logo
ADVERTISEMENT
home / Celebrity Weddings
தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவையில் வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவையில் வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

பிக் பாஸ் வைஷ்ணவி இப்போது மக்கள் மனதில் புது இடம் பிடித்திருக்கிறார். காரணம் அவர் நடத்திய எளிமையான திருமணம் ! பெற்றோர்கள் சம்மதத்துடன் மிக எளிமையான முறையில் காதலரை திருமணம் செய்திருக்கிறார் வைஷ்ணவி.

விமானியான அஞ்சனை 3 வருடங்கள் காதலித்த வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் காதலருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பின்னர் குடும்பத்தாரின் மனதை சந்தோஷப்படுத்த சடங்குகளில் சம்மதம் இல்லாத வைஷ்ணவி அஞ்சான் ஜோடி ஒரு எளிமையான திருமணத்தை நடத்தினார்கள்.

இதனை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்வுகளின் அடிப்படையில் வைஷ்ணவியே விளக்கமாக படிப்படியாக விளக்கியிருக்கிறார். அதனை படிக்கையில் நமக்கும் சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. அட நம்ம வைஷ்ணவியா இது என்று ஆச்சர்யப்படுகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். (Its really awesome!)

பிக் பாஸ் வீட்ல விசேஷங்க !

ADVERTISEMENT

twitter

திருமணம் என்றாலே பெற்றவர்களின் மனதை கதிகலங்க வைக்கும் ஷாப்பிங் செலவுகள், கல்யாணமண்டப தொகைகள், அழைப்பிதழ் செலவுகள், அதனை கொண்டு போய் கொடுத்து அழைத்து வரும் செலவுகள் , நகைகள், உடைகள், சாப்பாட்டு செலவுகள் அதில் பாதி வீணாகும் வேதனைகள் என நினைத்தாலே தலை சுற்றி போகும் வண்ணம் நமது கலாச்சார நிகழ்வுகள் இருக்கின்றது. இதன் ஆதிநுனி எங்கிருந்து வந்திருக்கலாம் என்றதை ஆராய்ந்தால் பேராசையின் வெளிப்பாடுதான் இந்த திருமண ஆடம்பரங்கள். அதனை இன்னொரு கட்டுரையில் பேசுகிறேன்.

இப்போது வைஷ்ணவிக்கு வருவோம். வைஷ்ணவி அஞ்சன் திருமணம் பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலில் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தேறியது. அதனை பற்றி வைஷ்ணவியே படங்கள் மூலம் ட்விட்டரில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

உடைக்கான ஷாப்பிங் செலவை தவிர்த்த வைஷ்ணவி தனது பாட்டியின் பட்டு புடவை ஒன்றை திருமணத்தன்று அணிந்து கொண்டார். அஞ்சனும் சாதாரண சட்டை வேஷ்டி அணிந்திருந்தார். மணப்பெண்ணுக்கான மேக்கப் என்கிற பெயரில் லட்சங்களை செலவழிக்காமல் அவருக்கான மேக்கப்பை அவரே போட்டு கொண்டார். தங்க வைர நகை ஷாப்பிங் மூலம் தகப்பன்களின் மொத்த ஆயுள் பணத்தையும் செலவு செய்யும் வழக்கம் இல்லாமல் இமிடேஷன் நகைகளை வெறும் சிம்பிளாக அணிந்து கொண்ட வைஷ்ணவி அவரது திருமணத்தை அற்புதமாக நடத்தி இருக்கிறார்.

பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுபக்கம் !

twitter

ADVERTISEMENT

ஆடம்பர செலவுகளில் வைஷ்ணவிக்கு உடன்பாடுகள் இல்லாததால் இப்படி ஒரு திருமணத்தை அவரே வடிவமைத்திருக்கிறார். அவரது காதலருக்கு அவருக்கும் பழைய பழக்கங்களில் நம்பிக்கை இல்லை என்பதால் குடும்பத்தார் திருப்திக்காக இந்த திருமண வைபவம் நடந்திருக்கிறது. தாலி போன்ற சடங்குகளில் இருவருக்குமே நம்பிக்கை இல்லாததால் மாலை மட்டுமே மாற்றி இருக்கின்றனர். 10 நிமிடங்களில் திருமணம் நடந்து விட்டதாக வைஷ்ணவி கூறியிருக்கிறார்.

புகைப்படம் எடுத்து கூட திருமணத்திற்கு வந்த நண்பர்களில் ஒருவர்தான் எடுத்திருக்கிறார். அதற்காகவும் லட்சக்கணக்கில் செலவு செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. இப்படி திருமண செலவை மிச்சப்படுத்திய வைஷ்ணவி அதனை எதற்காக செலவு செய்ய போகிறார் என்று அறிகையில் மேலும் ஆச்சர்யத்தில் உங்கள் விழிகள் விரியலாம். லட்சங்களில் சேமித்த பணத்தை விலங்குகள் நலத்திற்காக இருவரும் பயன்படுத்த இருக்கின்றனர்.

இப்படி 10 நிமிடங்களில் திருமணம் முடித்த வைஷ்ணவி அஞ்சன் தம்பதியினர் தென்னிந்தியா உணவோடு விருந்தை முடித்து கொண்டுள்ளனர். ஹனிமூன் சென்று கட்டிப்பிடித்து பொஸ் கொடுக்காமல் அடுத்த நாளில் இருந்தே சாதாரண நாளைப் போல தங்கள் வழக்கங்களை கடைபிடித்துள்னர். நாய்க்கு உணவளிக்கும் படியான வழக்கமான ஒரு நாளை வைஷ்ணவி தனது திருமணத்திற்கு அடுத்த நாள் கடைபிடித்திருக்கிறார்.

தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை

ADVERTISEMENT

எனக்கு தெரிந்து சீர்திருத்த திருமணம் என்றால் அது வைஷ்ணவியின் இந்த திருமணம்தான். மீதி எல்லாமே பழைய சடங்குகளை மாடர்ன் செய்த வகைகளையே சார்ந்தவை.           

திருமணம் என்கிற பெயரில் பெற்றோர்களின் ஒட்டு மொத்த உழைப்பையும் உறிஞ்சி கொள்ளும் செலவுகள் எதுவும் இல்லாமல் சிம்பிளாக திருமணம் நடத்தி இருக்கிறார் வைஷ்ணவி. அதற்காகவே அவருக்கு பாராட்டுக்களை பார்சல் செய்கிறோம்.     

என்றும் இளமையான தோற்றம் வேண்டுமா ! இந்த ஒரு மூலிகை உங்களுக்கு ஆயிரம் பலன் தரும் !  

 

ADVERTISEMENT

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

17 Jun 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text