சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. பிஞ்சு குழந்தை ஒன்றை நெஞ்சோடு சேர்த்துக் கட்டியபடி பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சிக்னல் விழுவதாக காத்துக் கொண்டிருந்தார்.
அதில் ஆச்சர்யமான விஷயம் அவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஊபர் ஈட்ஸ் (uber eats) கோட் அணிந்திருந்தார். குழந்தையோடு உணவு டெலிவரி செய்யும் அப்பெண்தான் இந்த வாரம் வைரல் சிங்கபெண்மணி யாக மாறி இருக்கிறார்.
Youtube
அந்தப் பெண்மணி பற்றி விசாரித்தபோதுதான் அவரது தைரியம் மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை நமக்கு புரிய தொடங்கியது. குழந்தையை சுமந்தபடி உணவு டெலிவரி செய்யும் பெண்ணின் பெயர் வள்ளி. இவர் பி எஸ் சி வரை படித்திருக்கிறார் என்று நம்மை எடுத்த எடுப்பிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார்.
திருமணத்துக்கு முன்பு வரை கடையில் வேலை பார்த்து வந்த வள்ளிக்கு தினகரன் என்பவருடன் சில ஆண்டுகள் முன்னர் திருமணம் நடந்தது. அதன் பின்னர் குழந்தை சாய் கிஷோர் பிறந்திருக்கிறான். கணவர் தினகரன் ஏடிஎம் மையம் ஒன்றில் காவலாளியாக இருக்கிறார்.
Youtube
தினகரனின் சம்பளம் குடும்பத்திற்கு போதாததால் தானும் வேலைக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார் வள்ளி. மற்ற எந்த வேலை கிடைத்தாலும் குழந்தையுடன் பணிபுரிய அனுமதி கிடைக்கவில்லை. காப்பகத்தில் விட வள்ளியின் மனதில் விருப்பம் இல்லை.
ஆகவே பட்டதாரி பெண்ணான வள்ளி கூகுளில் தேடியபோது கிடைத்த வேலைதான் ஊபர் ஈட்ஸ் டெலிவரி வாய்ப்பு. உடனே நிறுவனத்துடன் பேசிய வள்ளி தான் தன்னுடைய குழந்தையுடன்தான் உணவு டெலிவரி செய்வேன் என்பதையும் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார்.
Youtube
முதல் முதலில் டெலிவரி செய்த அண்ணா நகர் வீட்டில் வள்ளியை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர். நல்லவர் வாழ்த்துக்களுடன் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார் வள்ளி.
ஏன் இந்த வேலையை தேர்ந்தெடுத்தீர்கள் என்றதற்கு கொஞ்சம் கடன் இருக்கிறது. அதை அடைக்க வேண்டும். அதே போல என் மகன் என்னை போல எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது. அதற்காகவும் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
Youtube
மகனோடு வேலை செய்ய எங்கும் அனுமதிக்கவில்லை. அதனாலேயே இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன். தினமும் 45கிமீ பயணிக்க வேண்டி வரும். மதியம் 12 மணியில் இருந்து 4 மணி வரை ட்யூட்டி இருக்கும். அதன் பின்னர் வீட்டுக்கு சென்று விடுவோம்.
மீண்டும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை வேலை செய்வேன்.
நடுவில் கிடைக்கும் இடைவெளிகளில் குழந்தை சாய் கிஷோருக்கு தேவையான உணவு மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவற்றை கொடுப்பேன்.
Youtube
தினமும் ஆர்டர்களை பொறுத்து 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. இது எனக்கு திருப்தியான வேலையாக இருக்கிறது என்கிறார் வள்ளி.
ஒன்றரை வயது குழந்தை இந்த பயணங்களால் சோர்வடையாதா என்று கேட்டபோது எனக்கு அப்படி தெரியவில்லை. அவனை நானும் என்னை அவரும் பிரியாமல் இருப்பதே எங்களுக்கு நிறைவைத் தருகிறது. கூடவே அவனது முகத்தை பார்த்தபடி செல்வது எனக்கு தனி உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது என்று புன்னகைக்கிறார் வள்ளி.
உண்மையில் வாழ்வதற்கான வழிகள் இந்த பூமியெங்கும் கொட்டி கிடக்கிறது… அதனை தேட முயற்சிப்பவர் வாழ்க்கை வள்ளியின் புன்னகை போல அழகாகிறது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!அறிமுகமாகிறது
#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!