மீண்டும் நம் அனைவருக்காகவும் திரைக்கு வர வேண்டும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!