பல ஆயிரம் வருடங்களுக்கான பெருமை மிகு சரித்தரத்தை தன்னுள் கொண்டுள்ள தமிழகம், இன்றும் தன்னுடைய பெருமை குன்றாமல் அதே புகழோடும், பாரம்பரியத்தோடும் நிற்கின்றது. தமிழகம் முழுவதும் நீங்கள் பார்த்து ரசிக்க மட்டுமல்லாமல், தெரிந்து வியக்க வேண்டிய விடயங்களும் ஏராளம் உண்டு. இந்த வகையில், தமிழகத்தில் பல புராதான இடங்கள் இன்றும் தன்னுடைய அடையாளம் மாறாமல் அதே பொலிவோடு காலத்தையும் கடந்து நமக்கு நம் தமிழ் முன்னோர்களின் வீரத்தையும், திறைமையும் பறை சாட்டும் வகையில் கம்பீரமாக நிற்கின்றது.
தமிழகம் முழுவதும் பல இடங்கள் இன்றும் அதற்கான புராதான சிறப்புகளோடு உலக மக்களால் வியந்து பார்க்கப் படுகின்றது. இன்று உலக அளவில் இருந்து பல கோடி மக்கள் தமிழகத்திற்கு சுற்றுலா வருகின்றார்கள். அவர்கள், இயற்க்கை சார்ந்த மற்றும் பிற சுற்றலா தளங்களுக்கு செல்வதை விட, புராதான இடங்களுக்கு சென்று தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், வீரம், என்று பல விடயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் மக்களும் இன்று தமிழகத்தின் புராதான முக்கியங்களை பற்றித் தெரிந்து கொள்ள சுற்றுலா வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் பல புராதான கோவில்கள், கோட்டைகள், நினைவு சின்னங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், சிலைகள் என்று பல உள்ளன. இவை அனைத்தும் அந்த இடத்தின் புராதான பெருமைகளையும், சரித்தரத்தையும் பிரதிபலிகின்றன. மேலும் அந்த இடங்களின் பாரம்பரிய கலைகள், விழாக்கள் என்று பல மக்களை உற்சாகப் படுத்த உள்ளது.
மரங்களுக்கும் இனி வந்தாச்சு ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ சேவை மையம்!
நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 1௦ புராதான இடங்களை பற்றித் தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்:
1. காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் என்றாலே உலக மக்கள் அனைவருக்கும் நினைவில் வரும் ஒரு விடயம், காஞ்சி பட்டு. இந்த நகரம் பட்டு புடவைகள் மற்றும் பட்டு ஆடைகளுக்கு புகழ் பெற்ற ஒரு இடம். மேலும் பட்டு மட்டுமல்ல, பல ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்களும்(historical), கோட்டைகளும் இங்கு உள்ளது. வேகவதி நதிக் கரையோரம் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் பல புராதான அடையாளங்களுக்கு சான்றாக இன்றும் திகழ்கின்றது.
பஞ்ச பூத தளங்களில் ஒன்றான நிலம், காஞ்சிபுரத்தில் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில்(historical), பஞ்ச பூத தளங்களில் ஒன்று. இது மட்டுமல்லாமல், மேலும் பல பண்டையக் கால கோவில்களும் இங்கு உள்ளது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இங்கு உள்ள பல கோவில்கள், தமிழர்களின்(historical) கலை அறிவு, திறமை, கட்டிட கலை, சிற்பக் கலை, என்று மேலும் பலவற்றில் அவர்களுக்கு இருக்கும் திறமை மற்றும் அறிவை பிரதிபலிகின்றது.
2. மகாபலிபுரம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம், மகாபலிபுரம். தமிழ்நாட்டிற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள், இங்கே செல்லாமல் திரும்புவதில்லை. இதன் கட்டிட கலை நயம் மற்றும் ஒரு பெரிய கிரானைட் பாறையை குடைந்து கோவில்வடிவமைக்கப்(historical) பட்ட விதம் என்று பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் என்று பல உள்ளது. எனினும், சரியான பராமரிப்பு இல்லாததால் கால போக்கில் பல கடல் அரிப்பால் அழிந்து விட்டது.
3. சிதம்பரம்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தது சிதம்பரம். பஞ்ச பூத தளத்தில் ஒன்றான இதில், தில்லை நடராசர் கோவில் அமைத்துள்ளது. இந்த பஞ்ச பூத தளம் ஆகாயத்தை குறிக்கின்றது. இந்த புராதான இடத்திற்கு பெருமை வாய்ந்த சரித்திரம் உள்ளது. தமிழகத்தில் உள்ள மிக பெரிய கோபுரங்கள் கொண்ட கோவில்களில்(historical) இதுவும் ஒன்று. இங்கு வருடத்திற்கு இரண்டு முறை கோலாகலமான கலைத் திருவிழா நடைபெறும். அதற்கு உலகளவில் இருந்து மக்களும், கலைஞர்களும் வருகின்றனர்.
4. மதுரை
வைகை நதிக் கரையோரம் அமைத்துள்ள இந்த நகரத்திற்கென்று தனித்துவமான சரித்திரம் உள்ளது. தூங்கா நகரம் என்று இன்றளவும் அழைக்கப் படும் மதுரை, பண்டை காலம் முதல் ஒரு பெரிய வணிக நகரமாக இருந்துள்ளது. இங்கே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகளவில் இருந்து பல வணிகர்கள் வணிகம் செய்ய வந்துள்ளனர். மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்த நகரத்திற்கு ஒரு தொன்மையான மற்றும் இன்றளவும் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. திருப்பரங்குன்றம், அழகர் கோவில்(historical), என்று மேலும் பல பிரசீதிப் பெற்ற கோவில்கள்(historical) இங்கு உள்ளன.
5. தஞ்சாவூர்
தஞ்சாவூர் என்றாலே, தஞ்சை பெரியக் கோவில்(historical) தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். இன்றளவும் பல விஞ்ஞானிகளும் , கட்டிட நிபுணர்களாலும் தீர்க்கப் பட முடியாத ஒரு புதிராக சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக் கோவில் உள்ளது. அது மட்டும் அல்லாது, இந்த கோவில் சுவற்றில் இருக்கும் கல்வெட்டுகளில் பல முக்கிய குறிப்புகள் அரசரால் பதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நெற்பயிர் விவசாயத்திற்கு புகழ் பெற்றது. இங்கு இன்றும் மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் கோட்டைகள் உள்ளது.
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!
6. வேலூர்
வேலூர் கோட்டை விஜயநகர அரசர்களால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதற்கு இன்றும் ஒரு சரித்திர முக்கியத்துவம் உள்ளது. வேலூர் கோட்டை அன்று ஆண்ட விஜயநகர அரசர்களுக்கு தலைநகரமாக இருந்தது. இதன் கட்டுமான சிறப்பும், உறுதியான கட்டமைப்பும் இன்றும் பெரிய அளவில் பேசப்படுகின்றது. தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள், இந்த கோட்டையை நிச்சயம் பார்க்க விரும்புவார்கள். செஞ்சி கோட்டை என்றும் இதனை அழைப்பார்கள்.
7. திருவண்ணாமலை
பஞ்ச பூத தளங்களில் ஒன்று, தீ. இந்த திருவண்ணாமலை அக்னியை பிரதிபலிக்கும் பஞ்ச பூத தளமாக அமைத்துள்ளது. திரு அண்ணாமலையார் கோவில்(historical) மிகவும் பெருமைவாய்ந்த புகழ் பெற்ற சிவன் தளமாகும். இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும், இன்றளவும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இந்த கோவிலுக்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரகின்றனர். இந்த புராதான இடத்தின் சிறப்பு அம்சம், ஒவ்வொரு பௌர்ணமி அன்று மக்கள் கூடி கிரிவலம் செல்வது தான். இது மட்டுமல்லாது, இந்த கோவிலின் கோபுரம் மிக உயரமாகவும் இருக்கும்.
8. கன்னியாகுமாரி
முக்கடலும் சங்கமிக்கும் ஒரு புண்ணியத்தலம், கன்னியாகுமாரி. இங்கு குடி கொண்டிருக்கும் குமாரி அம்மன், என்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மூகுத்திக்கு புகழ் பெற்றவள். இந்த திருக்கோவில்(historical) சுமார் 3௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கின்றது. கன்னியாகுமாரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மிகவும் பிரபலமான ஒன்று. இது சமீப காலத்தில் கட்டப்பட்டது என்றாலும், இதன் பெருமையும், புகழும் உலகம் அறியும். கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மிகுந்த ஒரு நகரமாக கன்யாகுமாரி இருகின்றது. இங்கு நீங்கள் சூரிய உதயத்தையும், அஸ்தமத்தையும் ஒரே இடத்தில் காணலாம். இதுவே இந்த நகரத்தின் ஒரு முக்கிய பிரதிபலிப்பாக உள்ளது.
9. செட்டிநாடு
செட்டிநாடு என்றாலே சுவையான கார சாரமான உணவு தான் நினைவிற்கு வரும். அதற்கு அடுத்தபடியாக இங்கு இருக்கும் கட்டிடங்களும் அதன் கட்டிட அமைப்புகளும். சிவகங்கை மாவட்டத்தில் அமைத்துள்ள இந்த நகரம் முக்கியத்துவம் நிறைந்த பாரம்பரியத்தையும், செல்வ செழிப்பையும் பர்திபளிகின்றது. வழக்கமான கட்டிடங்கள் போல் இல்லாமல், இங்கு பெரும்பாலான கட்டிடங்கள், சிறியதோ, பெரியதோ, விலை உயர்ந்த மரம், கற்கள் என்று கலை நயத்தோடு கட்டப்பட்டிருக்கும். மேலும் இந்த நகரத்தில் பல சிறப்பு வாய்ந்த கோவில்களும்(historical) உள்ளது.
1௦. சென்னை
பட்டியலில் இறுதியாக வந்தாலும், சென்னையை பற்றி கூற ஏராளமான புராதான விடயங்கள் உள்ளன. தலை நகரமாக இருந்தாலும், இங்கும் பல பிரசிதிப்பெற்ற இடங்கள் உள்ளது. குறிப்பாக கபாலீஸ்வரர் கோவில்(historical), துறைமுகம், கலங்கரை விளக்கம் என்று பல உள்ளன. பல்லவ மன்னரால் ஆட்சி புரியப்பட்ட இந்த சென்னை மாநகரம், தமிழகத்தின் தலைநகரமாக இயங்கி வருகின்றது. திருவள்ளுவர் கோட்டம், அருங்காட்சியகம், மரினா கடற்கரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் சுற்றுலா வருகின்றனர்.
பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த இடங்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் மேலும் பல புராதான இடங்கள் உள்ளன. அவற்றில் சில உங்களுக்காக இங்கே:
பாஞ்சாலங்குரிச்சி: தூத்துக்குடியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு சிறிய நகரம் என்றாலும் இதற்கு பல புராதான மற்றும் சரித்திர முக்கியத்துவம் உள்ளது. பல அரசர்கள் இங்கு வாழ்ந்து, கோவில்கள்(historical) மற்றும் அரண்மனைகளை கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளது.
கும்பகோணம்: இந்த நகரம் பல கோவில்களையும்(historical) புராதான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நகரத்திலும், நகரத்தை சுற்றிலும் பல நவகிராகங்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கோவில்கள் உள்ளன. குறிப்பாக திருநள்ளாறு சனிபகவான் கோவில், ஆலங்குடி குரு பகவான் கோவில், என்று பல உள்ளன.
ராமேஸ்வரம்: இங்கு பஞ்ச பூத தளத்தில் ஒன்றான நீரை குறிக்கும் ராமநாத சுவாமி கோவில்(historical) அமைத்துள்ளது. இது தமிழ்நாட்டு கடற்கரை எல்லை ஒட்டி இருக்கும் ஒரு தீவு. இங்கு பல கோடி மக்கள் வருடம் முழுவதும் வருகின்றனர். இது ஒரு கோவில் தளமாக இருந்தாலும், இங்கும் சரித்திரத்தையும், கலாசாரத்தையும், புராணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பல இடங்கள் அமைத்துள்ளது.
தனுஷ்கோடி: ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி இன்று மக்கள் வாழும் ஒரு நகரமாக இல்லை என்றாலும், சுமார் 5௦ ஆண்டுகளுக்கு முன்பு வரை சுருசுர்ப்பாக இயங்கி வந்த ஒரு முக்கிய நகரம் மற்றும் துறைமுகமாக இது விளங்குகின்றது. ஒரு பேராபத்தை விளைவித்த புயலால் இந்த நகரம் அழிந்து போயிருந்தாலும், இன்றும், தனக்கென ஒரு முக்கியத்துவத்தை தன்னுள் வைத்துக் கொண்டு உலகளாவிய புகழை பெற்று நிற்கின்றது.
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்(historical): இது மற்றுமொரு புகழ் வாய்ந்த இடமாகும். அகத்தியர் காலம் தொட்டு இந்த நகரத்திற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. இங்கு அமைத்துள்ள ஸ்ரீரங்கநாதர் கோவில் உலகளவில் புகழ் பெற்றது.
தமிழகத்தில் இது மட்டுமல்லாமல் மேலும் பல முக்கிய இடங்கள் உள்ளன. குறிப்பாக, புதுகை, புதுகோட்டை, கோயம்பத்தூர், என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் எந்த இடத்தை தேர்வு செய்து போனாலும் அங்கு நிச்சயம் உங்களுக்கு கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் பல அறிய தகவல்கள் உள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo