குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய சவால்!
அதிலும் குறிப்பாக இன்றைய இளம் அம்மாக்கள் படும் பாடு இருகின்றதே, அதனை சொன்னாலும் தீராது! அன்று போல் இல்லாமல், இன்றைய குழந்தைகள் பிறக்கும் போதே படும் சுட்டித்தனத்தோடு பிரகின்றனர் என்றே கூற வேண்டும்.
இது மட்டும் இல்லை. இன்றைய இளம் அம்மாக்களுக்கு(mothers), குழந்தைகளை பார்த்துக் கொள்வது மட்டும் வேலை இல்லை. அவர்கள் அலுவலகம் செல்ல வேண்டும், கணவன் மற்றும் வீட்டில் இருப்பவர்களை கவனித்துக் கொள்வதோடு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் செய்ய வேண்டும் என்று 24/7 ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
இதனோடு, இன்றைய அம்மாக்களுக்கு, தங்கள் குழந்தையை எப்படி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது (kids growth/parenting) என்பதை பற்றிய விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. உங்களுக்கு உதவுவதற்காக, இங்கே சில குறிப்புகள்!
1. குழந்தையின் உணவு
Pexels
முதலில் அம்மாக்கள் கவனம் செலுத்த வேண்டியது குழந்தையின் உணவு. இன்று அதிக நேரம் இல்லாததால், அனைவரும் துரித உணவுக்கும், நொறுக்கு திணிக்கும் பழகிக் கொண்டு வருகிறோம். அப்படி இல்லாமல், தினும் உங்கள் குழந்தைக்காக சிறிது முயற்சி எடுத்து போதிய போஷாக்கு உள்ள மற்றும் வீட்டில் தயார் செய்த உணவை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இது அவனது உடல், மனம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தரமான மற்றும் ஆரோகியமான உணவு அவன் எந்த நோய் தாக்கமும் இல்லாமல், சுறுசுறுப்பாக வளர உதவும்.
2. விளையாட்டு
வளரும் குழந்தைகள் அதிகம் ஓடி ஆடி விளையாட வேண்டும். ஆனால் இன்றைய அடுக்குமாடி வாழ்க்கை முறையில், இது நிச்சயம் சாத்தியம் இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக தொலைக்காட்சி முன் அதிக நேரம் ஒட்காருவது மற்றும் விடியோ கேம் ஆடுவது என்று ஆரோக்கியமற்ற வழியில் குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். அதனால், சற்று அவர்களுக்காக நேரம் ஒதுக்கி, அருகில் இருக்கும் பூங்கம், கடற்கரை என்று வெளிப்புற இடங்களுக்கு அழைத்து சென்று உடல் உழைப்பை உண்டாக்கக் கூடிய விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இது அவர்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்க உதவும்.
3. பொழுதுபோக்கு
Pexels
குழந்தைகளுக்கு ஏதாவது பொழுது போக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் சிறு வயதில் இருந்தே அதிகம் தூங்குவது, சொம்பலாவது என்று மந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனை தவிர்க்க அவர்களுக்கு விருப்பமான ஒரு சில பொழுதுபோக்கு, குறிப்பாக தோட்டம் அமைப்பது, வளர்ப்பு பிராணிகள், என்று அவர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கில் அவர்களை ஈடுபடுத்தத் வேண்டும். இது அவர்கள் மகிழ்ச்சியாகவும், மன அமைதியோடும், தெளிவான சிந்தனையோடும் வளர உதவும்.
4. படிப்பு
குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளியில் படிகின்றனரா என்பதை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தரமான மற்றும் வாழ்க்கைக்கு தேவையான கல்வியை படிக்கச் வேண்டும். புத்தகத்தில் இருப்பதை மட்டும் படித்து விட்டு, பரிச்சையில் மதிப்பெனுக்காக தயார் செய்வதை விட, தற்சார்பு மற்றும் வாழ்க்கைமுறை கல்வியை கற்றுக் கொள்வது நல்லது. இது அவர்கள் சுயமாக சிந்தித்தும், தங்களுக்குரிய தனித்திரனுக்கான ஒரு வாழ்க்கைமுறை தொழிலையும் கற்றுக் கொண்டு தனித்துவத்தோடு வாழ உதவும். அதே சமயத்தில் இன்று இருக்கும் பள்ளிகள் தரும் அழுத்தத்தோடு,, பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அழுத்தம் தராமல், மகிழ்ச்சியோடு குழந்தைகள் விரும்பி படிக்கக்கூடிய கல்வியை தர வேண்டும்.
5. தனித்திறன்
Pexels
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் நிச்சயம் இருக்கும். அப்படி உங்கள் குழந்தைக்கு இருக்கும் தனித்திறனை நீங்கள் கண்டறிய வேண்டும். உங்கள் குழந்தைக்கு இருக்கும் தனித்திறன், குறிப்பாக படம் வரைதல், இசையில் ஆர்வம், தோட்டக் கலை, மர வேலை, மண் பண்டங்கள் செய்வது என்று ஏதாவது ஒரு விடயத்தில் அவனது ஆர்வத்தை கண்டறிந்து அதில் ஈடுபடுத்துங்கள். இதனால் அவன் தன் வாழ்க்கை எதிர்காலத்திற்கு தேவைப்படும் ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
இது மட்டுமல்லாது, உங்கள் குழந்தைகளை எப்போதும் நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் யாருடன் அதிகம் நட்பு கொள்கிறார்கள், அவர்களுது நண்பர்கள் பாதுகாப்பானவர்கள் தானா, உங்கள் குழந்தை உங்களுக்கு தெரியாமல் ஏதாவது தவறு செய்கின்றானா என்று கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் உங்கள் கண்காணிப்பிலேயே குழந்தைகளை வளர்ப்பது முக்கியம். இது மட்டுமல்லாது, அவர்களுடன் அதிக தரமான நேரத்தையும் செலவிட வேண்டும்.
மேலும் படிக்க – உங்கள் குழந்தை சரியான பாதையில்தான் செல்கிறதா? இதோ உங்களுக்கான ஒரு வழிகாட்டி !
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!