logo
ADVERTISEMENT
home / DIY Life Hacks
மகாலக்ஷ்மி அனுக்கிரகம் பெற மனைவிக்கு  தர வேண்டிய பரிசுகள் ! குடும்பத்தில் செல்வம் நிலைக்க சில வழிமுறைகள் !

மகாலக்ஷ்மி அனுக்கிரகம் பெற மனைவிக்கு தர வேண்டிய பரிசுகள் ! குடும்பத்தில் செல்வம் நிலைக்க சில வழிமுறைகள் !

பெண்மை என்பது போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். அதற்காகவே அவர்களை வீட்டிற்குள் பொத்தி வைத்த காலங்களும் இருக்கத்தான் செய்தன. பெண்கள் மஹாலக்ஷ்மியின் அம்சம் என்று கூறுவார்கள்.

சுப சகுனங்கள் என்பது பெண்கள் நீர்க்குடத்துடன் வருவது பூக்களுடன் வருவது என பல விஷயங்களில் பெண்கள் முதலில் வருவார்கள். அவர்களை நாம் எந்த அளவிற்கு மரியாதையாகவும் மனம் நோகாமல் நடத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த குடும்பம் உயரும்.

பிக்பாஸில் நேசமணி ? எகிற போகும் TRP !

ADVERTISEMENT

செல்வம் மட்டுமல்லாமல் கௌரவம் அந்தஸ்து நிம்மதி என பலவகைகளிலும் குடும்பம் மேலோங்க பெண்மையை மதித்தல் அவசியம். அதற்காகத்தான் அந்த காலங்களில் மனைவிகளுக்கு பரிசளிக்கும் வழக்கங்கள் இருந்து வந்தன.

பெண்களுக்கு கணவர்கள் கொடுக்கும் சில பரிசுகள் அவர்கள் இல்லத்திற்கு மஹாலக்ஷ்மியை வரவழைக்கிறது (wealth) . செல்வம் பெருகி வர இந்த முறைகளை நீங்களும் பின்பற்றலாம் என பழங்கால ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

துணி

மனைவிக்கு ஆடை வாங்கி தருவது கணவர்களின் அன்றாட வழக்கம்தான் என்றாலும் சிவப்பு நிற துணி ஆடை அல்லது ஷால்களை வாங்கி கணவர்கள் அடிக்கடி மனைவிக்கு பரிசளித்து வாருங்கள். நிச்சயம் பொருளாதார ரீதியில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.

ADVERTISEMENT

மனைவிக்கு மட்டும் அல்லாமல் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் அம்மா சகோதரி போன்றவர்களுக்கும் நீங்கள் சிவப்பு நிற துணியை பரிசளிக்கலாம். ஆனால் பரிசை வாங்குபவர் திருமணம் மாணவராக இருக்க வேண்டும்.

நகை

ஓ இது எங்களை வழக்கமான ஆணாக மாற்றும் விஷயமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆபரணம் என்பது உங்கள் மனைவிக்கு நீங்கள் தரும் பரிசு மட்டும் அல்ல அது ஒருவகையான சேமிப்பு. இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். இப்படி தங்க வெள்ளி நகைகளை பரிசளிப்பதன் மூலம் வீட்டில் மஹாலக்ஷ்மி வரவு நித்தியமாக இருக்கும். தங்கம் முடியாவிட்டால் வெள்ளியில் வாங்கி கொடுக்கலாம்.

ADVERTISEMENT

அலங்கார அன்பளிப்புகள்

கணவன் மனைவிக்கு மங்களமான பொருள்களை பரிசாக கொடுப்பது வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வழி செய்யும். குங்குமம் மஞ்சள் வளையல்கள் போன்றவை இதில் அடங்கும். கணவன் தந்ததால் காதலோடு அதனை அணியும் மனைவி மனம் நெகிழ்கிறது. பெண் மனம் மகிழ்ந்திருந்தால் அங்கே மகாலக்ஷ்மி வாசம் செய்வாள்.

ADVERTISEMENT

நேசம்

உங்கள் மனைவிக்கு மற்றவர்கள் உருவாக்கிய பொருள்களை பணம் செலவழித்து வாங்கி கொடுப்பது ஒருவகையான நேசம் என்றாலும் வெறும் பரிசுகள் தருவதோடு உறவுகள் முடிந்து விடுவதில்லை. ஆகவே உங்கள் முழுமையான நேசத்தை அவர்களிடம் காட்டுங்கள். மரியாதையாக அவர்களை நடத்துங்கள்.

த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..

ADVERTISEMENT

கீழ்கண்ட மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரத்தை தினமும் 3 முறை கூறி வழிபடுங்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்கிறது பழங்கால ஜோதிட சாஸ்திரம்.

கடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் !

தேவ்யுவாச
தேவதேவ! மஹாதேவ! த்ரிகாலஜ்ஞ! மஹேஶ்வர!
கருணாகர தேவேஶ! பக்தானுக்ரஹகாரக! ||
அஷ்டோத்தர ஶதம் லக்ஷ்ம்யாஃ ஶ்ரோதுமிச்சாமி தத்த்வதஃ ||

ADVERTISEMENT

ஈஶ்வர உவாச
தேவி! ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம் |
ஸர்வைஶ்வர்யகரம் புண்யம் ஸர்வபாப ப்ரணாஶனம் ||
ஸர்வதாரித்ர்ய ஶமனம் ஶ்ரவணாத்புக்தி முக்திதம் |
ராஜவஶ்யகரம் திவ்யம் குஹ்யாத்-குஹ்யதரம் பரம் ||
துர்லபம் ஸர்வதேவானாம் சதுஷ்ஷஷ்டி களாஸ்பதம் |
பத்மாதீனாம் வராம்தானாம் னிதீனாம் னித்யதாயகம் ||
ஸமஸ்த தேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |
கிமத்ர பஹுனோக்தேன தேவீ ப்ரத்யக்ஷதாயகம் ||
தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமனாஶ்ஶ்றுணு |
அஷ்டோத்தர ஶதஸ்யாஸ்ய மஹாலக்ஷ்மிஸ்து தேவதா ||
க்லீம் பீஜ பதமித்யுக்தம் ஶக்திஸ்து புவனேஶ்வரீ |
அம்கன்யாஸஃ கரன்யாஸஃ ஸ இத்யாதி ப்ரகீர்திதஃ ||

நன்றி 

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—-

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

29 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT