logo
ADVERTISEMENT
home / Accessories
உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள்

உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள்

சென்னை  என்று அழைக்கப்படும் மதராசபட்டினம் இன்று பல மக்களுக்கு சொந்த ஊராக அமைந்துள்ளது. இங்கு நீங்கள் பீச், பில்டர் காபி ,மசால் தோசை, சாம்பார் இட்லி,சினிமா, கல்லூரிகள் மற்றும் கடைவீதிகள் என்று அனைத்தையும் கண்டு மகிழலாம். ஆடை என்று வரும்போது சென்னை வெறும் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு மற்றும் புகழ் வாய்ந்தது அல்ல. இங்கு பல்வேறு பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட பொட்டிக் ஸ்டார்களும் உள்ளனர். ஆகையால் நீங்கள் சென்னை வரும்போது கீழ் கூறியிருக்கும் ஸ்டார்களுக்கு சென்று, அசத்தலான ஆடைகளை வாங்கி, உங்கள் ஷாப்பிங் ஆசையை தீர்த்துக் கொள்ளலாம்.

1) ஏவோலுசியோனே (Evoluzione) –

1

படம்

உங்களுக்கு உயர்தர ஆடைகள் தேவைப்பட்டால் நீங்கள் கண்டிப்பாக ஏவோலுசியோனே எனும் போட்டிகுக்கு செல்ல வேண்டும். இங்கு தருண் தஹிலியாணி, வருண் பால, சப்பியசாச்சி எனும் அனைத்து லெபெல்களும் உள்ளன. ஆகையால் இதுபோல் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை இனி நீங்கள் சென்னையிலேயே காணலாம், வாங்கலாம்!

ADVERTISEMENT

முகவரி -3, கதர் நவாஸ் கான் சாலை, ஸ்ரீரம்புரம்,
ஆயிரம் விளக்குகள்,
சென்னை – 600006

இணையதளம் – http://evoluzionestyle.com/

2) மோக்ஷா (Moksha) – 

2 282333

படம்

ADVERTISEMENT

சென்னையில் புகழ் வாய்ந்த டிசைனர் போட்டிகுகளில் மோகஷாவும் ஒன்று. இங்கு அணைத்து இந்தோ – வெஸ்டர்ன் ரகங்கள் , ட்ரெஸ் , சல்வார் கமீஸ், சூட் , குர்தாஸ் ,லெகங்கா சாரி, டிசைனர் சாரி, ஷெர்வானி என்று அனைத்து வகைகளையும் காணலாம். பெண்கள் மற்றும் ஆண்கள் , பண்டிகை நாட்கள் திருமணம் என்று அனைத்து விசேஷங்களுக்கும் மோகஷாவிற்கு சென்று தனது ஷாப்பிங்கை முடிக்கலாம். வெளிநாடுகளுக்கும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள்!

முகவரி – 44, கதீட்ரல் சாலை, கோபாலபுரம்,
சென்னை– 600086

இணையதளம் – http://mokshaaworld.com

3) அநோக்கி  (Anokhi boutique) –

3

ADVERTISEMENT

படம்

கைத்தறி திறன் நுணுக்கங்களையும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தலும் மேலும் பாரம்பரியத்தை தக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது இந்த அநோக்கி பொட்டிக் . ஜெய்ப்பூரை சேர்ந்த இதன் நிறுவனர்கள் இன்று சென்னை,டெல்லி , பெங்களூர் மற்றும் பல இடங்களில் நாடு முழுவதும் இவர்களின் பொடிக்கை உருவாக்கி உள்ளார்கள்.

கைத்தறி ஆடையில் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகளின் கலவையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றாள் அநோக்கி அதற்கு சிறந்த இடம்!

முகவரி – No.106, சாமியர்ஸ் ரோடு , R A புறம் , சென்னை, தமிழ்நாடு 600028
தொலைபேசி : 044 2431 1495

ADVERTISEMENT

இணையதளம் – www.anokhi.com

4) லேபிள் ரிது குமார் (Ritu Kumar Boutique)-

4

படம்

நீங்களும் சமந்தா, நயன்தாரா, தீபிகா படுகோன் எனும் பிரபலங்களை போல் ஆடைகள் அணிய ஆசைப்பட்டால் சென்றிடுங்கள் ரிது குமார் பொட்டிக்க்கு . ஆம்! இனி சென்னையில் நீங்கள் ரிது குமார் லேபிளை சுலபமாக ஷாப்பிங் செய்யலாம்!! உயர்தர ஆடைகள், அதற்கு ஏற்ற அணிகலன்கள், அற்புதமான வடிவமைப்புகள், பிரபலங்களின் ஆடை அணிவகுப்புகள் என்று அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கிறது. டிசைனர் லேபிள் என்றால் சும்மாவா?! 

ADVERTISEMENT

முகவரி –

4/22 ரட்லாண்ட் கேட்,
4 வது தெரு, சென்னை, தமிழ்நாடு
தொலைபேசி : 044 2833 0833

இணையதளம் –  www.labelritukumar.com

5) கல்பா திருமா (Kalpa druma) –

5

ADVERTISEMENT

படம்

உங்களுக்குள் இருக்கும் நவீன பெண்மணிகாண சிறந்த இடம் கல்பா திருமா. தனது இன்ஸ்டாகிராம் பெஜால் புகழ்பெற்ற இவர் தனது ஆடைகளில் காட்டன் மற்றும் பட்டு கைத்தறிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து வருகிறார்.டிரெண்டில் இருக்கும் அனைத்து ஆடை வகைகள் மற்றும் டிசைன்களை நீங்கள் இங்கு காணலாம். இவர்களின் அனைத்து ஆடைகளும் உங்கள் தனித்துவத்தையும் நவீனத்தையும் முன்வைக்கும்.

முகவரி

எண்: 13, 32 வது கிராஸ் ஸ்ட், திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர்,
சென்னை, தமிழ்நாடு -600090
தொலைபேசி: 044 43585151

ADVERTISEMENT

இணையதளம் – https://www.instagram.com/that.kalpadruma.girl/

6)விவேக் கருணாகரன் டிசைனர் பொட்டிக் (Vivek karunakaran boutique) – 

6

படம்

NIFT பட்டதாரியான விவேக் கருணாகரனின் பொட்டிக் உங்களுக்கு ஏற்ற பல வகை ஆடைகளை அளிக்கிறது. இவர் தென் இந்தியாவில் பிரபலங்களுடன் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் போலவுடின் பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு லேபிள்கள் உடனும் பணியாற்றியுள்ளார்.சென்னை, டெல்லி, மும்பை என அனைத்து மெட்ரோ சிட்டிகளிலும் இவரது கிலோதிங் லைனை நீங்கள் சிறந்த ஷாப்பிங் மால்களில் காணலாம். 

ADVERTISEMENT

முகவரி – ரட்லாண்ட் கேட், 4 வது தெரு, நுங்கம்பக்கம், சென்னை– 600006

இணையதளம் – http://www.vivekkarunakaran.com/

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்,சென்னையில் (chennai) வெறும் பட்டுப்புடவை , காட்டன் புடவை வகைகள் மட்டுமில்லாமல் டிசைனர் ஆடைகளுக்கு என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது என்று. ஹாப்பி ஷாப்பிங் பெண்களை!! 

பட ஆதாரம்  –  instagram 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

16 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT