நம் அன்றாட வாழ்க்கையில் கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களில் நம்மால் கண்டுபிடிக்க முடியாத வகையில் பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. எது கலப்படம் என்ற வேறுபாட்டினை கூட நம்மால் உணர முடியாத வகையில் அவ்வளவு ‘பக்காவாக’ இந்த கலப்படம் நிகழ்த்தப்படுகிறது.
இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். உணவு (food) பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி கலப்பட பொருட்களை கண்டறிந்து வந்தாலும் இந்த பிரச்னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே கலப்படத்தைக் கண்டறியும் முறைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
பால் vs தண்ணீர்
பாலில் தண்ணீர் கலந்திருப்பதைகண்டறிய ஒரு சொட்டுப் பாலை வழவழப்பான, சாய்வான தளத்தில் விட வேண்டும். கலப்படமில்லாத பால் என்றால் அது அப்படியே நிற்கும் அல்லது மெதுவாக வழியத் தொடங்கும். பால் வழிந்து வந்த பாதையில் வெள்ளை நிறத் தடம் இருக்கும். தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்றால் தளத்தில் விட்ட உடனேயே வழிந்து விடும். வந்த இடத்தில் தடம் எதுவும் இருக்காது.
சர்க்கரை vs சாக்பீஸ் பவுடர்
தற்போது சர்க்கரை வெள்ளை நிறத்தில் (food) இருக்க சாக்பீஸ் பவுடர் அதிகமாக கலக்கப்படுகிறது. இதனை கண்டறிய ஒரு ஸ்பூன் சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போடுங்கள். சிறிது நேரத்தில் சர்க்கரை கலந்து சாக்பீஸ் பவுடர் அடியில் தங்கி இருக்கும். இதனை வைத்து கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.
பெருங்காயம் vs பிசின்
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும். கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வழவழப்பாக இருக்கும். மேலும் கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.
மிளகாய் தூள் vs செங்கல் பொடி
மிளகாய் தூளில் மரப்பொடியில் (food) செங்கல் பொடி மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். இதனை தெரிந்து கொள்ள மிளகாய் தூளை நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும், வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் அடியில் போய் தங்கி விடும்.
கடுகு vs ஆர்ஜிமோன் விதைகள்
உங்கள் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் சிறிதளவு கடுகை கையில் எடுத்துப் பார்த்தாலே கலப்படத்தை கண்டுபிடித்து விடலாம். ஆர்ஜிமோன் விதைகள் வெளிப்புறத்தில் சொரசொரப்பாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும். கலப்படமற்ற கடுகை உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறமாகவும், ஆர்ஜிமோன் விதைகள் உள்ளே வெள்ளையாகவும் இருக்கும்.
பச்சைப்பட்டாணி vs செயற்கை நிறமிகள்
பச்சைப் பட்டாணிகளில் நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற விஷயமே பலருக்கும் தெரியாது. ஆனால் பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பச்சைப் பட்டாணிகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகிறது. சிறிதளவு பச்சைப்பட்டாணிகளை எடுத்து ஒரு டம்ளரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் காத்திருக்கவும். செயற்கையான நிறமிகள் இருந்தால் அவை தண்ணீரில் கரைந்து விடும்.
அயோடின் உப்பு vs சாதாரண உப்பு
தற்போது அயோடின் உப்பு என்ற பெயரில் சாதாரண உப்பு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரண உப்பா அல்லது அயோடின் கலந்த உப்பா என்பதையும் எளிய சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம். ஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் மேற்பகுதியில் உப்பைத் தடவவும். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை விடவும். சுத்தமான அயோடின் உப்பு என்றால் உருளைக்கிழங்கு நீல நிறமாக மாறும். இல்லையெனில் அது அயோடின் கலக்காத உப்பு என அர்த்தம்.
தேன் vs சர்க்கரை
தேனில் சர்க்கரை பாகு கலந்து கலப்படம் செய்கிறார்கள். தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும். கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும். மேலும் தூய தேனை ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் விட்டால் நேரடியாக அடிப்பகத்திற்கு சென்று விடும். ஆனால் சர்க்கரை பாகு கலந்த தேனை விட்டால் அது நீரில் கரைந்துவிடும்.
மிளகு vs பப்பாளி விதை
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். கலப்படம் செய்யாத மிளகை எடுத்து கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். ஆனால் முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவையாக இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!